06-21-2003, 09:04 PM
து}ரனின் பார்வையில்...
இரண்டாம் கண்டத்தைத் தாண்டிய சமாதானம் முதற் கட்டத்தையே நிராகரிககும் சனாதிபதி
தாய்லாந்தின் மரபியல் நம்பிக்கையின் பிரகாரம் அந்நாட்டு மக்களின் பாரம்பரிய சம்பிரதாயங்களின் அடிப்படையில் எந்தவொரு மகிழ்ச்சிகரமான முன்னேற்றகரமான நிகழ்வுகள் நடந்தாலும் அவற்றை அடையாளப்படுத்துவதற்கான 'சோலே' மரக்கன்றினை நடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.
நம்பிக்கைகளும், நம்பிக்கையின்மையும், எதிர்பார்ப்புக்களும், சந்தேகங்களும், ஆதரவும், எதிர்ப்பும் என முரண்பாடான அம்சங்கள் சுற்றி வளைத்து நிற்கும் சூழ்நிலையில் சிறீலங்கா அரசும், விடுதலைப் புலிகளும் தாய்லாந்தில் தமது இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் 'சோலே' மரக்கன்றினை ஒன்றிணைந்து நாட்டியிருக்கிறார்கள்.
இது அந்த நாட்டு மக்களினதும், மண்ணினதும் பாரம்பரிய நம்பிக்கைகளை மட்டுமல்ல, எங்கள் பிரச்சினைகள் குறித்து அவர்கள் காட்டும் அக்கறையையும், இனநெருக்கடி சமாதானமான முறையில் தீரவேண்டும் என்பதில் அந்த நாட்டின் அரசு காட்டும் பெருவிருப்பார்வத்தையும் கௌரவிக்கும் நடவடிக்கையேயாகும்.
நாட்டப்பட்டது வெறுமனே ஒரு 'சோலே' மரம்தான் என்றாலும் அது சமாதானம் மீதான நம்பிக்கையின் குறியீடாகவே அர்த்தப்படுகிறது. அதற்கு ஊற்றப்பட்ட நீரும் அது நேராக கம்பீரமாக வளர்வதற்கு பக்கத்துணையாக நாட்டப்பட்ட 'தடிகளும்' அந்த மரம் எக்கட்டத்திலும் சரிந்தோ முறிந்தோ போய்விடாது ஆழவேரூன்றி அகலக்கிளை பரப்பி வளரவேண்டும் என்பதற்காகத்தான்.
சமாதான முன்னெடுப்புக்களும் அப்படியே பக்கபலத்துடனும், உறுதியான ஆதரவுடனும் தனது நிதானமான வளர்ச்சியையும் இலக்கு நோக்கிய உறுதியான முன்னேற்றத்தினையும் காணவேண்டும் என்ற தாய்லாந்தின் மனித அக்கறையையும் இந்த 'சோலே' மர நாட்டலின் அர்த்தம் வெளிப்படுத்தி நிற்கிறது.
பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் மட்டுமல்லாது உலக மக்கள் சமாதானமாக வாழவேண்டும் என்ற அபிலாசைகளையும் கொண்ட தாய்லாந்தின் மக்களுக்கும், அரசுக்கும் தமிழ் மக்கள் "நன்றி" வார்த்தைகளால் கூறமுடியாத ஒன்றாகும். அந்த 'சோலே' மரக்கன்று நன்றியின் குறியீடாகவும் அர்த்தம் கொள்ள வைக்கும்.
தாய்லாந்தே உனக்கு எங்களின் பணிவான வந்தனம். சிறீலங்காவின் பேரினவாதிகளுக்கு 'புத்தம்' என்பதன் தத்துவம் 'அமைதி' என்பதன் அடிப்படையில்தான் உள்ளது என்பதை விளக்கியமைக்கு நன்றி.
'நித்திய கண்டம் புூரண ஆயுள்' எனத் தமிழில் ஒரு பழமொழியுண்டு.
சிறீலங்காவில் சமாதானம், அமைதி என்பதற்கு நித்திய கண்டம்தான்லு} ஆனால் இனவெறியும், போரும், மதவாதமும் ஏற்படுத்திவரும் அழிவுகளுக்கும், கொடுமைகளுக்கும் அப்பால் அவ வப்போதும் அவை நம்பிக்கையுடன் துளிர்விடுவதும் பின்னர் மீண்டும் சிதைக்கப்படுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
இது ஒரு வரலாறாகவே தொடர்கிறது.
'திம்பு'வில் தொடங்கி இப்போது தாய்லாந்தைக் கடந்து நோர்வேக்கு அடியெடுத்து வைக்கும் நிலையில் சிறீலங்காவின் இனப்பிரச்சினைக்கான சமாதான முயற்சிகள் இன்னமும் தளராத நம்பிக்கையுடன் இருப்பது மகிழ்ச்சியை மட்டுமல்லாது வியப்பையும் ஊட்டும் விடயமேயாகும்.
அறுதிப் பெரும்பான்மையற்ற அரசும், பெரும்பான்மையான அதிகாரத்தைக் கொண்ட சனாதிபதியும் சமாதானம் குறித்த விடயங்களில், முன்னெடுப்புக்களில் தொடர்ந்து முரண்பட்டுக்கொண்டே இருக்கும் நிலையில் சமாதானம் மீதான மக்களின் விருப்பார்வம் என்ற ஆதரவுப் பலத்தை மட்டும் நம்பியே ரணிலின் அரசு சமாதானம் நோக்கிய நகர்வுகளை மேற்கொள்கிறது என்றே கூறவேண்டும்.
சமாதானத்திற்கு மட்டுமல்ல, ரணிலின் அரசுக்கும் கூட இப்போதைய நிலையில் நித்திய கண்டம் புூரண ஆயுள் என்ற நிலைதான் தொடர்கிறது.
இந்த நிலையிலும் மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு அமைய சந்திரிகாவின் விருப்பத்திற்கு மாறாக தாய்லாந்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் அதன் இரண்டாவது 'கண்டத்தையும்' வெற்றிகரமாக நம்பிக்கையுூட்டும் வகையில் தாண்டி மூன்றாவது கட்ட பாய்ச்சலுக்கு தயார்படுத்தும் நிலையை எட்டியுள்ளது.
இந்த இரு கட்ட பேச்சுக்களும் ஒரு அரசியல் தீர்வு குறித்த முன்னோடிப் பேச்சுக்களாக, பரஸ்பரம் இரு தரப்பினரும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான புரிந்துணர்வின் அடிப்படையிலான பேச்சுக்களாக இருந்த போதிலும் கூட சிறீலங்காவின் சனாதிபதி அதன் மீது வெறுப்புக் கொண்டவராக அதனை நிராகரிப்பவராகவே உள்ளார்.
'சமாதானம்' என்ற சொல்லைக் கூட அதிகாரத்தொனியடன் உச்சரிக்கும் ஒரு அகங்காரமே அவரில் இருந்து வெளிப்பட்டு வருகிறது. அவரது சொல்லும் செயலும் அண்மைக் காலங்களில் மிகவும் அருவருக்கத்தக்க, ஒரு சனாதிபதிக்கு எந்த வகையிலும் ஒவ வாத ஒன்றாகவே வெளிப்பட்டுவருகிறது.
சமாதானத்தை நோக்கிய நகர்வுகளில் புலிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்த்து நடப்பதை அவர் முற்றாகவே நிராகரிக்கிறார்.
தடை செய்யப்பட்ட நிலையில் -இரண்டாம்தர அடிமை நிலையில் புலிகளை வைத்துக் கொண்டுதான் பேச்சுக்களை நடத்த வேண்டும் என்பதில் அவர் விடாப்பிடியாகவே இருக்கிறார்.
இயல்பு வாழ்க்கை என்ற விடயத்தை வரையறை செய்யவேண்டும் என்கிறார். அரசோ பிரச்சினையின் இராணுவ ஆக்கிரமிப்பு முற்றுகையை நீக்குவதில் அவருக்கு உடன்பாடே இல்லை.
பேச்சுவார்த்தைக்கான கால எல்லை என்பதை வரையறை செய் வேண்டும் என்கிறார். அரசோ பிரச்சினையின் ஆழம் அதிகம் என்பதால் காலவரையறை சாத்தியமற்றது என்ற நிலைப்பாட்டைக் கொண்டதாக உள்ளது.
ஜே.வி.பி, சிகல உறுமய போன்ற பேரினவாத சக்திகளின் நெருக்கமும் அவர்களின் நெருக்குதல்களும் சமாதானம் குறித்து நியாயமான அணுகுமுறைகளை மேற்கொள்ள சந்திரிகாவைத் தடுக்கும் காரணிகளாக வியுூகமமைத்துள்ளன. இவர்களைவிடவும் புற ஆதரவு எதுவும் இல்லை கட்சி மற்றும் அரசியல் hPதியாக அவருக்கு இல்லாததால் இதனை புறக்கணிக்க முடியாதவராகவும் அவர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நோர்வே சமாதானம் தொடர்பான பங்களிப்பையும் பேச்சுக்களின் போதான அனுசரணையையும், குறிப்பாக அதில் எரிக் சோல்ஹெய்ம் அவர்களின் தீவிரமான அக்கறையையும் முற்றும் முழுதாகவே சந்திரிகா எதிர்ப்பவராக உள்ளார்.
இவை சில முக்கியமான கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும்.
விரும்பியோ விரும்பாமலோ சந்திரிகாவை பேச்சுவார்த்தை தொடர்பான நிகழ்ச்சி நிரல்களில் இருந்து முற்றாக புறக்கணிக்க முடியாத நிலை, தவிர்க்க முடியாத அம்சமாகியுள்ளது.
சந்திரிகா நிராகரித்தாலும், புறக்கணித்தாலும், அவமதித்தாலும் கூட பேச்சுவார்த்தை தொடர்பான முன்னேற்றங்களை அவரிடம் போய் விளக்க வேண்டிய கட்டுப்பாடு அரசுக்கு இருக்கவே செய்கிறது. இது ஒரு அரசியல் நாகாPக சம்பிரதாயத்தின் அடிப்படையில் அமைந்ததாகும்.
ஆனால், இந்த விளக்கத்தையும், விபரிப்பதையும் கேட்கும் நிலையில் அவர் இல்லைலு}. எதிர்காலத்திலும் அவ வாறு இருக்கப்போவதுமில்லை.
இதேவேளை சந்திரிகாவின் அங்கிகாரமும் அனுசரணையும் இல்லாமல் எந்தவொரு தீர்வையும் நடைமுறைப்படுத்துவதென்பது தற்போதைய அரசியலமைப்பின் அடிப்படையில் அரசுக்கு சாத்தியமற்றதேயாகும்.
நிறைவேற்று அதிகார பலம் சனாதிபதியின் கையிலேயே உள்ளது. முடிவெடுக்கும் சக்தியாக அவரே உள்ளார். இதுவே சமாதானமும், சிறீலங்காவும் எதிர்கொள்ளப்போகும் எதிர்கால அவலங்களுக்கும், ஆபத்திற்கும் காரணியாகவும் விளங்கப்போகிறது.
சந்திரிகாவின் அதிகாரங்களை 'வெட்டாமல்' அதிகார பலமற்ற அரசால் அது எவ வளவு மக்களின ஆதரவைக் கொண்டதாக இருந்தாலும் கூட, எந்தவிதமான தீர்வையும், திட்டங்களையும் அமுல்படுத்துவதென்பது முடியாத காரியம்.
இந்த நிலையில்தான் அரசும் புலிகளும் தமது பேச்சுவார்த்தைகளின் இரண்டாவது 'கண்டத்'தைத் தாண்டியுள்ளார்கள் என்று கூறவேண்டியுள்ளது.
சனாதிபதியின் ஆதரவோ, அங்கீகாரமோ இல்லா நிலையில்தான், சர்வதேசத்தின் ஆதரவுப் பலத்தினையும், மக்களின் சமாதானம் மீதான அபிலாசைகளையும் நம்பித்தான் நோர்வேயில் நடைபெறத் திட்டமிட்டுள்ள மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரல்கள் தயாரிக்கப்படவுள்ளன. அரசும் புலிகளும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமான நம்பிகையுூட்டும் வகையில் அமைந்ததென அறிக்கைவிட்ட வேளையில் சந்திரிகாவுக்குள் ஒரு எரிமலை கொதித்துக் கொணண்டுதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
சமாதான நகர்வுகளின் வெற்றி சந்திரிகாவின் அரசியல்வாழ்வுக்கு கிடைக்கும் தோல்வி மட்டுமல்லலு}. முற்றுப்புள்ளியும் கூட. இதனை அவர் அனுமதிக்கப்போவது கிடையாது.
அடிக்கடி அவர் கூறும் அல்லது எச்சரிக்கும் தனது 'அதிகாரப் பலப் பிரயோகம்' என்பதை எப்போது பயன்படுத்தப் போகிறார்.
இன்னும் இரு மாதங்களின் பின்னர் அவர் எப்போதும் அதைப் பயன்படுத்தி இந்த அரசை ஆட்சிக் கலைப்புச் செய்ய முடியும். அதனைவிடவும் வேறு வழி அவருக்கு கிடையவே கிடையாது.
மற்றொரு தேர்தலை உடன் சந்திக்கும் மனோபலம் அவருக்குமில்லை. அவரின் சக தோழர்களுக்கும் கிடையாது. இந்நிலையில் 'ரணில்' நெருக்கடிகளைத் தவிர்க்கவும் மக்களிடம் தனது அரசியல் நேர்மையைக் கூறி மீண்டும் ஒரு அறுதிப் பெரும்பான்மையைக் கோரத் தானே ஆட்சியைக் கலைத்து பதவிவிலகலாம்.
ஆனால் நொண்டிச் சாட்டுக்களுக்குப் பெயர்பெற்ற சந்திரிகா உடன் தேர்தலை நடத்தமாட்டார் என்பதும் சர்வ நிச்சயமான விடயம். அப்படி அவர் நடத்த முன்வந்தால் அவர் அரசியல் தற்கொலை செய்யப்போகிறார் என்பதுதான் அர்த்தம். இந்த இக்கட்டான சூழ்நிலை தென்னிலங்கையில் ஒரு பாரது}ரமான அரசியல் குழப்பம் ஏற்படவே வழிவகுக்கும். குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கக் காத்திருக்கும் மக்கள் ஆதரவற்ற பேரினவாத சக்திகள் அதற்கு காலம் பார்த்துக் காத்திருக்கின்றனர்லு}.
இந்தக் கட்டத்தில், சமாதானம் தொடர்பான அடுத்து வரப்போகும் கட்டங்கள் எத்தனை கண்டங்களைத் தாண்ட வேண்டியிருக்கப் போகின்றது என்பதை சிந்திக்காமல் இருக்கவும் முடியாது.
நோர்வேயும், சர்வதேச சமாதான ஆதரவு சக்திகளும் இந்த நிலையில் என்ன நடவடிக்கைகளை எடுக்கும்.
இதுவும் ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான கேள்வியாக இப்போதுள்ளதுலு}.
இந்நிலையில் வடக்கிலும், கிழக்கிலும் வெட்டப்பட்ட குண்டுவீச்சால் சிதறிப்போன எஞ்சித் தப்பிப் பிழைத்துள்ள மரங்கள் யாவும்லு}. குறிப்பாக பனைகளும் பனைகளும் தென்னைகளும் தாய்லாந்தில் நாட்டப்பட்ட 'சோலே' மரக்கன்றினை எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் மட்டுமல்ல ஏக்கத்துடனும் பார்த்தவண்ணமேயுள்ளனலு}..
சந்திரிகா தாய்லாந்து மண்ணினதும் மக்களினதும் பாரம்பரிய நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுப்பாரா அல்லது அதனை சிதைக்கப் போகிறாராலு}..? அவர்கள்தான் முடிவெடுக்கவேண்டும்.