06-21-2003, 09:02 PM
சாம்பலும் குருதியுமாகிய நிலம் இன்னும்......
அன்ரன் அன்பழகன்
சிதையுண்ட
காலத்தின்
ரணங்களை
மௌனத்துள் அரைத்து
புன்னகைக்கிறது நிலம் (அநாமிகன்)
மின்னும் கருமையில் நீண்டு நெடுத்து நிலங்களை இணைக்கிறது. ஏ-9 நெடுஞ்சாலை. மெல்லென நகரும் இப்போதைய பேச்சுவார்த்தையின் இமாலயச் சாதனைகளில் ஒன்றென இச்சாலை இணைப்பும் ஊடகங்களினூடே பேசப்பட்டது. இனிவரும் மழைகாலத்தில் இவ வீதியின் மினுமினுப்பு எப்படியாகுமோ என்பது ஒரு புறமிருக்க இவ வீதிக்கு இருமருங்குமுள்ள வன்னிப் பெருநிலப் பரப்பில் எப்பக்க வீதிகளில் திரும்பினாலும் உள்வ்திகளில் எழுகின்ற தூசுப்படலம் ஒருவேளை கார்காலத்தில்இல்லாமல் போகலாம். ஆனால் வீதிகளில் உருவாகி இருக்கிற பள்ளங்கள் இன்னும் ஆழமாகிப்போய் விடும் என்பதே உண்மையாகும். இப்போதே இவ வீதிப் பள்ளங்களில் விபத்துக்குள்ளானவர்களின் பட்டியல் நீளமானது. விபத்தினால் காயமடைந்தவர்களுக்கான சிகிச்சைகள் இப்போதும் தொடர்கிறது. வீதிகளுக்கான சிகிச்சை எப்போது என்பதுதான் தெரியவில்லை.
இந்த ஊர்களுக்குப் பெயர் வைத்தவர்கள் தீர்க்கதரிசிகள் என்றார் ஒரு அன்பர். ஏனென்று கேட்டதற்கு மழை காலத்தில் இந்த வீதிகள் எல்லாம் வாய்க்கால்கள் ஆகி விடும் என்பதை முன்னுணர்த்துவது தானே இவற்றுக்கு எட்டாம் வாய்க்கால். பத்தாம் வாய்க்கால் என முன்னரே பெயரிட்டனர் என்றார். குளக்களின் பெயா களினால் குறிக்கப்படும் ஊர்களுக்கு என்ன பஞ்சமா? நல்ல வேளை இடங்களின் பெயர்களில் ஊர்கள் இல்லாமல் போனது வீதிகளே திருத்தப்படாத நிலையில் ஊடகங்களில் அபிவிருத்தி சூறாவளியாய் சுழன்றடிக்கிறது.
வீதிகளே திருத்தப்படா நிலையில் ஏனைய விடயங்களான வைத்திய வசதிகள், கல்வித் தேவைகள் அடிப்படைப் போக்குவரத்து வசதிகள் பற்றிப் பேசி என்ன பயன். தொலைத்தொடர்பும், மின்சாரமும் இன்னும் இந்த மக்களுக்கு ஆடம்பரப்பொருட்களே கட்டிட நிர்மாணப்பொருட்கள். தொலைத் தொடா புச்சாதனப் பொருட்கள், மின்சாரக்கருவிகள் தாங்கிய பாரிய கொள்கலனைத் தாங்கிச்செல்லும் பாரஊர்திகளை வேடிக்கை பார்ப்பதும் மட்டுமே இவர்களுக்கு இப்போ பொழுதுபோக்கு. வேறு என்ன செய்யமுடியும்?
சமாதானப் பயணத்தின் பதாகையுடன் அபிவிருத்தி அரசகட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கே இப்போதும் போய்க்கொண்டிருக்கிறது. இங்கு மட்டுமேன் இடைக்கால நிர்வாக வரவைக் காட்டுகிறார்கள் என்பதுமட்டும் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.
கிளிநொச்சி இப்போது சர்வதேச அரங்கில் கொழும்புக்கு இணையான இடத்தைப் பெற்றுக்கொண்ட ஒரு குவிமையம். உலங்கு வானூர்தித் தரையிறக்கத்துக்கான காற்றுத் திசைகாட்டி நிரந்தரமாகவே பொருத்தப்பட்ட ஒரு மைதானத்தைக் கொண்ட ஓரு நகரமாகும்.
முன்பு வடநாட்டின் நெற்களஞ்சியம் எனச் சொல்லப்பட்ட ஒரு சிறுபட்டினம். போஸ்காட் கமக்காரர்களின் வங்கி நிலுவைகளை சரிந்து விடாது பேணிய ஒரு அட்சய பாத்திரம். பல சுவாரசியமான கதைகளைக் கொண்ட இந்தப் போஸ்காட் கமக்காரர்களிடம் வயல் கொட்டில்களில் கூலிகளாக இருந்தவர்களுக்கும் இப்போது பிரச்சினை இருபத்தைந்து முப்பது வருடங்களுக்கு மேலாக வயற்காட்டில் நிலைத்தொரு தமது உழைப்பைப் பிணைத்திருந்த இவர்களுக்கு மீள்குடியேற்ற உதவி கிடைக்குமா எனக் கேள்வியொன்றும் உண்டு.
ஒரு காலத்தில் வடக்கின் உற்பத்திகளான செத்தல் மிளகாய், சின்ன வெங்காயம், கருவாடு, வாழைக்குலை என்பவற்றை இங்கே வைத்துத்தான் தெற்கின் வியாபாரிகள் மலையகத்து மரக்கறிக்கும், குருநாகல் தேங்காய்க்கும் பரிமாறிக்கொண்டனர். வடபகுதியின் மிகப்பெரிய இரவு, பகல் வாராந்த சந்தையும் இங்கேதான் கூடியது.
86,90,91 இல் இராணுவ சப்பாத்துக்களால் சீரழிந்து போன இந்த நகரம் 1996 இல் 'சத்ஜய' வால் முற்றாகவே அழிந்து போனது. அப்போது அழிவின் எல்லைப் பரப்பு அகன்று விரிந்தது. அந்தக் காலங்களில்
சிலுவை யேசுவை
சிலந்தி மூடிற்று
பிள்ளையார் பலி பீடத்தில்
களிம்பு படர்ந்தது
மாமர ஊஞ்சல்கள்
இற்று வீழ்ந்தன
சருகடர்ந்த முற்றத்தில்
பாம்புகள் அரைந்தன. (ஹம்சத்வனி)
இழப்புக்கள். உடமைகளையும் கடந்து உயிர்களையும் காவு கொண்டது. உயிர்வாழ்வதற்கு வேறு வழியறியாது அயற்கிராமங்களை அண்டி வந்தவர்களில்100 ற்கு மேற்பட்டோரின் எலும்புக்கூடுகள் ஓயாத அலைகள் இரண்டின் பின் பல்வேறு இடங்களிலும் கண்டெடுக்கப்பட்டது. 184 போ இரண்டு வருடங்களில் காணாமல் போயிருக்கின்றனர். எலும்புக் கூடுகளின் நகரம் என அழைக்கப்பட இது காரணமாயிற்று. இவர்கள் ஒவ வொருவரிலும் உலகின் தலைசிறந்த பிரஞ்சுச் சிறுகதையாளன் மாப்பசானளின் "நல்ல நண்பர்கள்" சிறுகதையின் உணர்வலைகள் பட்டுத்தெற}த்தன. இந்த உணர்வலைகளைத் தாங்கி தன் கவிதைகள் ஊடேவெளிவந்தான் கவிஞன் ஒருவன்.
மனம் எகிறி, எகிறி
காற்றை விசாரித்தது.
ஊருக்குள் வந்து
உடல் சிதைந்து
கூடான உறவுகளின
கதை கூறமுடியாது
காற்று விம்மிற்று. (அநாமிகன்)
துயரத தை சுமந த மனிதர்கள தலை நிமிர்ந தனர். அவர்கள தோள நிமிர்த தி தலை உயர்த த வழிசமைத தது ஓயாத அலைகள இரண டு. இதுவே பின னாளின
வெற றிக கெல லாம வழிசமைக கும சமர்களின அத திவாரத தின மூலக கல லாயிற று. இந த வெற றியின உணர்வுகளும உளியாகி காதறியச செதுக கியது.
நம பிக கை துளிh த் துவிட ட மகிழ வழிக கும வாழ வை பலரும பாடினர். எனினும நிலமெங கும முளைத திருந த மிதிவெடிகள மக களின வரவையும வாழ வையும தாமதிக க வைத தது.
முற்றத்தில படர்ந்திருந்த
நெருஞ்சிகளின் சாம்பலை
அள்ளிச் சென்றது- காற்று
அச்சம துறந்த ஆட்களின்
பாடலில் நிரம்பி வழிந்தன -வெளிகள்.
(அன்ரன் அன்பழகன்)
உற்பத்தி மையமாய், வணிக மையமாய், போரின் மையமாய் திகழ்ந்த இந்தப் பட்டணம் இப்போது சமாதானத்தின் மையமாகவும் திகழ்கிறது. நகரமையத்தினூடே நெடுஞ்சாலை வழியே நகர்கின்ற பார ஊர்திகளைப் பார்த்தும், தன் புன்னகையை மௌனத்துள் கரைத்துக் கொள்கிறது இந்நிலம்.
இந்த நிலைமை வன்னிப் பெருநிலப்பரப்புக்கு மட்டுமல்ல. மட்டக்களப்பின் படுவான்கரைக் கிராமங்களுக்கும் திருகோணமலையின விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கும் பொதுமையாக அமைகிறது.