10-16-2005, 08:09 PM
Vaanampaadi Wrote:உண்மையில் இவர் ஒரு புரட்சித்தாய்தான்.....ஏனென்றால் இவர் உலகைப்பற்றி யோசிக்காமல் தன் இறந்த மகனைப்பற்றியே யோசித்துள்ளார்.....................
அத விடுங்க .............அது சர்வசாதார்ணம் ..........................அந்த ஒரு பெண்மணிக்காக
இவ்வுலகையே இருட்டில் வாழ விட முடியுமா?
என்ன குருவிகள் விசயம் அறிந்துதான் கதைக்குறீர்களோ?
உதாரணத்திற்க்கு ஒன்று > இன்று அமெரிக்கா இல்லையெனில் இந்த ஐரொப்பாவே இல்லை எனலாம்>
அவர் தன்ர மகனைப் பற்றி மட்டுமல்ல...தன் பிள்ளை போல...இதர அமெரிக்கப் படை வீரர்களை பற்றியும் தான் கவலைப்படுகிறார்..! சதாமை அகற்ற அமெரிக்காவுக்கு ஆக்கிரமிப்புத்தான் வழியல்ல... அதை செய்வதாயின் குவைத்தை ஈராக் ஆக்கிரமித்த போதே செய்து முடிச்சிருக்கலாம்..! ஆனால் அமெரிக்க ஆக்கிரமிப்பு உங்களையும் தான் இலக்கு வைச்சிருக்கு...ஈரான் இந்தியா சீனா மற்றும் இதர தீவிர இஸ்லாமிய நாடுகளை...!
அதுமட்டுமன்றி..வியட்நாம் விடுதலைக்கு உதவியதில்..அமெரிக்கப் படைவீரர்களின் உறவினர்கள் செய்த எதிர்ப்புப் போராட்டங்கள் முக்கிய பங்களித்துள்ளன..! அந்தவகையில் ஈராக்கில் நிகழும் அப்பாவிகளின் உயிர் இழப்புக்களைத் தடுக்க இப்பெண்மணியின் போராட்டம் உதவலாம்..அவரை அறியாமலே அவர் அதுக்கு உதவலாம்..!
ஒரு காலத்தில் ரஷ்சிய தயவில் வாழ்ந்த இந்தியா இன்று சூழ வர எதிரிகளை தனதாக்கி வாழ்ந்து வருகிறது...அதுவும் வல்லரசுக் கனவோடு..! ஒரு கால முழு எதிரியான அமெரிக்கா...ஆப்கானிஸ்தான் வழியும் பாகிஸ்தான் வழியும் எல்லை வரை வந்து விட்டது... தெற்கே இலங்கையூடு செய்த வான் கடல்வழி ஒப்பந்தங்கள் மூலம் வந்துவிட்டது.. இன்னும் நெருங்கி வர நினைக்கிறது...! சீனாவை கவனிக்காது விட்டடிப்பது போல இருக்கும் அமெரிக்கா..இந்தியாவை வல்லரசாக அனுமதிக்காது..! அனுமதித்தால்..அது அமெரிக்க எம்பயரின் வீழ்ச்சிக்கே வழி வகுக்கும்..! அது அமெரிக்காவுக்கு நன்றே தெரியும்..! ஏற்கனவே ரஷ்சியா..சீனா இந்தியா என்று முக்கூட்டை பிரேரரித்த பின்னும் அமெரிக்கா விடுப்பு பார்த்திட்டு இருக்காது..! மீண்டும் ஒரு சோவியத் வருவதை அமெரிக்கா விரும்பாது...! இது சிம்பிள்..லொஜிக்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

