06-21-2003, 09:03 PM
புதிய கதைகள்
;புதிய நியங்கள்
1
யாரிடமும் அச்சமில்லை. போர் அனுபவம் அதிகமில்லை. எனினும் விடுதலை முனைப்பு அதிகமாக இருந்ததால், இதைப்பற்றி அவர்கள் கவலை கொள்ளவில்லை. கோப்பாய் சிறேசரடியில் அவர்கள் எதிரிக்கான வலையை விரித்தார்கள்.
(இதைத் தொடர்ந்து தாயகமெங்கும் இழுத்து விரிக்கப்பட்ட வலைகளில் சிக்கிய அசோகச்சக்கரம் சீராக உருளமுடியாமல் திணறியது தனிக்கதை)
(ழுpநசயவழைn டீயஎயn) பவான் நடவடிக்கையைத் தொடங்கிய இந்திய அமைதிகாக்கும்(?) படையினர் யாழ்ப்பாண நகரப்பகுதியிலிருந்து நகரத்தொடங்கி விட்டிருந்தனர். இதைச்சற்றும் எதிர்பார்த்திராத மக்கள் நம்ப முடியாத அதிர்ச்சியுடன் வாசல்களைப் புூட்டிக் கொண்டு வீடுகளுக்குள் அடைந்து கொண்டனர். விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் ஒரு அணி - 2ம் லெப் மாலதி, கஸ்து}ரி, தயா, விஜி இன்னும் சிலர் கோப்பாய் வெளியில் எதிர் நடவடிக்கைக்குத் தயாராகிக் கொண்டனர்.
ஐப்பசி மாதம் மழை எனினும் அன்று வானத்து நட்சத்திரங்கள் இருட்டடிப்புச் செய்யப்படவில்லை. நிலவு, தலைக்கு மேலேயே மிதந்து கொண்டு இருந்தது. கண்களைக் கூசச் செய்யும் ஒளியுடன் கோப்பாய் - கைதடி வீதியில் திரும்பின. காவற் கடமையில் நின றவர் யாருடைய ஊர்தியென்று அறிவதற்காக எழுந்து நின்றார். வந்த ஊர்திகள் சடுதியில் நின்றன. அதில் வந்த இந்திய இராணுவத்தினர் குதித்தனர். நு}று நரிகள் சேர்ந்து ஊழையிடுவது போன்றதொரு ஒலியை எழுப்பியவாறு இவர்களை நோக்கி ஓடிவந்த படையினரை இவர்களின் துப்பாக்கிகள் வரவேற்றன.
இரவின் அமைதியைக் குலைத்தவாறு அந்த வெளியில் சண்டை நடந்தது. இந்திய இராணுவம் தம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பெண்கள் படையோடு மோதியது. பெண்கள் பற்றி அவர்களிடமிருந்த கற்பனைத் தத்துவங்கள் உடைந்து விழுகின்ற அளவுக்கு அந்த சண்டை நடந்தது.
தனது தொடையில் ஏற்பட்ட காயத்தின் நிலைமையைப் புரிந்துகொண்ட மாலதி தன் கையிலிருந்த சுடுகலனை வீரவேங்கை விஜியிடம் கொடுத்தார்.
"இதைக் கொண்டுபோய் அண்ணையிட்டைக் குடு. நான் குப்பி கடிக்கப்போறன்" மாலதியை விட்டுவிட்டுப் போக விஜி தயாராக இல்லை.
"நான் உன்னை விடமாட்டன் மாலதி"
விஜி மாலதியை இழுத்துப்போக முயற்சித்தார். ஆனால் மாலதியின் உறுதியே வென்றது.
"இதைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடு"
அந்த நேரம் மிகவும் அரிதாகவும், எல்லோரது நேசிப்புக்கும் உரியதாக இருந்த ஆ-16ஐ தங்களெல்லோருக்கும் தருவதற்காக தலைவர் எடுத்த முயற்சிகளைப் புரிந்து கொண்டதனால், அன்றைய சூழலில் உலகின் நான்காவது வல்லரசுடனான போரில் அந்த ஆயுதம் ஆற்றவேண்டிய பங்களிப்பைப் புரிந்து கொண்டதால் வந்த வார்த்தைகள்.
2
திண்ணை மாநாட்டில் ஒன்று கூடியவர்களுக்கு இதை நம்பச் சற்றுச் (சற்று என்ன சற்று? முற்று முழுதாகவே) சிரமமாகவே இருந்தது.
"உந்தப் பெரிய இந்தியன்காரன் நடுச்சாமத்தில முன்னாலை வந்து நிக்கேக்கை உந்தப் பொடிச்சியள் அவங்களைச் சுட்டிருக்குங்களோ?"
சீக்கியப் படைப்பரிவினரின் அரைப் பனை உயரமும் எங்கள் பெண்களின் ஐந்தடி உயரமம் அவரைக் கேள்வி கேட்க வைத்தன.
ஏற்கனவே லெப். கேணல் விக்ரர் அவர்கள் வீரச்சாவடைந்த மன்னார்- அடம்பன் சண்டையில் மகளிர் படையணி பங்கேற்றிருந்ததான கதைகளை அரைகுறையாகக் கேள்விப்பட்டிருந்த போதும், அவர்களது ஐயங்கள் தெளியவில்லை. கேள்விகளோடு மாநாடு தொடர்ந்தது.
3
அங்கம் - பருத்தித்துறை துறைமுகத்தடி. காலம் - 1993 நடுப்பகுதி.
பார்வையாளர்கள் - துறைமுகத்தடியில் நின்ற திண்ணை மாநாட்டாளர்கள்.
நடிகர்கள் - கடலில் கைகளை வீசிக் கால்களை அடித்தவாறிருந்த சில தலைகள்
காட்சி புள்ளிகளோ, கோடுகளோ விழாமல் மிகத் தெளிவாகத் தெரிகின்றது. கடலில் கொஞ்சம் மனிதர்கள் நீந்துகின்றார்கள்லு}. அது தெரிகிறது. யார் அவர்கள்? அரைக் காற்சட்டைகளை அவர்கள் அணிந்திருந்தார்கள். "ஆம்பிளையளோ?" தலையிலே முடி கொண்டையிட்டிருப்பது போலவும் தெரிகின்றது.
"பொம்பிளையளோ"
"என்ன பொம்பிளையளோ"
"அதுவும காற்சட்டைகளோடையே?"
"கடல் பொங்கி ஊரை அழிக்கிறதுக்குத்தான் உந்தக் கூத்தெல்லாம் நடக்குது"
"அப்படியெண்டா வெள்ளைக்காரனின்ரை உடலுமெல்லே பொங்கவேணும். அங்கை எல்லாரும்தானே குளிக்கினம்?"
இது ஒருவர்
"அது ரோசமில்லாத கடல். பேசாமக் கிடக்கும். எங்கட கடல் அப்பிடியே"
இது மற்றவர்
திண்ணை மாநாட்டாளர்களின் அனல் பறந்த கருத்துப் பரிமாற்றல் களுக்குகிடையில் கடற்புலிகள் மகளிர் படையணி ஐந்து மைல் நீச்சலை நிறைவு செய்து, தனது கடல் நடவடிக்கைகளை ஆரம்பித்து வ}ட்டிருந்தது. மாநாடு முடிவுறவில்லை.
கிளாலிக் கடல் நீரேரியில் பயணம் செய்த மக்களைத் தாம் விரும்பிய நேரங்களிலெல்லாம் கொன்று குவித்துக் கொண்டிருந்த சிறீலங்காக் கடற்படைக்குச் சவால் விட்டவாறு கடற்புலிகளின் படகுகள் விரைந்து கொண்டிருந்தன. மக்களை நெருங்க முடியாத சிறீலங்காப் படகுகள் தள்ளியே நின்று கொண்டன.
இருளில் கரும்புள்ளிகளாக விரைந்து சாகசம் காட்டுகின்ற இவர்களின் படகுகளில் போகின்றவர்களை உற்றுஉற்றுப் பார்த்தவாறு சாவு அச்சமற்ற ந}ம்மதியுடன் திண்ணை மாநாட்டாளர்கள். ஒரு தொடுகையில் (இயந்திரப் படகொன்றுடன் கயிற்றால் பிணைக்கப்பட்டு கட்டி இழுக்கப்படும் ஏனைய பயணிகள் படகுகள்) பயணம் செய வதை கண்டுகொண்ட கிளாலிக் கடல் நீரேரிக்குச் ச}ரிப்பை அடக்க முடியவில்லை. தனது அலைக் கரங்களை அடித்தவாறு அது உருண்டு சிரித்தது. நடந்த புதினத்தை கேள்வியுற்ற மீனினங்களும் திண்ணை மாநாட்டாளர்களின் முகங்களைப் பார்ப்பதற்காக நீர் மட்டத்துக்கு மேலே துள்ளித் துள்ளிக் குதித்தன.
4
தென்மராட்சியில் முக்கிய நகர்களில் ஒன்றான சாவகச்சேரி எங்களிடம் இழந்த நகரை மீளப் பிடிப்பதற்கான கடும் முயற்சியில் சிறிலங்காப் படையினர். மட்டுப்படுத்தப்பட்டளவில் நின்ற எம்மவர்களுக்கும் மலையான பலத்துடன் நின்ற படையினருக்குமிடையே அன்று கடும் மோதல் தொடங்கியது.
கட்டிடக் காட்டிடையே பக்கம் பக்கமாக இருதரப்பும் நின்று மோதிக் கொண்டன. ஒவ வொரு காப்பரணும் தமது நிலைமையைச் சொல்லிச் சொல்லிச் சண்டை பிடித்தது.
"எங்களில் ஒரு ஆள் காயம்"
"ரெண்டு பேர் வீரச்சாவு"
"நானும் காயம்"
பெரும்பாலான எமது காப்பரண்கள் விழுந்துவிட்டன. வ}ழுகின்ற கடைசி நிமிடத்திலும் எதிரிகளை விழுந்தின. அந்த ஒரு காப்பரண் மட்டும் விழவேயில்லை. அங்கிருந்து படையினரை நோக்கி எதிர்த்தாக்குதல் நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது. அதற்குள் நின்றது மேஜர் கயல்விழி.
கயல்விழி இன்னமும் முழுமையாகப் படையினரால் சுற்றிவளைக்கப்படவில்லை. எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அவர்கள் வருவதற்கு ஒரு பாதை இன்னமும் பாதுகாப்பாகவே இருந்தது. அந்த ஒரு பாதையால் வெளியேறி வருமாறும், உதவி அணிகளை அழைத்து, அணிகளை மீளமைத்துக் கொண்டு போய் அடித்து இடங்களைப் பிடிக்கலாம் என்றும் வழங்கப்பட்ட கட்டளையை கயல்விழி ஏற்றுக் கொள்ளவில்லை.
"கடைசி வரைக்கும் சாவகச்சேரியை விடவேண்டாம்" என்ற தனது அணியினரின் கடைசி வேண்டு கோளையே அவர் ஏற்றுக்கொண்டார்.
"நான் பின்னுக்கு வரமாட்டென். அந்தப் பாதையால hPமை உள்ளுக்கு அனுப்புங்கோ. நான் நிக்கிற இடத்திலிருந்து அடிச்சுக்கொண்டு போய்ப் பிடிப்பம். விட்டா, திரும்பிப் பிடிக்கிறது கஸ்ரம்" இது கயல்விழி.
உதவியணிகள் அரியாலையிலிருந்தும், வாதரவத்தையிலிருந்தும் கொழும்புத்துறையிலிருந்தும் வந்து சேரத் தாமதமாகும் என்பது கயல்விழிக்கு தெரியாததல்ல. எவ வளவு நேரமானலும் அவர்கள் வந்து சேரும்வரை தமது நிலையைத் தக்கவைத்திருப்பதென கயல்விழியும் கயல்விழியோடு நின்றவர்களும் முடிவெடுத்தனர்.
இப்போது இவர்களைச் சூழவும் படையினர்தான்.
"ரவுண்ட் அப்புக்குள்ள நிக்கிறம். நாங்கள் சமாளிப்பம். நீங்க ஆக்களைத் தாங்கோ"
இவர்கள் நின்ற வீட்டின் மதிலோடு படையினரின் தலைகள் தெரிந்தன.
"மதிலோடை வந்து நிக்கிறவங்களைச் சுட்டுக்கொண்டிருக்கிறம். ஆக்களை அனுப்புங்கோ"
மதிலைக் கடந்து உள்ளே குதித்த படையினர் மதிலுக்கும் இவர்கள் நின்ற காப்பரணுக்குமிடையே வெட்டப்பட்டிருந்த நகர்வகழிக்குள்ளே இறங்கினார்கள்.
"பக்கத்தில வந்திட்டாங்கள். நாங்கள் சுட்டுக்கொண்டிருக்கிறம்"
படையினரின் Pமு டுஆபு அடி இவர்களின் காப்பரண் சுவரை அதிர வைப்பது கயல்விழியின் தொலைத்தொடர்புக் கருவியுூடே எல்லோருக்குமே கேட்டது. மிக நெருங்கிய படைவீரன் ஒருவன் இவர்கள் வீசிய குண்டு வெடித்து சிங்களத்தில் அலறியதும் கேட்டது. அவர்களின் நிலைமை எல்லோருக்கும் விளங்கியது.
சாவகச்சேரி நகரை இழக்கக்கூடாது என்ற முடிவில் உறுதியோடு கடைசி வரை முயன்ற கயல்விழியின் குரல் கடைசியாக ஒலித்தது.
"எங்களுக்குக் கிட்ட அவன் வந்திட்டான். இனி எங்கடை தொடர்பு உங்களுக்கு இருக்காது"
காற்று தனது வீரவணக்கத்தைச் செலுத்தியது.
5
அந்த தந்தையால் நம்பவே முடியவில்லை.
எனது மகள் வீரச்சாவா? அதற்குள்ளாகவா? இப்போதுதானே போனாள்? அதற்குள் எப்படி அவள் ஒரு மேஜராகலு}.?
அவர் தனது கேள்விகளைக் கேட்டு, அழுது ஆறுவதற்கு அவரது மகளின் வித்துடல் அங்கே வரவில்லை. அவரின் மகளை அறிந்தவர்கள் வந்தார்கள். அந்தச் சண்டையில் அவரது மகள் வெளிக்காட்டிய ஆற்றலைச் சொன்னார்கள்.
என் மகளா? என் மகளா?
கேள்வி அவரிடம் மட்டுமல்ல அவரருகிலிருந்த திண்ணை மாநாட்டாளர்களிடமும்தான். அவர்களுக்கு எல்லாமே புரிந்ததுபோலவும் இருந்தது. ஒன்றுமே புரியாதது போலவும் இருந்தது. கொஞ்சக் காலமாகவே நாட்டில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் கேள்விகளுக்கும் ஆச்சரியங்களுக்கும் எப்போது இந்த அனைத்துக்கும் அப்பாற்பட்டவைகள் நிகழத் தொடங்க}ன அங்கயற்கண்ணி காலத்திலிருந்தா?
6
கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின அம்மா அழுது ஓய்ந்தபின் மகளை நினைத்து ஆச்சரியப்படத்தொடங்கினார்.
"நாப்பத்தைஞ்சு அடி ஆழக் கடலிலை தனியப் போனவளோ" அவ வளவு ஆழத்தில நிலம் இருட்டா இருக்குமே? என்னெண்டு போனவள்? என்னோடை இருக்கும்மட்டும் இரவில வீட்டுக்கு வெளியாலை போறதுக்கு நான் வேணும் அவளுக்கு. அவள்லு}லு} என்னெண்டு?"
அப்போதும் அருகிருந்து ஆச்சரியப்பட்டுக்கொண்டிருந்த திண்ணை மாநாட்டாளர்கள் இப்போது எல்லாவற்றையும் கடந்த நிலைக்கு, இயல்புநிலைக்கு வந்துவிட்டிருந்தனர்.
திண்ணையில் கூடியிருந்து கதைத்துக் கொண்டிருந்தவர்களின் கவனம் வீட்டுக்குள் கேட்ட சத்தங்களால் கலைந்தது. நிலத்தில் தடியால் அடிக்கும் ஒலி.
அவர் திடுக்கிட்டு எழும்பினார். ஏதோ புூச்சி பொட்டோ? இவன் சின்னவன் கண்டுவிட்டு அடிக்கிறானோ? பெரியபிள்ளை மூலை மேசையில் இருந்து படிக்கிறாள். பயந்துவிடப் போகிறாள்.
பாய்ந்தடித்து வீட்டினுள் ஓடியவர் திடுக்கிட்டு அலறினார். குறை உயிரில் கிடந்த பாம்பைத் தடியில் து}க்கியபடி மகள் வந்து கொண்டிருந்தாள்.
"மண்ணெண்ணையை எடுத்து வாங்கோ. கொழுத்துவம்" என்றாள்.