10-15-2005, 04:56 PM
மனிதனே !
அன்றாடங்களின் புழுதியை
உதறி விட்டு
மேலே பற !
பறப்பது என்பது
மேலே உயர்வது
பறப்பது என்பது
விட்டு விடுதலையாவது
பூமி நீ கருவாகும்
முட்டைதான்
அதை உடைத்துக் கொண்டு
வெளியே வா !
சூரியப் பூவின் மகரந்தம்
உன் மேல்
படியட்டும் !
என் சாண்
வயிற்றை விட்டு
மேலே வா !
நட்சத்திர மலர்களின் தேன்
உன் சுவைக்காய்
காத்திருக்கிறது !
உன்
பந்தக் கூண்டுகளை
உடைத்தெறி
உன்
கற்பனைகளை பறக்க விடு
வானமும் அதற்கு
எல்லை இல்லையே !
உன்
மனதினை உயர விடு
நீ
மேலே உயர உயர
மண்ணின் பேதங்கள்
மறையக் காண்பாய்
நீ பற
உன் இலக்கை நோக்கி.........
அன்றாடங்களின் புழுதியை
உதறி விட்டு
மேலே பற !
பறப்பது என்பது
மேலே உயர்வது
பறப்பது என்பது
விட்டு விடுதலையாவது
பூமி நீ கருவாகும்
முட்டைதான்
அதை உடைத்துக் கொண்டு
வெளியே வா !
சூரியப் பூவின் மகரந்தம்
உன் மேல்
படியட்டும் !
என் சாண்
வயிற்றை விட்டு
மேலே வா !
நட்சத்திர மலர்களின் தேன்
உன் சுவைக்காய்
காத்திருக்கிறது !
உன்
பந்தக் கூண்டுகளை
உடைத்தெறி
உன்
கற்பனைகளை பறக்க விடு
வானமும் அதற்கு
எல்லை இல்லையே !
உன்
மனதினை உயர விடு
நீ
மேலே உயர உயர
மண்ணின் பேதங்கள்
மறையக் காண்பாய்
நீ பற
உன் இலக்கை நோக்கி.........
....

