11-20-2003, 12:33 PM
முப்பது வருடம் குட்டும் உதையும் பட்டதும் அவமானப்பட்டதும் தான் கண்டது. இப்போது மதிப்புடனாவது தலைநிமிர்ந்து நடக்கலாம். சுடுகாட்டைத் திருத்தலாம் வந்து சேருங்கள். பிரச்சனை என்று தானே கூடுகலைந்து அகதியாய்ப் போனோம் இப்போது அந்த மண்ணிற்கு வந்து உங்களால் இயன்றதைச் செய்து முன்னேற்றப்பார்ததால் என்ன? பழைய கதைகளை திரும்பத்திரும்பச் சொல்லி என்ன பிரயோசனம். ஒரு சில வசதி படைத்த அரசியல விபரீதங்களால் தான் இளைஞர்கள் இரத்தம் சிந்தவேண்டி வந்தது. ஆயினும் அவர்களைப் போல ஓடி ஒழிந்து பக்கப்பாட்டு பாடிக் கொண்டு தமது வசதிகளையும் தமது குடும்பங்களையும் காப்பாற்றினார்கள். ஆனால் இளைஞர்கள் சாதித்துக் காட்டிவிட்டார்கள். இன்னும் ஏன் தயக்கம். உங்கள் விடுமுறைக்கு தமிழீழம் போய் உங்களால் முடிந்ததைச் செய்து விட்டு வாருங்கள். மீண்டும் நாம் எழலாம். நாம் தமிழர் எம்மை நாமே வீழ்த்தினால் ஒழிய நாம் வீழ மாட்டோம். விழ விழ எழுவோம். நம்மை நாமே எழவைப்போம். கவலையே வேண்டாம். உலகமே போற்றும் ஒரு உத்தம தீர்க தரிசனம் கொண்ட தலைவனின் கீழ் இருக்கின்றோம். முன்னால செல்ல முயற்சியுங்கள். அடிக்கடி ரிவர்ஸ் எடுக்கின்றீர்கள். ஒன்றுக்கும உதவாத செயல்.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

