06-21-2003, 09:03 PM
தமிழ் மக்களைச் சீண்டுவது சமாதானத்திற்கான வழியாகாது!
ஜெயராஜ்
புhPந்துணா வு உடன்படிக்கையின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான கைது நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருக்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்த}ன் கீழ் மத்திய வங்கிக் குண்டு வெடிப்பு வழக்கில் தீh ப்புக் கூற நீதிமன்றம் காட்டிய அவசரம் ஏன்? அரசாங் கத்தின் சமாதான முயற்சிகளுக்கு நீதிமன்றம் போட முயன்ற முட்டுக்கட்டையா? அன்றி அரசாங்கம் விடுதலைப் புலிகள் மீது செலுத்த முனையும் அழுத்தமா?
தமிழ் மக்களின் உணர்வுகளை சீண்டுவது போன்றும், அவமதிப்பது போன்றும் உள்ளது கொழும்பு மேல் நீதிமன்றம் மத்திய வங்கி குண்டு வெடிப்பு தொடர்பாக வழங்கியிருந்த தீர்ப்பு. இத்தீர்ப்பானது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கு 200 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அறிவிப்பதாகவுள்ளது.
விடுதலைப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிச் செல்கின்றவர்களுக்கு ஒடுக்கு முறை அரசுகள் நீண்ட கால சிறைத்தண்டனைகள் அறிவிப்புச் செய்வதும் மரணதண்டணைகளை விதிப்பதும் வரலாற்றில் புதியதொன்றல்ல. இதில் சிலர் தண்டனையை அனுபவிப்பதும் சிலர் தண்டனைக்கு உட்படும் வாய்ப்பற்று பின்னர் தேசிய விடுதலை வீரர்கள் என ஏற்றுக் கொள்ப்படுவதும் வரலாற்றில் பல இடங்களில் காணக்கூடியதொன்றே.
இந்த வகையில், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குச் சிறீலங்கா நீதிமன்றம் விதித்த தண்டனையானது நடைமுறையில் சாத்தியப்பாடற்ற ஒன்றே. ஆயினும் இத்தீர்ப்பானது சிறீலங்கா அரசின் நடவடிக்கைகள் குறித்து தமிழ் மக்களுக்கு பலத்த ஏமாற்றத்தையும் சீற்றத்தையும் கொடுக்கும் ஒன்றாகியுள்ளது.
இதனை வெளிப்படுத்தும் வகையில் தமிழர் தாயகமெங்கும் தமிழ் மக்கள் பெரும் கண்டனப் பேரணிகளையும் கூட்டங்களையும் நடாத்தி வருகின்றனர். தமிழ் மக்கள் இதற்கு அப்பால் தமது சீற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதற்கு தற்போதைய அரசியல் சூழ்நிலையே காரணமாகும். ஆனால் ஆட்சியாளர்கள் இவ விடயத்தில் பொறுப்புணர்வுடன் செயற்படுவதாகத் தெரியவில்லை.
திரு. பிரபாகரன் அவர்கள் தமிழ் மக்களின் தேசியத் தலைவர் என்ற நிலையில் இருப்பவர் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் அவரின் தலைமையிலேயே முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. இதனை ஏனைய தமிழக் கட்சிகள் கூட ஏற்றுக் கொண்டுள்ளன. இந்நிலையில் தமிழீழத் தேசியத் தலைவருக்கு எதிரான நீதிமன்றத்தின் தீர்ப்பானது தேசியத் தலைவரை மட்டுமல்ல தமிழ் மக்களையும் சீண்டும் செயலாகும்.
மத்திய வங்கி மீதான தாக்குதல் நடத்தபட்ட சம்பவமானது ஒரு குற்றவியல் நடவடிக்கையல்ல, அது விடுதலைப் போராட்டம் தொடர்பான ஓர் போர் நடவடிக்கையாகும். இதனைக் குற்றவியல் நடவடிக்கை என்ற hPதியில் பார்ப்பது தவறாகும். ஏனெனில் போராட்டத்தின் நடவடிக்கையாகப் பார்க்கப்படுமானால் சமாதானப் பேச்சுக்களும் அரசியல் தீர்வு முயற்சிகளும் அர்த்தமற்றவையாகிவிடும்.
அரசாங்கத் தரப்பு நீதித்துறை தமது கடமையைச் செய்கிறது என்று கூறுவது இவ விடயத்தில் ஒருபொறுப்பற்ற, தட்டிக்கழிக்கும் நடவடிக்கை போன்றதாகும். ஏனெனில் நீதித்துறை இவ வரசாங்கத்தின் ஓர் அலகு என்பதும் இவ வரசாங்கம் இயற்றும் சட்டத்தின் அடிப்படையிலேயே நீதித்துறை செயற்பட்டு வருகின்றது என்பதுமே யதார்த்தமாகும்.
அது மாத்திரமல்ல, நீதித்துறையின் செயற்பாடானது நாட்டின் முக்கிய பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க அரசாங்கம் மேற்கொள்ளும் சமாதான முயற்சிகளுக்கு குந்தகமானதாக அமைதல் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதொன்றுமல்ல. சட்டம் தமது கடமையைச் செய்தல் என்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் நாட்டின் அமைதியும், சமாதானமும் ஏற்படுவதை சட்டத்தின் பேரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பாதிப்பாக இருப்பது வரவேற்கத்தக்கதாக எவ வாறு இருத்தல் முடியும்.
இதற்கும் மேலாக பல நு}ற்றுக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கையில் இவ வழக்கில் நீதித்துறை குறிப்பாக இவ வழக்கை விசாரித்த நீதிபதிகள் விரைவு காட்டியது ஏன் என்பது கேள்விக்குரியதொன்றே. இவ வழக்கின் தீர்ப்பானது இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில் மேற்கொள்ப்படும் சமாதான முயற்சிகளுக்கு குந்தகமானதாக அமையும் என நீதிபதிகள் உணரத்தவறியது ஏன்?
நீதித்துறை இவ வழக்கில் விசேட கவனம் செலுத்தி தீர்ப்புக்கூற அவசரம் காட்டியதெனின் அரசாங்கமானது இவ விடயத்தில் அக்கறைகாட்டி இத்தீர்ப்பு வெளிவருவதை தாமதித்து இருக்கலாம். இதுவொன்றும் புதிய வழிமுறையல்ல. ஆட்சி அதிகாரங்கள் கைமாறும் போது தனிப்பட்ட குற்றவியல் வழக்குகளே கிடப்பில் போடப்படுகையில் அரசியல் தொடர்புடைய வழக்குகளை நாட்டின் நலன் கருதி தாமதப்படுத்துதல் என்பது மக்கள் விரோதச் செயலாக ஆகிவிடமாட்டாது.
இந்த வகையில் பார்க்கையில் அரசாங்கமும் பொறுப்பற்ற hPதியில் செயற்பட்டதாக கருதவே இடமுண்டு. இதனால் அரசாங்கம் சமாதான முயற்சிகளில் காட்டும் அக்கறை குறித்துச் சந்தேகமும் கேள்வியும் எழும்புவது தவிர்க்க முடியாததாகிறது. ஏனெனில் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது ஒரு வகையில் அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு உடன்பாட்டிற்கு விரோதமானதும் கூட.
புரிந்துணர்வு உடன்பாட்டின் பிரகாரம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான கைதுகள் இடம்பெறுவது நிறுத்தப்படுகின்றன. ஆனால் ஏற்கனவே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கு இச்சட்டத்தின் கீழ் தண்டணை வழங்குவதை புரிந்துணர்வு உடன்பாடு தடுத்து நிறுத்தாது விடினும் இச்சட்டத்தை பயன்படுத்த முனைவதானது வரவேற்கத்தக்க சமாதான முயற்சிகளுக்கு அனுசரணையான நடவடிக்கையை மேற்கொள்வதாக இருக்கமாட்டாது.
ஏனெனில் பயங்கரவாதத் தடைச்சட்டமானது மனித அடிப்படை உரிமைகளுக்கு மாறறான மக்கள் மீதான ஒரு ஒடுக்குமுறைச் சட்டம் என ஏற்கனவே பல தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றாக உள்ளது. இச்சட்டம் ஒழிக்கப்படும் பட்சத்திலேயே மக்களுக்கு நீதி கிடைக்கப்பெறும் என்பது பொதுவான அபிப்பிராயமும் ஆகும்.
ஆனால் இச்சட்டத்தின் கீழ் தீர்ப்பொன்று வெளிவருவதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளமையானது தற்போதைய அரசியல் சூழ்நிலையைப் பாதுகாக்க அது முற்படவில்லையோ? என்ற சந்தேகத்தை தோற்றுவிப்பதாகின்றது. அவ வாறு இல்லாவிடில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மீதான தீர்ப்பொன்றிற்கு அரசாங்கம் தேவை ஏற்பட்டிருக்கமாட்டாது.
ஆட்சியாளர்கள் தமது தேவைகளுக்கேற்ப நீதித்துறையை பயன்படுத்துவது என்பது ஆரோக்கியமானதொன்றல்லதான் ஆனால் ஆட்சியாளர்கள் தமது நோக்கங்களை ஈடேற்றிக் கொள்வதற்காகவே பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்றவற்றை உருவாக்கி நீதிமன்றங்களைக் கொண்டு அமுல்ப்படுத்தி வருகின்றனர் என்பதே யதார்த்தமாகும். இந்த வகையிலேயே 1979 யுூலையில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் ஓர் தற்காலிக சட்டமாக, ஏற்பாடாகவே கொண்டு வரப்பட்டது. தற்பொழுதும் அதே நிலையிலேயே அது தொடர்கின்றது. ஆனால் இச்சட்டத்தினால் பல ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் யுவதிகள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
ஆனால் இச்சட்டம் மனித அடிப்படை உரிமைகளுக்கு மாறானது என்பதும் ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல, நீதித்துறைக்கும் நீதிபதிகளுக்கும் தெரியாததல்ல. ஆகையினால் அதன் பிரகாரம் தீர்ப்பு வழங்கப்படும் போது அது நீதிக்குப் புறம்பானது, மனித உரிமைகளுக்கு மாறானது என்பது அறியப்பட முடியாததொன்றாக இருக்க முடியாது. இந்நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்புக்களை அவசரமாக வழங்க நீதிமன்றங்கள் மீதே சந்தேகங்கள் தோன்றுகின்றன.
அதே போன்றே சமாதான முயற்சிகளில் தீவிர அக்கறையுடன் செயற்படுவது போன்று செயற்பாடுகளை மேற்கொள்ளும் அரசாங்கம் புரிந்துணர்வு உடன்பாட்டின் கீழ் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெறுவது தவிர்க்கப்பட்டுள்ள நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தீர்ப்புக்கள் வழங்கப்படுவதையும். பயங்கரவாத தடைச் சட்டத்தையும் இல்லாது ஒழித்து விட முயற்சிக்காது அதனை வைத்துக்கொள்ள முற்படுவதும் அரசாங்கம் மீதான சந்தேகங்களுக்கு காரணமாகியுள்ளது.
ஆனால் அரசாங்கத்தின் இச்செயற்பாடுகள் தமிழ் மக்களின் உணர்வுகளை சீண்டுவதாக அமைவது சமாதான முயற்சிகளுக்கும் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கைக்கும் ஏற்றதல்ல. தமிழ் மக்கள் கடந்தகால சிங்கள ஆட்சியாளர்களால் கசப்பான அனுபவங்கள் பலவற்றைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இதனால் அவர்கள் மீதான நம்பிக்கையும் அடிமட்டத்திலேயே உள்ளது. ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது அதற்கு சற்று மாறுபாடான சற்று மேம்பட்ட விதத்திலேயே அவர்கள் அபிப்பிராயம் கொண்டுள்ளனர். இதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதுகாத்துக் கொள்வதானால் தமிழ் மக்களின் உணர்வுகளை கிளறிவிடும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தல் வேண்டும்.