11-19-2003, 09:29 AM
அரசில் இல்லாது வானொலி தேவையா? மாற்றுக் கருத்து என்றால் அதன் உள் அர்த்தம்? மாற்று கருத்து என்பது ஒரு கருத்தக்கு எதிர் கருத்து என்ற சிந்தனையில் எல்லாவற்றையும் எதிர்த்தப கருத்து தெரிவித்தார்கள்! தமிழ் பேசும் மக்களிற்கு பிரிந்து பேவதை தவிர வேறு எந்த தீர்வும் சரிவராது என்பது வரலாற்று உண்மை. 1977தேர்தலில் பெரும்பாண்மையான தமிழ் மக்கள் வைத்த கருத்து. அதற்கு மாற்றுக்கருத்து என்ற அடிப்படிடையில் சிங்கள மக்களுடன் அடிமைகள் பேல காலம் காலம் வாழ்வது மேல் என்று தற்போதைய நிலைமையை வைத்து நாம் கருத்து தெரிவித்தால் அது முட்டாள் தனமான மாற்றுக் கருத்து! இதுதான் மாற்றுக் கருத் என்றால் அதன் உள்நோக்கம் வேறாகவே இருக்கும். மாறாக தமிழ் மக்கள் பிரிந்து போக வேண்டும், அனால் அதன் போராட்டத்தை முன்னெடுத்து செல்பவர்கள் தவறு விடும் போது அதை சுட்டிக்காட்டி அதை திருத்த வைக்க தெரியப்படுத்தும் கருத்துக்கள் ஒரு தரமான மாற்றுக்கருத்தாக இருக்கும். மாற்றக்கருத்து என்ற பேர்வையில் தமிழ்தேசிய பேராட்டத்தை நசுக்கும் வகையில் தெரியப்படுத்தும் கருத்தக்கள் 20 வருடகால போராட்டத்தை மழுங்கடிப்பதாகவே அமையும். அதை தக்க நேரத்தில் இனம் கண்டு தடுக்கப்படவேண்டும்.

