![]() |
|
வலையில் சிக்கிய அமெரிக்கா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36) +--- Thread: வலையில் சிக்கிய அமெரிக்கா? (/showthread.php?tid=7793) |
வலையில் சிக்கிய அமெரி - veera - 11-17-2003 செப்டம்பர் 11 என்றாலே யாரும் மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது.ஒஸாமா பின் லேடனின் அல் கஈதா இயக்கம் அமெரிக்க மக்களுக்கு மரண பயத்தினை உருவாக்கிய அந்த நாள் முதல்..சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு எனும் அமெரிக்காவின் கூச்சல் அதிகரிக்க இது வழி கோணியது. தம்மை எதிர்ப்பவர்களின் பலம் அதிகரிக்கக்கூடாது என்பதில் அமெரிக்காவின் அடிப்படைப் பயம் தான் இதற்கு ஊன்று கோலாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் மேலைத்தேய நாடுகளைப் பொறுத்தவரை அமெரிக்காவுடனான பொருளாதாரப் போட்டிகளில் அவர்கள் நாட்டம் அதிகமாக இருப்பதனால் தூர கிழக்கை நோக்கிய பயம் தான் அமெரிக்காவுக்கு அதிகம் இருக்கிறது. அதன் ஆரம்பம் கியூபாவாகவும் மறுபுறம் ரஸ்யாவாக இருந்தாலும் இடையிலிருக்கும் மத்திய கிழக்குப் பிரதேசம் தான் அமெரிக்காவின் அதி தீவிர கண்காணிப்புக்குட்படும் பிரதேசம். மத்திய கிழக்கு மீது அமெரிக்காவின் நலன்விரும்பி ப் போர்வை ஏன் போர்த்தப்படுகிறது என்பதனை அறியாதவர்கள் யாரும் இருக்கப்போவதில்லை.இருந்தாலும் அமெரிக்காவின் அனைத்துத் திட்டங்களுக்கும் இருக்கும் எதிரிகளைப் பற்றி நியுயோர்க் தாக்குதல் வரை உலகம் சரியான முறையில் உணர வில்லை எனலாம். பின் லேடன்...... என்பது அமெரிக்காவின் அக்கறையாக இருந்தாலும்,அதற்கு முன்னர் அத்திவாரங்களை அசைப்பது தான் அமெரிக்காவின் கட்டாயத் தேவை. இந்தத் தேவைகளிற்காக அரேபிய மண்ணில் அமெரிக்கா தனது அகலக் காலையூன்றுவதற்கு எடுக்கும் மாபெரும் திட்டங்களில் ஒன்றுதான் ஈராக்கிய ஆக்கிரமிப்பு ! ஆரம்பத்தில் இதுவொரு சமாதான நடவடிக்கையாக உலகிற்கு சித்தரிக்கப்பட்டது.இருந்தாலும் பிரிட்டன்,இத்தாலி,ஸ்பெயின்,அவுஸ்திரேலிய நாட்டுப் பிரதமர்களைத் தவிர அந்நாட்டு மக்களோ உலகமோ நம்பியதாகத் தெரியவில்லை. சரி தலைப்பிற்குள் வருவோம்... ஈராக்கிய யுத்தத்தில் அமெரிக்க,பிரித்தானிய கூட்டுப்படைகள் <b>சதாமின் அரச படைகளை வென்றனவா..? அல்லது விரிக்கப்பட்ட தந்திர வலைக்குள் அமெரிக்கா வீழ்ந்துள்ளதா?</b> இன்று இப்படியாக ஒரு கேள்வி எழுந்துள்ளது... இதைப்பற்றி அரசியல் நாட்டமுள்ள நமது கருத்தாளர்கள் என்ன நினைக்கின்றீர்கள்? Re: வலையில் சிக்கிய அமெர - AJeevan - 11-17-2003 <!--QuoteBegin-veera+-->QUOTE(veera)<!--QuoteEBegin-->செப்டம்பர் 11 என்றாலே யாரும் மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது.ஒஸாமா பின் லேடனின் அல் கஈதா இயக்கம் அமெரிக்க மக்களுக்கு மரண பயத்தினை உருவாக்கிய அந்த நாள் முதல்..சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு எனும் அமெரிக்காவின் கூச்சல் அதிகரிக்க இது வழி கோணியது. தம்மை எதிர்ப்பவர்களின் பலம் அதிகரிக்கக்கூடாது என்பதில் அமெரிக்காவின் அடிப்படைப் பயம் தான் இதற்கு ஊன்று கோலாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் மேலைத்தேய நாடுகளைப் பொறுத்தவரை அமெரிக்காவுடனான பொருளாதாரப் போட்டிகளில் அவர்கள் நாட்டம் அதிகமாக இருப்பதனால் தூர கிழக்கை நோக்கிய பயம் தான் அமெரிக்காவுக்கு அதிகம் இருக்கிறது. அதன் ஆரம்பம் கியூபாவாகவும் மறுபுறம் ரஸ்யாவாக இருந்தாலும் இடையிலிருக்கும் மத்திய கிழக்குப் பிரதேசம் தான் அமெரிக்காவின் அதி தீவிர கண்காணிப்புக்குட்படும் பிரதேசம். மத்திய கிழக்கு மீது அமெரிக்காவின் நலன்விரும்பி ப் போர்வை ஏன் போர்த்தப்படுகிறது என்பதனை அறியாதவர்கள் யாரும் இருக்கப்போவதில்லை.இருந்தாலும் அமெரிக்காவின் அனைத்துத் திட்டங்களுக்கும் இருக்கும் எதிரிகளைப் பற்றி நியுயோர்க் தாக்குதல் வரை உலகம் சரியான முறையில் உணர வில்லை எனலாம். பின் லேடன்...... என்பது அமெரிக்காவின் அக்கறையாக இருந்தாலும்,அதற்கு முன்னர் அத்திவாரங்களை அசைப்பது தான் அமெரிக்காவின் கட்டாயத் தேவை. இந்தத் தேவைகளிற்காக அரேபிய மண்ணில் அமெரிக்கா தனது அகலக் காலையூன்றுவதற்கு எடுக்கும் மாபெரும் திட்டங்களில் ஒன்றுதான் ஈராக்கிய ஆக்கிரமிப்பு ! ஆரம்பத்தில் இதுவொரு சமாதான நடவடிக்கையாக உலகிற்கு சித்தரிக்கப்பட்டது.இருந்தாலும் பிரிட்டன்,இத்தாலி,ஸ்பெயின்,அவுஸ்திரேலிய நாட்டுப் பிரதமர்களைத் தவிர அந்நாட்டு மக்களோ உலகமோ நம்பியதாகத் தெரியவில்லை. சரி தலைப்பிற்குள் வருவோம்... ஈராக்கிய யுத்தத்தில் அமெரிக்க,பிரித்தானிய கூட்டுப்படைகள் <b>சதாமின் அரச படைகளை வென்றனவா..? அல்லது விரிக்கப்பட்ட தந்திர வலைக்குள் அமெரிக்கா வீழ்ந்துள்ளதா?</b> இன்று இப்படியாக ஒரு கேள்வி எழுந்துள்ளது... இதைப்பற்றி அரசியல் நாட்டமுள்ள நமது கருத்தாளர்கள் என்ன நினைக்கின்றீர்கள்?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> பிள்ளை அழுதால்தான் தொட்டிலை ஆட்ட முடியும். குண்டு வெடிப்புகள் நடந்தால்தான்,உலக கவனத்தை திசை திருப்பிக் கொண்டு,தமது வேலைகளை அரவமில்லாமல் நடத்த முடியும். தேவையானவர்களுக்கு தேவையானது நடக்கிறது. - veera - 11-17-2003 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> பிள்ளை அழுதால்தான் தொட்டிலை ஆட்ட முடியும். குண்டு வெடிப்புகள் நடந்தால்தான்,உலக கவனத்தை திசை திருப்பிக் கொண்டு,தமது வேலைகளை அரவமில்லாமல் நடத்த முடியும். தேவையானவர்களுக்கு தேவையானது நடக்கிறது. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> வித்தியாசமான பார்வை.. அப்படியானால் தமது சுயநல அரசியலை அரங்கேற்றுவதற்காக குண்டர்களை ஏவிவிடும் இந்திய,இலங்கை அரசியல் வாதிகளைப் போலவே புஷ்,பிளேயர் காட்சி தருகிறார்கள். ஏவிவிடப்படும் குண்டர்களா இந்த (அப்பாவித்தனமாக இறப்பை நாடும்) இராணுவ சிப்பாய்கள்? இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகு தமது வரலாற்றிலே அதிக எண்ணிக்கையான இராணுவத்தினரை (19 பேர் ) இத்தாலி இழந்துள்ளது. ஆக இங்கு நடப்பதன் விளைவுகள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள். - veera - 11-17-2003 மத்திய கிழக்கு பிராந்தியத்தினைப் பொறுத்தவரை அமெரிக்காவின் கண்காணிப்புப் பட்டியலுக்குள் அடங்கும் நாடுகளாக ஈராக்,ஈரான்,சிரியா, போன்ற நாடுகளும் ஆதரவு நாடுகளாக சவுதி அரேபியா, ஜோர்டன் போன்றவையும் நடுநிலையில் இருக்கும் நாடுகள் சிலவும் இருக்கத்தான் செய்கின்றன. இஸ்ரேல் எனும் ஆயுதம் மூலம் பிராந்தியத்தில் தாம் நினைப்பவற்றையெல்லாம் சாதிக்க நினைக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு என்றோ ஒருநாள் இஸ்ரேல் உலைவைக்கப்போவதும் உறுதி. எனினும் பாலஸ்தீனப் பிரச்சினையென்று ஒன்று இருக்கும் வரை அமெரிக்காவிற்கு இதுவொரு தலையிடியாக அமையப்போவதில்லை. ஆனாலும் அரேபிய மண்ணில் தோன்றும் ஒவ்வொரு போராட்டக்காரனும் தமது முதல் எதிரியாக இஸ்ரேலையை எண்ணிக்கொள்கிறார்கள். இது வரலாற்று ரீதியாக அவர்கள் மத்தியில் இருக்கும் யூத - இஸ்லாமிய பிரிவினைகள்.யூத இனத்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இப்படியான தீராத வரலாற்றுப் பகை தொடர்வதற்கு காரணம் என்ன? மத்திய கிழக்குப் பிராந்திய அமைதியின்மையின் முக்கியமான ஒரு பகுதி இது.எனவே இதுபற்றி அறிந்தவர்கள் உங்கள் கருத்துக்களையும் முன்வையுங்கள். - veera - 11-19-2003 பழக்க வழக்கங்கள் மற்றும் வரலாற்றுப் பண்புகளினால் மிக நெருங்கிய தொடர்பும் அதே நேரம் சமய விவகாரங்களில் இறுக்கமான முரண்பாடுகளும் கொண்ட இரண்டு பிரிவினராகவே இவர்கள் வாழ்ந்து வந்தனர். கிறிஸ்தவ மதத்தில் மிக ஆழமான நம்பிக்கையும் கடவுள் பக்தியும் கொண்ட யூதர்கள் கிறிஸ்துவுக்குப் பின்னர் ஒரு இறைதூதர் வருகையையையும் எதிர்பார்த்து இருந்தனர். எனினும் வருபவர் தமது இனத்திற்குள் இருந்து அல்லது தமது சமுதாயத்திற்குள் இருந்துதான் வரவேண்டும் அல்லது வருவார் என்ற அதி தீவிர நம்பிக்கையில் வாழ்ந்து வந்த ஒரு சமுதாயமாகவும் பின்னர் இந்த விவகாரத்தில் ஒரு சமூகப்பகையை இன ரீதியாக வளர்த்துக்கொண்ட இரண்டு சமயத்தினராகவும் யூதர்களும் - இஸ்லாமியர்களும் வரலாற்றில் காணப்படுகின்றனர். இந்த முரண்பாடுகளின் வளர்ச்சி ஆயிரக்கணக்கான வருடங்களைத் தாண்டியுள்ள நிலையிலும் ஒருவர் மதத்திற்கு மற்றவர் எதிரியாகத் தோன்றும் பழக்க வழக்கம் பாரம்பரிய மத்திய கிழக்கு மண்ணில் ஓய்ந்ததாகத் தெரியவில்லை. உலகின் ஒவ்வொரு பாகத்திலும்,குறிப்பாக வல்லரசான அமெரிக்காவின் அடி மட்டம் முதல் உயர் பதவிகள்,விஞ்ஞானத்துறை என அனைத்து விடயங்களிலும் மிக முக்கிய இடங்களைத் தக்க வைத்துக்கொண்டிருக்கும் யூதர்களே தமது மதத்தின் முதல் எதிரியென இஸ்லாமியர்கள் கொள்கின்றனர். இந்த அடி்ப்படையின் வேரூன்றல்தான் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு. மத்திய கிழக்கில் இஸ்ரேலின் புவியியல் நிலையும் அதன் வெளிநாட்டு,பிராந்தியக் கொள்கைகளும் அண்டை நாடுகளால் ஜீரணிக்கவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்றாகும். தொடரும் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீள பாலஸ்தீனத்தில் ஒரு விடுதலை இயக்கம் (PLO) போராடியது.சர்வதேச ரீதியில் அடக்கு முறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இந்த விடுதலை இயக்கத்தின் வரவும் பின்னர் ஹமாஸ் ஹிஸ்புல்லா போன்ற விடுதலை இயக்கங்களும் பிராந்திய வரலாற்றில் முக்கயத்துவம் பெறுகின்றன. சுற்று வட்டாரத்தில் காணப்படும் சகல நாடுகளுக்கும் இஸ்ரேல் ஒரு தலையிடியாக இருந்தது. அவையனைத்தையும் விட பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதுதான் மத்திய கிழக்கின் மீதான அமெரிக்க ஈடுபாடு. - veera - 11-20-2003 வல்லமை கொண்ட நாடுகள் பலவீனமான ஆனால் வளமுள்ள நாடுகளைக் குறிவைத்து சுரண்டி வரும் சரித்திரம் உலகறிந்தது. எண்ணெய்வளம் மிக்க வளைகுடாப் பிராந்தியத்தில் தமது நிலையைப் பலப்படுத்த அமெரிக்காவிற்கு இரண்டுவகையான வாய்ப்புக்கள். ஒன்று சவுதி அரேபியாவின் நட்பு.மற்றது இஸ்ரேலின் பலம். அண்டை நாடுகளையெல்லாம் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இஸ்ரேலின் பக்க பலமாக உலக அரங்கில் நிலைத்திருக்கும் அமெரிக்கா அத்திய கிழக்கின் சமாதான நேசன் எனும் பெயரில் எதைச் செய்தாலும் அதன் உள்ளர்த்தத்தினைப் புரியாதவர்களாகவோ தெரியாதவர்களாகவோ அரேபிய நாடுகள் இல்லை. எனினும் அமெரிக்காவின் இப்போக்கிற்கு சாய்ந்து கொடுக்காமல் வாழும் நாடுகளும் மிகக் குறைவாகவே இருக்கின்றது. தமது நாட்டின் பொருளாதார மற்றும் சர்வதேச அரங்கில் இழுபறியற்ற நிலையைத் தக்கவைக்கும் நோக்குடனும் சில நாடுகள் சமாளித்து நடக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றன.இந்த நாடுகளின் தலைவர்கள் கடந்த காலங்களில் தமது உரைகளின் போது இவற்றினைத் தெளிவு படுத்தியுமுள்ளனர். இருந்தாலும் இவை யாவற்றிற்கும் எதிராக போராடும் பாலஸ்தீனம்,மற்றும் பெரும் எதிர்ப்பினை வெளிக்காட்டினாலும் பின்னர் அடங்கிப் போன லிபியா தவிர,அமெரிக்காவின் கொள்கை எதிர்ப்பு விவகாரத்தில் திடமான போக்கினைக் கடைப்பிடித்தது ஈராக்..அதனைத் தொடர்ந்து ஆப்கானின் தலிபான் ஆட்சியாளர்கள். எனினும் காலப்போக்கில் தலிபான் ஆட்சியாளர்கள் - பின்லேடனின் அல்கஈதாவடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பதனால் முல்லா ஒமரை விட பின்லேடனே இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் பெறுகிறார். ஒரு தசாப்தகால ஈரானுடனான யுத்தத்தின் போது ஈராக் அமெரிக்காவினால் உற்சாகப்படுத்தப்பட்டிருந்தது.தீவிர இஸ்லாமிய வாதக் கொள்கைகளை அமுல்படுத்திவந்த ஈரானுடனான எல்லைப் பிரச்சனை சர்வதேச தலையீட்டாலேயே பூகம்பமானதென்பது அனைவரும் அறிந்தது தான். எனினும் எல்லைப் பிரச்சனையை ஏதோ ஒரு வகையில் நிறுத்திக்கொள்ளவே.. தமது வியாபார நலன்களில் மற்றும் தமது எதிர்காலத் திட்டங்களில் அமெரிக்காவும் சில மேலை நாடுகளும் எதிர்பாராத வீழ்ச்சியை அல்லது எதிர்கால சரிவை அவதானித்தனர். ஒரு பக்கத்தில் ஈரான் சாய வேண்டும்,அல்லது ஈராக் சாய வேண்டும். ஆயத்துல்லா கொமெய்னியின் ஈரான் விட்டுக்கொடுக்கவில்லை..எனவே ஊட்டி வளர்க்கப்பட்ட ஈராக் பக்கம் கவனம் திருப்பப்பட்டிருந்தது. - veera - 11-20-2003 எண்ணெய் வளத்தில் தனியிடம் வகிக்கும் ஈராக்கும் சதாமின் அரசும் தன்னம்பிக்கையும் பிடிவாதமும் கொண்டிருந்த காரணத்தினால் அமெரிக்காவின் எத்தனையோ வகையான முயற்சிகள் தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவிக்கொண்டிருந்தன. வரலாற்று ரீதியாக போரியல் பண்பினையும் வீர நம்பிக்கையும் கொண்டிருந்த ஈராக்,எத்தனையோ பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கல்வியில் சிறந்த இடமாகவும் வணிகத்திலும் தனியிடம் பிடித்த ஒரு நாடாகவும் உலக சரித்திரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. அதே போன்று பல பழமைவாய்ந்த நாகரிக வளர்ச்சிகளுக்கான நினைவுச் சின்னங்களும்,வரலாற்று ஆதாரங்களையும் ஈராக் தன்னகத்தே கொண்டிருந்தது. இந்த நிலையில் உலக வல்லரசுகளில் அமெரிக்காவிற்குப் பெரும் சவாலாக இருந்த ரஸ்யாவின் வீழ்ச்சியும் வளைகுடாவின் மற்றும் ஆசியாவின் பல்வேறு நலன்களில் அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகரிப்பதற்கு ஏதுவாக அமைந்தது எனக் கொள்ளலாம். சர்வதேச ஆட்சியாளராகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கும் ஆயுத பரிசோதனைகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிராந்தியமாக ஆசியப் பிராந்தியம் மாறி வந்தது. துரதிஷ்ட வசமாக ஈராக்கியர்கள் குவைத் மீது தொடுத்த ஆக்கிரமிப்புப் படையெடுப்பு அமெரிக்காவிற்குக் கிடைத்த ஒரு பெரும் வாய்ப்பாக அமைந்தது. நீதிக்குப் புறம்பான இந்த ஆக்கிரமிப்பினை எதிர்த்துப் போராடுவதாகக் கூறி பல நாடுகளைச் சேர்த்துக்கொண்டு அமெரிக்கா போர்க் களம் இறங்கியது.வெற்றியும் கண்டது. எனினும் அந்த வெற்றியானது அமெரிக்காவின் எதிர்பார்ப்புக்களை ஈடு செய்ததாக அமைந்திருக்கவில்லை.ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடும் அதே நேரம் பல நாடுகளின் கூட்டமைப்புக்களாகவும் இருந்ததனால் ஈராக் குவைத்திலிருந்து வெளியேறிப் பின்வாங்கியதுடன் அந்த யுத்தம் ஒரு நிறைவைக் காண வேண்டியதாகிற்று. நடைமுறை உலகில் அமெரிக்காவின் கொள்கைகளுக்கு இணங்கியவர்களைத் தவிர தன்னையும் இஸ்ரேலையும் புறக்கணிக்கும் நாடுகள் மீதான அமெரிக்காவின் போக்கும் கடுமையாக மாறிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில் அவ்வப்போது எதிர்பாராத இடங்களில் சிறிய சிறிய தாக்குதல்கள் மூலம் அமெரிக்காவை பயமுறுத்திக்கொண்டு வந்தது அல்கஈதா இயக்கம். காலப்போக்கில் செப்டம்பர் 11ம் திகதி தாக்குதலினால் பேரதிர்ச்சிக்குள்ளான அமெரிக்கா,தாம் இதுவரை குறைவாகக் கணிப்பிட்டு வந்த அல்கஈதாவின் பலத்தினை நன்கு உணர்ந்த அதே வேளை.. உலகில் தன்னை எதிர்ப்பவர்களை அடக்கியாக வேண்டும் என்கின்ற கொள்கைப் பிரச்சனைக்குள்ளும்,அதேவேளை சரிந்து வரும் பொருளாதாரத்தினை ஈடு செய்ய தாம் அடைய வேண்டிய இலக்குகள் மீதும் தீவிர நடவடிக்கைக் கான திட்டத்தினை வகுத்தது. அதனடிப்படையில் சர்வதேச பயங்கரவாத ஒழிப்புத் திட்டம் என்று ஒன்று அமெரிக்காவினால் பிரகடனப்படுத்தப்பட்டது. சாதாரணமாகவே சிறிய சிறிய ஆயுதக் குழுக்களாலும் மற்றும் தீவிர கொள்கைவாதிகள், மதவாதிகள் என்று பல்வேறு தரப்பினால் தீவிரவாதத் தாக்கதல்களில் அகப்பட்டுக் சிக்கிக்கொண்டிருந்த பல உலக நாடுகளும்.. அதேவேளை எதிர்காலத்தில் தமது நாடுகளும் இலக்காகலாம் என்கின்ற முன்னெச்சரிக்கை கொண்ட பல மேலை நாடுகளும் என்று முழு உலகமும் அமெரிக்காவின் இத்திட்டத்திற்கு அமைதியாக வரவேற்பளித்தன. வரவேற்பளிப்பதோடு நின்று விடாமல் சரிக்குச் சமனாக தோளோடு தோள் நிற்கவும் சர்வதேச அரங்கில் தமது அதிகாரத்தினையும் நிலைப்படுத்திக்கொள்ளவும் இதுவொரு நல்ல வாய்ப்பு எனக் கண்ட பிரித்தானியாவின் அரசும் சரியான முறையில் இந்தத் திட்டத்தினைப் பயன்படுத்திக்கொண்டது. உலக அரங்கில் அமெரிக்க பிரித்தானிய கூட்டமைப்பை உலாவர வீடுவதில் தமக்கிருக்கும் ஆபத்தினை உணர்ந்து கொண்ட பிரான்ஸ் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளும் மற்றும் தூர கிழக்கு நாடுகளும் முன்னெச்சரிக்கையாக அமெரிக்காவுடன் கை கோர்த்துக்கொண்டன. அல்கஈதாவினர் நிலை கொண்டிருக்கும் ஆப்கன்தான் தமது இலக்கு எனும் போர்வையில் இந்தப்போர் ஆரம்பிக்கப்பட்டது. - veera - 11-23-2003 இப்போது இந்தப்போரின் நிலை எங்கிருக்கிறது? உலகின் நிலையறிந்த அனைவரும் அங்கலாய்த்துக்கொண்டிருக்கும் விடயமாகவே இது இருக்கிறது. எனினும் ஈராக்கிய மண்ணில் தற்போது அமெரிக்கப் படைகள் வெற்றியைக் கண்டுவிட்டனவா என்பது ஒரு பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்குடன் அமெரிக்கா போர் தொடுக்கிறது என்ற போது இறுதியாக முன்னாள் ஈராக்கியத் தலைவர் சதாம் அவர்கள்: <b>நிலத்தில் நீரில் ஆகாயத்தில்...என்று எல்லா இடத்திலும் போர் தொடரும் </b>என்று கூறியிருந்தார். ஈராக்கில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்கா சந்தித்து வரும் தொடர் இழப்புக்கள் இன்று எதைச் சுட்டிக்காட்டுகின்றனவாயினும் ஏதோ ஒரு வகையான யுத்த தந்திரத்திற்குள் அமெரிக்கா சிக்கிவிட்டதா என்கின்ற ஒரு கேள்வி எழுகின்றது. இதுதான் உண்மையா?என்பதைப் பொறுத்திருந்தது தான் பார்க்க வேண்டும். - sOliyAn - 11-23-2003 பலவிசயங்களை அலசியுள்ளீர்கள். தொடர்ந்தும் தாருங்கள். நன்றி வீரா. |