11-19-2003, 09:46 AM
ஒரு வானொலி மக்களிடம் சுருட்டியதைபற்றி உங்களுக்கு விழங்காது. காரணம் நிங்கள் சில விடயத்தில் கறார்.. அதனால் தப்பி விட்டீர்கள். அதை மற்றவை படித்திருக்க வேண்டும். விட்டுவிட்டோம். ஆனால் அந்த வானொலி பெயர்சொல்லி நீங்கள் சொன்ன நாட்டில் கடந்த நாலு வருடகாலமாக யார் யார் எவ்வளவு சுருட்டியது என்பது உங்களுக்க தெரிய நியாயமில்லை. ஆனால் அதனால் கண்ணீர் வடிப்பவர்களை எனக்கு தெரியும். நாங்கள் அங்கை சுருட்டிதான் முன்னுக்கு வரவேண்டும் எண்ட அவசியம் இல்லை. இந்த நாட்டுக்கு வந்தது முதல் நான் உழைத்து தான் சாப்பிடுகிறேன். ஒரு சிலரைப்போல் ஊர்மக்கள் காசில் வாழவில்லை. நான் உந்த வானெலிக்காக தனிப்பட்ட முறையில் இழந்த பணம் எவ்வளவு எண்டு உங்களுக்கு தெரிய நியாயமில்லை. அப்ப நீங்கள் ஐபீசி, ஈரீபீசி.. உங்களுக்கு கடன் காரருக்கு பதில் சொல்லவேண்டிய தேவையும் இருந்திருக்கவில்லை. எதையும் எழுதும் போது அதன் சரித்திரத்தை அறிந்து எழுதுங்கள். அடுத்தவன் கண்ணீரில் படகோட்ட நினைத்தால் ரீபீசியின் கதி தான் எல்லாருக்கும். இப்ப ஈரீபிசியில் உங்களுக்கு பிடித்த நிர்வாகம் தானே, வெழுத்துக் கட்டுங்கள். அனால் நீங்கள் தப்பி விட்டீர்கள். அகப்பட்டு அனுபவித்து நாங்கள் தான்! எங்கள் அனுபவம் வெகு விரைவில் புத்தகமாக வரும் வாங்கி படியுங்கள். சில உண்மைகள் உங்களை உறையவைக்கும். உங்கள் மேல் எனக்கு ஒரு போதும் கோபம் வந்ததில்லை. மாறாக அனுதாபமே வந்தது. சிலந்தி வலையை நோக்கி போகும் ஒரு பூச்சியை பார்ப்பது போல்.. அவ்வளவு தான்..

