10-18-2005, 04:58 AM
Vasampu Wrote:அமெரிக்காவில் கணனித்துறையில் வேலை செய்த 3000 திற்கு அதிகமான இந்தியரை சந்தேகத்தில் கைவிலங்கிட்டு வீதியால் இழுத்துச் சென்று கௌரவப்படுத்தியதற்கு ஒருவேளை வானம்பாடி நன்றி செலுத்துகின்றாரோ என்னவோ??
இந்த தகவல் உண்மையானது எனினும், 3000 என்ற எண்ணிக்கை மிகவும் மிகைப்படுத்தப்பட்ட தவறான தகவல். குறித்த ஒரு நிறுவனத்தில், அமெரிக்க குடிவரவு சட்டத்திற்கு மாறாக, தகுந்த அனுமதி இன்றி, வேலை செய்த சிலர் (40 பொறியியலாளர்கள்) கைது செய்யப்பட்டு, கைவிலங்கிடப்பட்டு, கொண்டு செல்லப்பட்டதே நடந்த சம்பவம்.
http://www.indolink.com/NRINews/Community/...y/arrestH1.html
ஆனால் இங்கு ஆசியர்கள், குறிப்பாக இந்தியர்களும், சீனர்களும், சிறந்த தொழில்களை செய்து, பெரும் பணத்துடன் இருப்பதாலும், மேலும் பலர் தமது சொந்த நிறுவனங்களை நிறுவி பெரும் பணம்படைத்தவர்களாக இருப்பதாலும், இங்கு வாழும் இந்தியர்கள், சீனர்களை பாதிக்கும் எந்த செயலும் பெரிய முக்கியத்துவம் பெறுகிறது. "இந்த கைவிலங்கிடப்பட்ட சம்பவம் இந்திய பொறியியலாளர்கள் வரவை குறைக்கும்" என்று இந்திய து}தரகம் எச்சரிக்கை விடுத்ததால் அதன் பாதிப்புகள் வணிக நிறுவனங்களுக்கு கடுமையாக இருக்கும், என்பதை புரிந்து கொண்ட அமெரிக்க அரசு, உடனேயே மேற்படி சம்பவத்துக்கு காரணமான குடிவரவு அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி, இனிமேல் இப்படி நடக்காது என்று உத்தரவாதமும் அளித்துள்ளது.

