Yarl Forum
கொழும்பில் சிகிச்சை பெற்ற போராளி உயிரிழக்கவில்லை: புலிகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கொழும்பில் சிகிச்சை பெற்ற போராளி உயிரிழக்கவில்லை: புலிகள் (/showthread.php?tid=2930)



கொழும்பில் சிகிச்சை பெற்ற போராளி உயிரிழக்கவில்லை: புலிகள் - வினித் - 10-11-2005

வவுணதீவு தாக்குதலில் காயமடைந்த புலனாய்வு துறை முக்கியத்தர் கீர்த்த ஹெலி மூலம் கொழும்பு கொண்டு வரப்பட்டார்
மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டு பகுதியான கரனடியனாறு என்னுமிடத்தில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவர் வைத்திய சிகிச்சைக்காக ஹெலி மூலம் நேற்று கொழும்பு கொண்டு வரப்பட்டதாக சமாதான செயலகம் தெரிவித்தது.

காயமடைந்தமுக்கிய உறுப்பினரை கொழும்புக்கு அழைத்து வருவதற்காக புலிகள் இயக்கம் ஹெலி வசதியை செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதி அந்த வேண்டுகோளுக்கு இணக்கம் தெரிவித்தார் என்றும் கொழும்பில் இருந்த சென்ற ஹெலி புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள கரனடியாறு பகுதியில் உள்ள பாடசாலை மைதானத்தில் தரை இறங்கி காயப்பட்டவரை கொழும்பிற்கு அழைத்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் படு காயமடைந்தவர் புலிகள் இயக்கத்தின் புலனாய்வு துறை முக்கியத்தர் கீர்த்தி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொக்கட்டிச் சோலையில் இருந்து இவர் வவுண தீவு நோக்கி வந்து கொண்டிருந்த வேளை ஆயுதம் தாங்கிய குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் நேற்று முன்தினம் இரவு 9.50 அளவில் நடைபெற்றுள்ளது.

யுத்த நிறுத்த கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் தாக்குதல் நடந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

http://www.lankasrinews.com/index.php?suba...t_from=&ucat=1&


- kuruvikal - 10-11-2005

இது விடயமாக ஊடகங்கள் தரும் செய்திகள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறதே..??! Confusedhock: :roll: Idea


- kurukaalapoovan - 10-11-2005

அண்ணாத்தை வணக்கம்

இதன் படி மேலுள்ள செய்தி தவறு.
http://www.battieezhanatham.com/2005/modul...rticle&sid=2837


போராளி ஒருவர் வீரச்சாவு மறைக்கிறது மருத்துவமனை - வினித் - 10-13-2005

<span style='font-size:30pt;line-height:100%'>போராளி ஒருவர்; கொழும்பு மருத்துவமனையில் வீரச்சாவு. - சந்தேகமான முறையில் மறைக்கிறது மருத்துவமனை</span>.
மட்டக்களப்பு வவுணதீவில் கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த விடுதலைப்புலி உறுப்பினர் நேற்று மாலை கொழும்பில் வீரச்சாவடைந்துள்ளார். செவ்வாய்க்கிழமை மாலை கொக்கட்டிச்சோலையிலிருந்து விஷேட ஹெலிகொப்டர் மூலம் இந்தப் போராளி கொழும்பை நோக்கி கொண்டுவரப்பட்ட போதிலும் காலநிலை சீரின்மை என்று போலியான காரணம் கூறப்பட்டு ஹெலிகொப்டர் பொலநறுவையில் திட்டமிட்டமுறையில் தரையிறங்கியது. பொலநறுவை ஆஸ்பத்திரியில் திட்டமிட்டமுறையில் அனுமதிக்கப்பட்ட இந்தப் போராளி நேற்றுக் காலை மீண்டும் ஹெலிகொப்டர் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார். எனினும் பாதுகாப்புக் காரணங்களுக்காக என்று இவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனியார் ஆஸ்பத்திரி பற்றிய விபரமெதுவும் அரசாங்க தரப்பால் வெளியிடப்பட்டிருக்கவில்லை. வவுணதீவுத் தாக்குதலில் காயமடைந்த இந்தப் போராளியை வன்னிக்கு மேலதிக சிகிச்சைக்காகக் கொண்டு செல்வதற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் ஹெலிகொப்டர் உதவியைக் கேட்டிருந்தனர். எனினும் வன்னிக்கான இந்தப் பயணத்துக்கு ஹெலிகொப்டருக்கான அனுமதி மறுக்கப்படவே பின்னர் இவர் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டார். இது அரசாங்கத்தின் திட்டமிட்ட நாடகம். தற்போது போராளி வீரச்சாவடைந்தள்ளார். எனினும் இதுவரை இந்த தகவலை மருத்துவமனை மறைத்து வருகிறது.


http://www.lankasrinews.com/sp.php


- Thala - 10-13-2005

Confusedhock: :roll: :roll:


- Sriramanan - 10-14-2005

நிதர்சனத்தைத் தவிர வேறு எந்த ஊடகமும் இந்தச் செய்தியை வெளியிடவில்லை.


- வினித் - 10-14-2005

வெள்ளி 14-10-2005 05:41 மணி தமிழீழம் ஜமட்டக்களப்பு நிருபர்ஸ
<b>வவுணதீவு தாக்குதலில் விழுப்புண் அடைந்த போராளி கொழும்பு வைத்தியசாலையில் வீரச்சாவு
மட்டக்களப்பு வவுணதீவில் இராணுவ துணை ஆயுதக் குழுக்கள் நடாத்திய தாக்குதலில் விழுப்புண் அடைந்து கொழும்பு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்து போராளி நேற்று மாலை 6.30 மணியளவில் வீரச்சாவடைந்துள்ளார்.

வைத்தியசாலையில் சிகிற்சை பலனளிக்காததனால் அவர் வீரச்சாவடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் வீரச்சாவு அடைந்த போதும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் இவரது வீரச்சாவு குறித்து இதுவரை அறிவிக்கவில்லை.

இன்று போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினருக்கு இவரது வீரச்சாவு குறித்து அறிக்க இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அப்போராளி வீரச்சாவடைந்துள்ளதை சிறீலங்கா அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.
</b>
http://www.pathivu.com/


- Sriramanan - 10-14-2005

வவுணதீவு தாக்குதலில் காயமடைந்த போராளி உயிரிழப்பு

மட்டக்களப்பு வவுணதீவில் சிறிலங்கா அரச புலனாய்வுத்துறையினரும் துணை ஆயுதக் குழுவினரும் கடந்த திங்கட்கிழமை நடத்திய தாக்குதலில் காயமடைந்த போராளி நேற்று வியாழக்கிழமை இரவு கொழும்பு வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.


வாழைச்சேனையைச் சேர்ந்த பரிசோதகன் என்ற போராளியே உயிரிழந்தவர் என்று தெரியவருகின்றது.

காயமடைந்த போராளியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு சிறிலங்கா அரசு உலங்குவானூர்தியை வழங்காது இழுத்தடித்தமையினாலேயே போராளியின் உயிரிழப்பு ஏற்பட்டதாக விடுதலைப் புலிகள் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

- புதினம்


- kuruvikal - 10-14-2005

வீரவணக்கங்கள்..!


- RaMa - 10-14-2005

எனது வீரவணக்கங்களும் அஞ்சலிகளும்


வவுணதீவுத் தாக்குதலில் விழுப்புண்ணடைந்த போராளி வீரச்சாவு - mayooran - 10-14-2005

வவுணதீவுப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினரின் தாக்குதலில் விழுப்புண்ணடைந்து கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போராளி நேற்றிரவு சாவைத் தழுவிக் கொண்டுள்ளார் என கொழும்புத் தகவல்கள் தெரிவி;க்கின்றன.
குறித்த போராளி விழுப்புண்ணடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அவரை கிளிநொச்சிக்கு கொண்டு வருவதற்கு உலங்குவானு}ர்தியை ஏற்பாடு செய்து தருமாறு விடுதலைப் புலிகள் விடுத்த வேண்டுகோளை நிராகரித்த சிறீலங்கா அரசு அவரை கொழும்பிற்கு கொண்டு செல்ல இணக்கம் தெரிவித்திருந்தது.

இருந்தபோதும் காலநிலை சீரின்மை எனக்கூறி நீண்ட இழுத்தடிப்பின் பின் புதன்கிழமை காலையே குறித்த போராளி கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பயனளிக்காததன் காரணமாக அவர் அங்கு சாவை தழுவிக் கொண்டார் என தெரிவிக்கப்படுகிறது.
<span style='font-size:14pt;line-height:100%'>sankathi</span>


- kuruvikal - 10-14-2005

<b>சந்திவெளி காவலரண் மீது துப்பாக்கிச் சூடு: இராணுவ சிப்பாய் பலி </b>

[வெள்ளிக்கிழமை, 14 ஒக்ரொபர் 2005, 06:25 ஈழம்] [மட்டக்களப்பு நிருபர்]

மட்டக்களப்பு - வாழைச்சேனை வீதி சந்திவெளி இராணுவ காவலரண் மீது நேற்று வியாழக்கிழமை இரவு இனந் தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இராணுவ சிப்பாயொருவர் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான இவர் பொலன்னறுவை வைத்தியசாலையக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது இடைவழியில் உயிரிழந்தார்.

இதனையடுத்து சந்திவெளி பகுதியில் இராணுவத்தினரால் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் எவரும் கைதாகவில்லை.

மேற்படி சம்பவத்தையடுத்து இராணுவத்தினரால் மேற்கொள்ளப்டப்ட கண்மூடித்தனமான பதில் துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து மக்கள் மத்தியில் அச்சமும் பீதியும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி - புதினம்


- Danklas - 10-14-2005

மட்டக்களப்பு தாக்குதலில் காயமடைந்து கொழும்புக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட போராளி உயிரிழக்கவில்லை என்று விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

கொழும்பில் சிகிச்சை பெற்ற நிலையில் போராளி வீரச்சாவடைந்ததாக சில ஊடகங்களில் வெளிவந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையிலிருந்து கடந்த 10 ஆம் திகதி இரவு கரடியனாறு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் வாகனத் தொடரணி மீது சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுவினரும் தாக்குதல் நடத்த முயற்சித்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதலை நடத்தி அவர்களை விரட்டியடித்தனர்.

இதில் ஒரு போராளி படுகாயமடைந்தார். காயமடைந்த போராளி போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் ஊடாக உலங்குவானூர்தி மூலம் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை அவர் வீரச்சாவடைந்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

ஆனால் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ஊடகச் செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை என்றும் விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்தார். Idea

புதினம்...

எதுக்கு அப்படி ஒரு செய்திகளை நிதர்சனமும், லங்காசிறியும் வெளியிட்டார்கள்? :roll: :?


- kuruvikal - 10-14-2005

அப்ப நிதர்சனும் பொய் செய்தி போடும் இதர துரோகத் தளங்களும் ஒரே ஆக்களினதா..??! அங்கும் இதே செய்தி வேற சொற்பிரயோகங்களோடு இடப்பட்டிருந்தது..எனி என்ன செய்யப் போகினம்...! யார் சொல்லுறது உண்மை...??! :roll: Idea :?:


- Sriramanan - 10-14-2005

குருவிகளே
இந்தச் செய்தியை கொழும்பில் பல ஊடகவியலாளர்களிடம் நம்பும் வகையில் திட்டமிட்டுப் பரப்பப்பட்டுள்ளது. இதனை நம்பி பல ஊடகங்கள் அச்செய்தியை வெளியிட்டிருந்தன.
கொழும்பில் சனிக்கிழமை காலையே இந்தச் செய்தி பரவியது ஆனால் இலங்கை நேரப்படி சனி அதிகாலை மூன்று மணிக்கு முன்பே நிதிர்சனத்தில் அந்தச் செய்தி வந்திருந்தது. இது நிதர்சனத்தால் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட செய்தியா? அல்லது வேறு சிலரின் சதிக்குள் நிதர்சனம் விழுந்து விட்டதா? என்பது தெரியாது


- kurukaalapoovan - 10-14-2005

<b>அரச பயங்கரவாதத்தின் வலை விரிப்புக்கள் </b><i>நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்</i>

தமிழ் ஊடகத்துறை இன்று பாரியதொரு சவாலையும் நெருக்கடியையும் எதிர்நோக்கியுள்ளது. தமிழ்த் தேசியத்திற்காக, தமிழீழ விடுதலைக்காக சுய சிந்தனைகளை, மக்களின் கருத்துக்களை, உணர்வுகளை ஊடகங்களின் வாயிலாக வெளிப்படுத்த முடியாதளவிற்கு இன்று நிலைமை மோசமடைந்திருக்கிறது. அதை விட செய்திகள் மக்களிடையே சென்றடைவதற்குக் கூட முடியாத துர்ப்பாக்கிய நிலை. இது சிறிலங்கா அரசின் ஜனநாயகத்தின் பண்புகள் எவ்வாறு உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது அல்லவா?

இதன் அடிப்படையில் தமிழ் ஊடகத்துறை சார்ந்தோர் அரச பயங்கரவாத அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். ஊடகவியலாளன் எனப்படுபவன் யார்? அவனை சமூகம் எவ்வாறு மதிக்கின்றது? அரசு எவ்வாறு மதிக்கின்றது என்பதிலிருந்து ஊடக சுதந்திரம் அந்த நாட்டின் ஜனநாயகத் தன்மையை அளவிட முடியும். இப்போது தமிழர் தாயகத்தில் குறிப்பாக கிழக்கில் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை, அராஜகத்தனங்கள் மலிந்து கிடக்கின்றன. பெருமையோடு பெயர் சொல்லி வந்த இவர்கள் தங்களை இனம் காட்டுவது உயிராபத்தானது எனக் கருதும் நிலை தோன்றியுள்ளது.

பொதுக்கூட்டம், விழா, நிகழ்வு அல்லது ஏதாவது சம்பவங்கள் நடைபெறும் போது அங்கே குழுமி நிற்கும் தமிழ் ஊடகவியலாளர் குழாம் எங்கே மறைந்து போய்விட்டது. தன்னை ஊடகத்துறை சார்ந்தவன் என அடையாளப்படுத்தும் அட்டை கழுத்திலே தொங்க, கையடக்கத் தொலைபேசி, புகைப்படக்கருவி செய்திதேடும் வேட்கையில் உலா வந்தவர்கள் இப்போது அவ்வாறு போக முடியாதளவிற்கு நிலைமை படுமோசமாக வளர்ச்சி கண்டிருக்கிறது. இதற்கான முதலடி வடபுலத்தில் கடந்த 2000ஆம் ஆண்டு 19ம் திகதி இரவு நிகழ்ந்த துயரச் சம்பவம்தான்.

ஆம், அது யாழ் மண்ணில் தமிழ் ஊடகத்துறையில் பிரகாசித்துக் கொண்டிருந்த துணிச்சல் மிக்க எழுத்தாளன் நிமலராஜன் பேரினவாதிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாக்கப்பட்டான். அன்றைய சூழல் போர்க் காலச்சூழல்.

சிங்கள இராணுவமும், தேசவிரோதக் குழுக்களும் தமிழ் மக்கள் மீது தமது கெடுபிடிகளையும் அராஜகத்தனங்களையும் கட்டவிழ்த்ததொரு சூழ்நிலையில் நிமலராஜனின் பேனாமுனை அந்த சம்பவங்களை உணர்த்திக் கொண்டிருந்தது. சிங்களப் படைகளின் ஒவ்வொரு கொலை வெறியாட்டத்தையும் சர்வதேச சமூகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தான். தேசியத்தின் மீதான பற்றும் சமூக மேம்பாட்டுச் சிந்தனையும் துணிகரத்தை அவனுக்கு கொடுத்துக் கொண்டிருந்தது.

ஆனால் கடந்த இரண்டாயிரமாம் ஆண்டு ஒக்டோபர் 19ம் திகதி இரவு வழமையாக தான் செய்யும் பணி எதுவோ அதுவே அவனது பேனாமுனை செய்திகளை உருவாக்கிக் கொண்டிருந்தவேளை வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கிதாரி நிமலராஜனின் உயிரைப் பறித்து விட்டான். பேனாவும் அவன் எழுதிய செய்தியும் இரத்தத்தில் மூழ்க உயிர் பிரிந்தது.

தமிழ் ஊடகத்துறை மட்டுமல்ல தமிழினமே அதிர்ச்சியடைந்தது. ஆனால் இற்றைவரை நிமலராஜனின் கொலையாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்பது உண்மை.

அன்று நிமலராஜனின் மறைவும், அதிர்ச்சியும் இன்னும் மறையவில்லை. ஒரு நிமலராஜன் போய் விட்டால் ஆயிரம் நிமலராஜன்கள் தோன்றுவார்கள் என்று வழக்கம் போலவே கூறிவிட்டு மட்டும் ஆறுதலடையும் நிலையில் இன்றும் தமிழ் மக்களில்லை. எந்த சமூக விடுதலைக்காக அவன் காவு கொள்ளப்பட்டானோ, அந்த சமூக விடுதலை அடையும் வரை நிமலராஜன் எங்களை விட்டுப் போகப்போவதில்லை.

இது மறைந்த நாட்டுப்பற்றாளர் ஊடகவியலாளர் நடேசன் அவர்கள் நிமலராஜனின் நினைவுப் பேருரையில் தெரிவித்த வார்த்தை. அன்று சொன்ன நடேசன் அவர்கள் இன்று எம்மிடமில்லை. எந்தத் துப்பாக்கிக் குண்டுகள் நிமலராஜனின் உயிரைப் பறித்ததோ அதே சக்திகளின் குண்டுகளுக்கு தமிழ் ஊடகத்துறையின் சிரேஸ்ட ஊடகவியலாளனாகவிருந்த நடேசனின் உயிரும் பறிக்கப்பட்டு விட்டது.

இது நடேசனுடன் முற்றுப் பெற்றதாகவில்லை. தமிழ் ஊடகத்துறையின் அகராதி என வர்ணிக்கப்பட்ட மாமனிதர் சிவராமின் உயிரும் இந்த ஊடகத்துறையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.

இது தமிழ் ஊடகத்துறை சந்தித்த மிகப்பெரியதொரு இழப்பு.

ஆம். நடேசன் அவர்கள் நிமலராஜனின் மறைவு குறித்து தெரிவித்திருந்த கருத்தை நினைவூட்டுவோம். ஒரு நடேசன் ஒரு சிவராம் மறைந்தால் ஆயிரம் நடேசன்களையோ அல்லது ஆயிரம் சிவராம்களையோ உருவாக்கி விடலாம் என ஆறுதல் அடைந்துவிட முடியாது. அது பேரிழப்பு.

இன்னும் பேரிழப்புக்கான காரண கர்த்தாக்கள் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு சரியான தீர்ப்பினை சிறிலங்கா அரசு வழங்கியிருக்குமாக இருந்தால் தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தலை எதிர்நோக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது. இன்று அது தொடர்கதையாகிவிட்டது.

எனவே நிமலராஜனின் நினைவு நாளில் நாம் வலியுறுத்துவது தமிழ் ஊடகத்துறை அச்சமின்றி சுதந்திரமானதொரு சூழல் தோற்றுவிக்கப்பட வேண்டும். கொலையாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் இல்லாதுவிடின் அரச பயங்கரவாதம் தொடர்ந்து தமிழ் ஊடகத்துறையை நசுக்குவதற்கான சூழ்ச்சிவலை விரிப்புக்களையே மேற்கொள்ளும்.

http://www.battieezhanatham.com/weeklymatt...er/1410/sk.html


- sri - 10-14-2005

<!--QuoteBegin-Sriramanan+-->QUOTE(Sriramanan)<!--QuoteEBegin-->குருவிகளே
இந்தச் செய்தியை கொழும்பில் பல ஊடகவியலாளர்களிடம் நம்பும் வகையில் திட்டமிட்டுப் பரப்பப்பட்டுள்ளது. இதனை நம்பி பல ஊடகங்கள் அச்செய்தியை வெளியிட்டிருந்தன.
கொழும்பில் சனிக்கிழமை காலையே இந்தச் செய்தி பரவியது ஆனால் இலங்கை நேரப்படி சனி அதிகாலை மூன்று மணிக்கு முன்பே நிதிர்சனத்தில் அந்தச் செய்தி வந்திருந்தது. இது நிதர்சனத்தால் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட செய்தியா? அல்லது வேறு சிலரின் சதிக்குள் நிதர்சனம் விழுந்து விட்டதா? என்பது தெரியாது<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
றமணன் சனி அல்ல வெள்ளி என் நினைக்கின்றேன்


- Anandasangaree - 10-16-2005

உண்மையில் இந்த செய்தியை முதலாவதாக வெளியிட்டது தமிழீழ தேசிய தொலைக்காட்சி அதாவது மருத்துவமனையில் இருந்து விசேட பேட்டியும் எடுத்து போட்டார்கள் இது நடந்தது வெள்ளி இரவு. அதனை தொடர்ந்து இணைய ஊடகம் அதனை செய்தியாக வெளியிட்டது. அதனை தொடந்து அனைவரும் வெளியிட்டனர். பின்னர் சனி மாலை விடுதலைப் புலிகள் மீன்டும் அதனை மறுத்தனர். ஆகவே தவறு விடுதலைப் புலிகளின் ஊடப்பிரிக்குள். அதாவது முதலாவது தமிழீழ தேசிய தொலைக்காட்சிக்குள்தான். அங்குதான் தவறு முதலாவதாக ஏற்பட்டது. மருத்துவமனையில் காயமடைந்தவருடன் நின்ட ஒருவரிடம் பேட்டியும் எடுத்தனர்.


- Anandasangaree - 10-16-2005

:roll: