06-21-2003, 09:04 PM
இடைக்கால நிர்வாக சபைக்கு என்ன நடந்தது-நிலாந்தன்
சனாதிபதி சந்திரிக்காவால் நியமிக்கப்பட்ட
நீதிபதிகள் தமது விசுவாசத்தை
நிரூபிக்கச் சமாதானத்தைப்
பலியிடத் துணிந்தமையென்பது அபகீர்த்திக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பாதுகாக்கும்
ஒரு பாரம்பரியத்தில் எதிர்பார்திருக்கப்பட வேண்டிய ஒன்றே.
ஆங்கிலத்தில் ஒரு வசனம் உண்டு. ழே துரளவiஉந ழே Pநயஉந என்று. இதன் அர்த்தம் நீதி இல்லை என்றால் சமாதானமும் இல்லை என்று வரும்.
அண்மையில் சிறீலங்காவின் நீதித்துறை சமாதான முயற்சிகளுக்கு எதிராக இரண்டு தீர்ப்புக்களை வழங்கியிருக்கிறது.
முதலாவது 19வது திருத்தச் சட்டத்தின் மீதான தீர்ப்பு மற்றது மத்திய வங்கிக் குண்டுத் தாக்குதல் வழக்கின் மீதான தீர்ப்பு.
கடந்த சுமார் 10 மாதகால சமாதான முயற்சிகளைப் பொறுத்தவரை அதன் எதிரிகள் மேற்கொண்ட எல்லாவித சதி முயற்சிகளோடும் ஒப்பிடுகையில் மேற்படி தீர்ப்புக்கள் பாரது}ரமானவை. குறிப்பாக 19ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்ப்பு யதார்த்தத்தில் சமாதான முயற்சிகளுக்குள்ள வரையறைகளை உணர்த்திவிட்டது.
கடந்த 10 மாத காலத்திலும் சமாதானத்துக்கு எதிரான சக்திகளை மிகவும் சந்தோசப்படுத்திய அவர்களுக்கு புத்துணர்ச்சியுூட்டிய ஒரு தீர்ப்பு அது. வியாபாரிகளைப் பொறுத்தவரை ஒரு நன்நாள்.
அச்சட்டத்திருத்தம் கொழும்பில் அதிகமதிகம் புலிகளோடு சேர்த்தே கதைக்கப்பட்டது. புலிகள் கேட்பதை எல்லாம் ரணில் விக்கிரமசிங்க கொடுப்பதற்குத் தடையாகக் காணப்படும் சனாதிபதியைப் பலவீனப்படுத்த புலிகளும் அரசாங்கமும் சேர்ந்து வகுத்த திட்டம் இதுவென்ற அபிப்பிராயம் படித்த சிங்களவரில் ஒரு பகுதியினர் மத்தியில் பரவலாகக் காணப்பட்டது.
மேலோட்டமாகப் பார்த்தால் மேற்படி தீர்ப்பு சனாதிபதியின் அதிகாரங்களைப் பாதுகாப்பது போலத் தோன்றும். ஆனால் ஆழமாகப் பார்த்தால் அது சமாதானத்தின் வழியில் காணப்படும் ஒரு கெட்ட சகுனம்.
சனாதிபதி சந்திரிக்காவால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் தமது விசுவாசத்தை நிரூபிக்கச் சமாதானத்தைப் பலியிடத் துணிந்தமையென்பது அபகீர்த்திக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பாதுகாக்கும் ஒரு பாரம்பரியத்தில் எதிர்பார்த்திருக்கப்பட வேண்டிய ஒன்றே.
இத்தனைக்கும் இத்திருத்தச் சட்டத்தை வளர்த்தது சட்ட மற்றும் அரசியலமைப்பு விவகாரங்களில் நிபுணர்கள் என்றழைக்கப்பட்ட பேராசிரியர் பு.டு. பீரிஸ் போன்றோரே.
இச்சட்டத்திருத்தம் இப்படியொரு முடிவை அடையக் கூடும் என்பதை ஏனிந்த நிபுணர்கள் ஊகிக்காமல் விட்டார்கள்?
இத்தீர்ப்பு சமாதானத்தை அதன் அடுத்த கட்டங்களுக்கு நகர்த்துவதற்குரிய தளத்தைப் பலவீனப்படுத்திவிட்டது.
இது சமாதானத்துக்கான நிகழ்ச்சி நிரலை மாற்றி வரையும்படி செய்து விட்டது.
முதற்கட்டப் பேச்சுக்களின் நிகழ்ச்சி நிரலின் இடைக்கால நிர்வாகசபை பற்றிய உரையாடல் தவிர்க்கப் பட்டதற்குரிய பின்னணி இதுதான் என்று கொழும்பிலிருந்து க}டைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
அதாவது இடைக்கால நிர்வாக சபை ஒன்றை நிறுவுவதானால் பாராளுமன்றத்தில் 2ஃ3 பெரும்பான்மை ஆதரவு அவசியம். ஏனெனில் ஒற்றையாட்சி அமைப்பின் கீழ் இடைக்கால நிர்வாக அமைப்பொன்றை சாதாரண சட்டங்களின் கீழ் கொண்டுவர முடியாது.
அதற்கு விசேட சட்டமூலம் கொண்டுவரப்பட்டு அது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் நிறைவேற்றப்பட வேண்டும். சில சமயம் விவகாரம் நீதிமன்றத்திடமும் விடப்படலாம்.
ஆனால் 19வது திருத்தச் சட்டத்தை நீதிமன்றம் நிராகரித்து விட்டிருந்த ஒரு பலவீனமான பின்னணியில் இடைக்கால நிர்வாக சபைக்காக 2ஃ3 பெரும்பான்மை ஆதரவைக் கோரும் வாக்கெடுப்பை நடாத்துவது. விவேகமானது அல்ல என்று அரசாங்கம் கருதியதாக கூறப்படுகிறது.
இதனால் சமாதானம் செய்பவர்கள் நேர்வழியில் சிந்திப்பதைத் தவிர்த்து அரசியலமைப்பில் முட்டுப்படாத விதத்தில் குறுக்கு வழியில் மாற்று ஏற்பாடுகளைக் குறித்துச் சிந்திக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் உண்டாகியது.
இதன் விளைவே கூட்டுச் செயலணிகள்.
இங்கேயும் தாம் நீதிமன்றம் போகப்போவதாக யுத்த வியாபாரிகள் கூச்சலிட்டார்கள்.
செயலணிகள் அரசியலமைப்புக்கு உட்பட்டவைகளாயிருக்க வேண்டும் என்று சந்திரிக்கா கூறலாம்.
முஸ்லிம்கள் கிழக்கில் ஏற்கனவே தமது விவகாரங்களைக் கவனிப்பதற்கென்று ஒரு அமைச்சரவைப் பெற்றிருக்கிறார்கள்.
இந்த அமைச்சின் கீழ் இதுவரை காலமும் அவர்கள் பெற்றுவரும் நன்மைகளைப் பாதுகாக்கும் விதத்திலேயே செயலணிகளுக்கு அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினார்கள்.
இதெல்லாம் இப்படியிருக்க செயலணிகள் யாருக்குப் பதில் கூறும் அமைப்புக்களாயிருக்க வேண்டும் என்பதில் அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் அபிப்பிராய பேதங்கள் தோன்றியதாகவும் கூறப்படுகின்றது.
செயலணிகள் பிரதமரின் அலுவலகத்துக்குப் பதில் கூறும் அமைப்புக்களாயிருக்க வேண்டும் என்று அரசாங்கம் கேட்டது. புலிகளோ அவை சுயாதீனமான அமைப்புக்களாயிருக்க வேண்டும் என்று கேட்டார்கள்.
தற்சமயம் புனர்வாழ்வு, புனரமைப்பு போன்ற பணிகளை பிரதமரின் நேரடிக் கட்டுபாட்டிலிருக்கும் திட்ட அமுலாக்கல் அமைச்சே மேற்கொண்டு வருவதால் செயலணிகளைப் பிரதமரின் அலுவலகத்திற்குப் பதில் கூறும் அமைப்புக்களாக உருவாக்கினால் சட்ட மற்றம் நிர்வாகப் பிரச்சினைகள் வராது என்று அரசாங்கம் கருதியதாகக் கூறப்படுகிறது.
ஆனால் செயலணிகள் அதிகாரப் பகிர்வின் கருக்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் இதில் ஆகக் குறைந்த பட்சம் பலஸ்தீன மற்றும் கோசோவா மாதிரிகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் தமிழர் தரப்பில் வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
உபகுழுக்கள் புலிகள் கேட்டபடியே சுயாதீனமாக இயங்கும். அரச அமைப்புக்கள் எதற்கும் அவை பதில்கூற வேண்டியதில்லை. பதிலாக, பேச்சுக்களில் கலந்து கொள்ளும் இருதரப்புப் பிரதிநிதிகளும் பதில் கூற வேண்டியிருக்கும்.
இது ஒப்பீட்டளவில் சுயாதீனமானது, தனித்துவமானது. உத்தேச இடைக்கால நிர்வாக சபையின் கருக்கள் இதில் காணப்படுகின்றன.
இதில் வரும் ளுரி - உப என்ற சொல் யுத்த வியாபாரிகளின் கவனத்தை அதிகம் ஈர்க்காத அல்லது ஒன்றாயிருக்கலாம்.
உபகுழுக்கள் என்பதால் நடைமுறையில் ஒரு நடமாடும் இடைக்கால நிர்வாக சபைதான் என்று யாரேனும் ஒரு யுத்தவியாபாரி கனவு கண்டு விழித்தெழுந்து கூச்சல் போடலாம். கோர்ட்டுக்கும் போகலாம்.
ஆனால் இடைக்கால நிர்வாக சபையிலிருந்து உபகுழுக்கள் வரை படிப்படியாக நிகழ்ந்து வரும் உருவ மாற்றம் உள்ளடக்க மாற்றங்கள் ஒன்றைக் காட்டுகின்றன. அது - கொழும்பில் ரணில் எவ வளவு பலவீனமாக இருக்கிறார் என்பது.
சமாதானத்தைப் பொறுத்தவரை அவர் நியுூயோர்க்கிலும் லண்டனிலும் பலசாலி போலத் தோன்றலாம். ஆனால் கொழும்பில் அவர் மிகவும் பலவீனமானவராகத் தோன்றுகிறார்.
இந்நிலையில் - வெற்றிகரமாகச் சமாதானம் செய்வது என்பது வெற்றிகரமாகச் சந்திரிகாவைக் கையாள்வதுதான்.
ஒரு கனவான் அரசியலுக்குரிய விழுமியங்களை மதித்து விட்டுக் கொடுத்துப் பேரம் பேச சனாதிபதி சந்திரிகா தயாராக இருப்பதாக தெரியவில்லை.
எனவே அவரைத் தனிப்பைப்படுத்தும் ஒரு வியுூகத்தில் புலிகளையும் பங்காளிகளாக்குவதைத் தவிர ரணிலுக்கு வேறு தெரிவுகள் இருப்பதாகத் தெரியவில்லை.
சந்திரிகாவை விடவும் புலிகளுடன் ஒரு கனவான் அரசியலைச் செய்ய அவர் தயாராகிவிட்டது போலத் தெரிகிறது.
இது விசயத்தில் புலிகள் ரணிலை அனுசரித்தப் போவதன் மூலம் சிங்களவர்களை பிரித்தாள எத்தனிப்பதாக ஒரு பகுதி படித்த சிங்களவர்கள் கூச்சலிடுகிறார்கள்.
பிரித்தானியப் பல்கலைக்கழகத்தில் கலாநித}ப்பட்டம் பெற்ற அன்ரன் பாலசிங்கம் பிரித்தானியரின் அதே பிரித்தாளும் உத்தியைப் பாவித்து இரு பிரதான சிங்களக் கட்சிகளையும் பிரிக்கப் பார்க்கிறார் என்று சம்பிக்க லியனாராயச்சி என்ற பத்தி எழுத்தாளர் டெய்லி மிரரில் எழுதுகிறார்.
சந்திரிகாவுக்கு எதிராக ரணிலைப் பலப்படுத்துவதன் மூலம் புலிகள் ரணிலிடம் இருந்து எதையோ இரகசியமாக பெற முயல்வதாக ஒரு சந்தேகம் படித்த சிங்களவரில் ஒரு பகுதியினர் மத்தியில் பரவி வருகிறது.
19ஆவது திருத்தச் சட்டத்தின் மீதான தீர்ப்பை ஊக்குவித்த அபிப்பிராயப் பின்புலம் இதுவே என்று ஊகிக்கப்படுகிறது.
ஆனால் இடைக்கால நிh வாக சபையிலிருந்து செயலணிகள் என்றும் உபகுழுக்கள் என்றும் நிகழ்ந்து வரும் பெயர் மற்றும் உருவ உள்ளடக்க மாற்றங்கள் எல்லாவற்றுக்கும் பின்னால் பரஸ்பரம் விட்டுக்கொடுத்து பேரம் பேசும் ஒரு பாரம்பரியம் மெல்லத் துளிர்த்து வளர்ந்து வருகிறது.
இது யுத்த வியாபாரிகளின் முகவர்கள் போலத் தொழிற்படும் மீடியாக்காரர்களுக்கு தெரிவதேயில்லை.
இவர்கள் பரப்பும் வதந்திகளால் வசியஞ் செய்யப்பட்ட ஒரு பகுதி படித்த சிங்களவருக்கும் தெரியவதில்லை.
அம் முறை சமாதானம் செய்வதில் உள்ள மிகவும் கவர்ச்சியான மிகவும் முதிர்ச்சியான மிகவும் நம்பிக்கையுூட்டும் ஓரம்சமே அதுதான். பரஸ்பரம் விட்டுக்கொடுத்து பேரம் பேசும் ஒரு வித கனவான் அரசியல்.
யுத்த வியாபாரிகளுக்குத் தலைமை தாங்கிவரும் ஒரு சனாதிபதியைப் பாதுகாக்கும் அரசியலமைப்பின் வரையறைக்குள் சர்வதேச நகரில் பலவீனமாகவும் காணப்படும் ஒரு பிரதமரும் சிறுபான்மை மக்களும் சேர்ந்து செய்யக் கூடிய ஆகக் கூடியபட்ச
விஞ்ஞான புூர்வமான அணுகுமுறையும் இதுதான்.