Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொழும்பு குண்டுவெடிப்பு EPDP யினரின் திட்டமிட்ட சதிமுயற்சி
#2
தினமுரசு அலுவலகம் முன் குண்டுவெடிப்பு , EPDP யினரின் திட்டமிட்ட சதிமுயற்சி அம்பலம்


Wednesday, 12 October 2005


அமைச்சர் டக்ளர், தேவாநந்தாவின் அந்தரங்கச் செயலாளர் அந்தோனி ஜெயராஜின் ஆடம்பர வாகனம் வெள்ளவத்தை நெல்சன் பிளேசிலுள்ள தினமுரசு அலுவலகம் முன்பாக 06ம் திகதி காலை குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டமை தெரிந்ததே.

மிகவும் பாதுகாப்பான ஓரிடத்தில் நேரம் கணித்து வைக்கப்பட்ட ஒரு குண்டால் வாகனம் தகர்க்கப்பட்டுள்ளது. அமைச்சு செயலரின் உதவியாளர் ஒருவர் சிறு காயங்களுக்குள்ளானதைத் தவிர வேறு குறிப்பிடும்படியான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதே இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயமாகும்.


ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் விடுதலைப்புலிகள் விஜயம் செய்வது மறு அறிவித்தல் வரும்வரை தடை செய்யப்படுவதாகவும், பயங்கரவாதப் பட்டியலில் அவர்களை சேர்ப்பது பற்றி தீவிரமாக ஆராய்ந்து வருவதாக ஐரோப்பிய ஒண்றியத் தலைமை நாடான பிரிட்டன் அறிவித்ததும் யாவரும் அறிந்த விடயமாகும்.

சிறிலங்கா அரசு மற்றும் அதன் ஊதுகுழல்களின் தவறான பிரச்சாரங்களின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் தமிழர்களுக்கு எதிராக எடுத்துள்ள இந்த துர்ப்பாக்கியமான நிலைப்பாட்டிற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் EPDP யினராலும் அவர்களின் சமாதான விரோதச் செயற்பாடுகளுக்குக் காரணகர்த்தாக்களாக விளங்கும் இராணுவப் புலனாய்வுத்துறையாலுமே( MI) இக்குண்டுவெடிப்பு திட்டமிட்டுச் செய்யப்பட்டிருக்கிறது.

இவ்வேளையில், 6ம் திகதி காலை வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்செல்வன் அவர்களை சிறிலங்காவிற்கான நோர்வே நாட்டின் தூதுவர் கான்ஸ்பிரஸ்கர் அவர்கள் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இம் முயற்சியைக் குழப்பும் நோக்குடனும்,ஐரோப்பிய நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்கும் நோக்குடனும்,தமிழர்களுக்கு எதிராக மேலும் சர்வதேசத்தைத் தூண்டிவிடும் நோக்கத்துடனும் EPDP யினர் மேற்கொண்;ட இந்த சதித்திட்டம் தற்போது அம்பலமாகியுள்ளது.

"தனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை, எதிரிக்குச் சகுனம் பிழைக்க வேண்டும்" என்பது போல, தங்கள் வாகனம் போனாலும் பரவாயில்லை. புலிகளை எப்படியாவது ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்து விட வேண்டும் என்பதற்காக EPDP யினரால் மேற்கொள்ளப்பட்ட சதி நடவடிக்கையே தினமுரசு பத்திரிகை அலுவலகம் முன்பாக நடைபெற்ற வாகனத் தகர்ப்பு ஆகும். இச்சதி பற்றி ஏதுமறியாத அப்பாவி உதவியாளர் ஒருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
[No subject] - by வினித் - 10-12-2005, 10:01 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)