Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வலையில் சிக்கிய அமெரிக்கா?
#7
எண்ணெய் வளத்தில் தனியிடம் வகிக்கும் ஈராக்கும் சதாமின் அரசும் தன்னம்பிக்கையும் பிடிவாதமும் கொண்டிருந்த காரணத்தினால் அமெரிக்காவின் எத்தனையோ வகையான முயற்சிகள் தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவிக்கொண்டிருந்தன.

வரலாற்று ரீதியாக போரியல் பண்பினையும் வீர நம்பிக்கையும் கொண்டிருந்த ஈராக்,எத்தனையோ பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கல்வியில் சிறந்த இடமாகவும் வணிகத்திலும் தனியிடம் பிடித்த ஒரு நாடாகவும் உலக சரித்திரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

அதே போன்று பல பழமைவாய்ந்த நாகரிக வளர்ச்சிகளுக்கான நினைவுச் சின்னங்களும்,வரலாற்று ஆதாரங்களையும் ஈராக் தன்னகத்தே கொண்டிருந்தது.

இந்த நிலையில் உலக வல்லரசுகளில் அமெரிக்காவிற்குப் பெரும் சவாலாக இருந்த ரஸ்யாவின் வீழ்ச்சியும் வளைகுடாவின் மற்றும் ஆசியாவின் பல்வேறு நலன்களில் அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகரிப்பதற்கு ஏதுவாக அமைந்தது எனக் கொள்ளலாம்.

சர்வதேச ஆட்சியாளராகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கும் ஆயுத பரிசோதனைகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிராந்தியமாக ஆசியப் பிராந்தியம் மாறி வந்தது.

துரதிஷ்ட வசமாக ஈராக்கியர்கள் குவைத் மீது தொடுத்த ஆக்கிரமிப்புப் படையெடுப்பு அமெரிக்காவிற்குக் கிடைத்த ஒரு பெரும் வாய்ப்பாக அமைந்தது.

நீதிக்குப் புறம்பான இந்த ஆக்கிரமிப்பினை எதிர்த்துப் போராடுவதாகக் கூறி பல நாடுகளைச் சேர்த்துக்கொண்டு அமெரிக்கா போர்க் களம் இறங்கியது.வெற்றியும் கண்டது.

எனினும் அந்த வெற்றியானது அமெரிக்காவின் எதிர்பார்ப்புக்களை ஈடு செய்ததாக அமைந்திருக்கவில்லை.ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடும் அதே நேரம் பல நாடுகளின் கூட்டமைப்புக்களாகவும் இருந்ததனால் ஈராக் குவைத்திலிருந்து வெளியேறிப் பின்வாங்கியதுடன் அந்த யுத்தம் ஒரு நிறைவைக் காண வேண்டியதாகிற்று.

நடைமுறை உலகில் அமெரிக்காவின் கொள்கைகளுக்கு இணங்கியவர்களைத் தவிர தன்னையும் இஸ்ரேலையும் புறக்கணிக்கும் நாடுகள் மீதான அமெரிக்காவின் போக்கும் கடுமையாக மாறிக்கொண்டு வந்து கொண்டிருந்தது.

இந்தக் காலகட்டத்தில் அவ்வப்போது எதிர்பாராத இடங்களில் சிறிய சிறிய தாக்குதல்கள் மூலம் அமெரிக்காவை பயமுறுத்திக்கொண்டு வந்தது அல்கஈதா இயக்கம்.

காலப்போக்கில் செப்டம்பர் 11ம் திகதி தாக்குதலினால் பேரதிர்ச்சிக்குள்ளான அமெரிக்கா,தாம் இதுவரை குறைவாகக் கணிப்பிட்டு வந்த அல்கஈதாவின் பலத்தினை நன்கு உணர்ந்த அதே வேளை..

உலகில் தன்னை எதிர்ப்பவர்களை அடக்கியாக வேண்டும் என்கின்ற கொள்கைப் பிரச்சனைக்குள்ளும்,அதேவேளை சரிந்து வரும் பொருளாதாரத்தினை ஈடு செய்ய தாம் அடைய வேண்டிய இலக்குகள் மீதும் தீவிர நடவடிக்கைக் கான திட்டத்தினை வகுத்தது.

அதனடிப்படையில் சர்வதேச பயங்கரவாத ஒழிப்புத் திட்டம் என்று ஒன்று அமெரிக்காவினால் பிரகடனப்படுத்தப்பட்டது.

சாதாரணமாகவே சிறிய சிறிய ஆயுதக் குழுக்களாலும் மற்றும் தீவிர கொள்கைவாதிகள், மதவாதிகள் என்று பல்வேறு தரப்பினால் தீவிரவாதத் தாக்கதல்களில் அகப்பட்டுக் சிக்கிக்கொண்டிருந்த பல உலக நாடுகளும்..

அதேவேளை எதிர்காலத்தில் தமது நாடுகளும் இலக்காகலாம் என்கின்ற முன்னெச்சரிக்கை கொண்ட பல மேலை நாடுகளும் என்று முழு உலகமும் அமெரிக்காவின் இத்திட்டத்திற்கு அமைதியாக வரவேற்பளித்தன.

வரவேற்பளிப்பதோடு நின்று விடாமல் சரிக்குச் சமனாக தோளோடு தோள் நிற்கவும் சர்வதேச அரங்கில் தமது அதிகாரத்தினையும் நிலைப்படுத்திக்கொள்ளவும் இதுவொரு நல்ல வாய்ப்பு எனக் கண்ட பிரித்தானியாவின் அரசும் சரியான முறையில் இந்தத் திட்டத்தினைப் பயன்படுத்திக்கொண்டது.

உலக அரங்கில் அமெரிக்க பிரித்தானிய கூட்டமைப்பை உலாவர வீடுவதில் தமக்கிருக்கும் ஆபத்தினை உணர்ந்து கொண்ட பிரான்ஸ் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளும் மற்றும் தூர கிழக்கு நாடுகளும் முன்னெச்சரிக்கையாக அமெரிக்காவுடன் கை கோர்த்துக்கொண்டன.

அல்கஈதாவினர் நிலை கொண்டிருக்கும் ஆப்கன்தான் தமது இலக்கு எனும் போர்வையில் இந்தப்போர் ஆரம்பிக்கப்பட்டது.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply


Messages In This Thread
[No subject] - by veera - 11-17-2003, 06:52 PM
[No subject] - by veera - 11-17-2003, 07:08 PM
[No subject] - by veera - 11-19-2003, 11:41 AM
[No subject] - by veera - 11-20-2003, 12:06 PM
[No subject] - by veera - 11-20-2003, 01:04 PM
[No subject] - by veera - 11-23-2003, 01:13 PM
[No subject] - by sOliyAn - 11-23-2003, 01:30 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)