10-14-2005, 11:19 PM
<b>அரச பயங்கரவாதத்தின் வலை விரிப்புக்கள் </b><i>நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்</i>
தமிழ் ஊடகத்துறை இன்று பாரியதொரு சவாலையும் நெருக்கடியையும் எதிர்நோக்கியுள்ளது. தமிழ்த் தேசியத்திற்காக, தமிழீழ விடுதலைக்காக சுய சிந்தனைகளை, மக்களின் கருத்துக்களை, உணர்வுகளை ஊடகங்களின் வாயிலாக வெளிப்படுத்த முடியாதளவிற்கு இன்று நிலைமை மோசமடைந்திருக்கிறது. அதை விட செய்திகள் மக்களிடையே சென்றடைவதற்குக் கூட முடியாத துர்ப்பாக்கிய நிலை. இது சிறிலங்கா அரசின் ஜனநாயகத்தின் பண்புகள் எவ்வாறு உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது அல்லவா?
இதன் அடிப்படையில் தமிழ் ஊடகத்துறை சார்ந்தோர் அரச பயங்கரவாத அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். ஊடகவியலாளன் எனப்படுபவன் யார்? அவனை சமூகம் எவ்வாறு மதிக்கின்றது? அரசு எவ்வாறு மதிக்கின்றது என்பதிலிருந்து ஊடக சுதந்திரம் அந்த நாட்டின் ஜனநாயகத் தன்மையை அளவிட முடியும். இப்போது தமிழர் தாயகத்தில் குறிப்பாக கிழக்கில் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை, அராஜகத்தனங்கள் மலிந்து கிடக்கின்றன. பெருமையோடு பெயர் சொல்லி வந்த இவர்கள் தங்களை இனம் காட்டுவது உயிராபத்தானது எனக் கருதும் நிலை தோன்றியுள்ளது.
பொதுக்கூட்டம், விழா, நிகழ்வு அல்லது ஏதாவது சம்பவங்கள் நடைபெறும் போது அங்கே குழுமி நிற்கும் தமிழ் ஊடகவியலாளர் குழாம் எங்கே மறைந்து போய்விட்டது. தன்னை ஊடகத்துறை சார்ந்தவன் என அடையாளப்படுத்தும் அட்டை கழுத்திலே தொங்க, கையடக்கத் தொலைபேசி, புகைப்படக்கருவி செய்திதேடும் வேட்கையில் உலா வந்தவர்கள் இப்போது அவ்வாறு போக முடியாதளவிற்கு நிலைமை படுமோசமாக வளர்ச்சி கண்டிருக்கிறது. இதற்கான முதலடி வடபுலத்தில் கடந்த 2000ஆம் ஆண்டு 19ம் திகதி இரவு நிகழ்ந்த துயரச் சம்பவம்தான்.
ஆம், அது யாழ் மண்ணில் தமிழ் ஊடகத்துறையில் பிரகாசித்துக் கொண்டிருந்த துணிச்சல் மிக்க எழுத்தாளன் நிமலராஜன் பேரினவாதிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாக்கப்பட்டான். அன்றைய சூழல் போர்க் காலச்சூழல்.
சிங்கள இராணுவமும், தேசவிரோதக் குழுக்களும் தமிழ் மக்கள் மீது தமது கெடுபிடிகளையும் அராஜகத்தனங்களையும் கட்டவிழ்த்ததொரு சூழ்நிலையில் நிமலராஜனின் பேனாமுனை அந்த சம்பவங்களை உணர்த்திக் கொண்டிருந்தது. சிங்களப் படைகளின் ஒவ்வொரு கொலை வெறியாட்டத்தையும் சர்வதேச சமூகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தான். தேசியத்தின் மீதான பற்றும் சமூக மேம்பாட்டுச் சிந்தனையும் துணிகரத்தை அவனுக்கு கொடுத்துக் கொண்டிருந்தது.
ஆனால் கடந்த இரண்டாயிரமாம் ஆண்டு ஒக்டோபர் 19ம் திகதி இரவு வழமையாக தான் செய்யும் பணி எதுவோ அதுவே அவனது பேனாமுனை செய்திகளை உருவாக்கிக் கொண்டிருந்தவேளை வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கிதாரி நிமலராஜனின் உயிரைப் பறித்து விட்டான். பேனாவும் அவன் எழுதிய செய்தியும் இரத்தத்தில் மூழ்க உயிர் பிரிந்தது.
தமிழ் ஊடகத்துறை மட்டுமல்ல தமிழினமே அதிர்ச்சியடைந்தது. ஆனால் இற்றைவரை நிமலராஜனின் கொலையாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்பது உண்மை.
அன்று நிமலராஜனின் மறைவும், அதிர்ச்சியும் இன்னும் மறையவில்லை. ஒரு நிமலராஜன் போய் விட்டால் ஆயிரம் நிமலராஜன்கள் தோன்றுவார்கள் என்று வழக்கம் போலவே கூறிவிட்டு மட்டும் ஆறுதலடையும் நிலையில் இன்றும் தமிழ் மக்களில்லை. எந்த சமூக விடுதலைக்காக அவன் காவு கொள்ளப்பட்டானோ, அந்த சமூக விடுதலை அடையும் வரை நிமலராஜன் எங்களை விட்டுப் போகப்போவதில்லை.
இது மறைந்த நாட்டுப்பற்றாளர் ஊடகவியலாளர் நடேசன் அவர்கள் நிமலராஜனின் நினைவுப் பேருரையில் தெரிவித்த வார்த்தை. அன்று சொன்ன நடேசன் அவர்கள் இன்று எம்மிடமில்லை. எந்தத் துப்பாக்கிக் குண்டுகள் நிமலராஜனின் உயிரைப் பறித்ததோ அதே சக்திகளின் குண்டுகளுக்கு தமிழ் ஊடகத்துறையின் சிரேஸ்ட ஊடகவியலாளனாகவிருந்த நடேசனின் உயிரும் பறிக்கப்பட்டு விட்டது.
இது நடேசனுடன் முற்றுப் பெற்றதாகவில்லை. தமிழ் ஊடகத்துறையின் அகராதி என வர்ணிக்கப்பட்ட மாமனிதர் சிவராமின் உயிரும் இந்த ஊடகத்துறையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.
இது தமிழ் ஊடகத்துறை சந்தித்த மிகப்பெரியதொரு இழப்பு.
ஆம். நடேசன் அவர்கள் நிமலராஜனின் மறைவு குறித்து தெரிவித்திருந்த கருத்தை நினைவூட்டுவோம். ஒரு நடேசன் ஒரு சிவராம் மறைந்தால் ஆயிரம் நடேசன்களையோ அல்லது ஆயிரம் சிவராம்களையோ உருவாக்கி விடலாம் என ஆறுதல் அடைந்துவிட முடியாது. அது பேரிழப்பு.
இன்னும் பேரிழப்புக்கான காரண கர்த்தாக்கள் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு சரியான தீர்ப்பினை சிறிலங்கா அரசு வழங்கியிருக்குமாக இருந்தால் தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தலை எதிர்நோக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது. இன்று அது தொடர்கதையாகிவிட்டது.
எனவே நிமலராஜனின் நினைவு நாளில் நாம் வலியுறுத்துவது தமிழ் ஊடகத்துறை அச்சமின்றி சுதந்திரமானதொரு சூழல் தோற்றுவிக்கப்பட வேண்டும். கொலையாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் இல்லாதுவிடின் அரச பயங்கரவாதம் தொடர்ந்து தமிழ் ஊடகத்துறையை நசுக்குவதற்கான சூழ்ச்சிவலை விரிப்புக்களையே மேற்கொள்ளும்.
http://www.battieezhanatham.com/weeklymatt...er/1410/sk.html