06-21-2003, 09:01 PM
மறுபடியும் நிகழும் ஒரு வருகை
பாணனுக்குப் பரிசாகப் போன சிறு நிலமே, யாழ்ப்பாணமே.
விடுதலை - உணர்வின் வேரையும் வீரியத்தையும் அக்கினிக்குஞ்சாக எப்போதும் தன் மடி சுமக்கும் பனங்காமத்து வன்னிமையே, பெரு நிலமே.
ஒரு வயிற்றில் பிறந்த இரு சகோதரிகள் போலவே உங்களில் எத்தனை வேறுபாடு.
நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும் என்ற அடமும், எவரோடும் சட்டென ஒட்டுவதும், அதே வேகத்திலேயே வெட்டுவதுமான துடுக்குத்தனமும் கொண்ட இளையவள் போன்றவள் யாழ்ப்பாணம்.
நினைத்ததைச் செய்வதற்கான காலம் வரும்வரை காத்திருக்கும் பொறுமையும், மனிதர்களை மிகச்சரியாக எடைபோட்டு அவரவர் இயல்புக்கேற்ப அவர்களைக் கையாழும் நிதானமும் திறமையும் பொறுப்புணர்வும் கொண்ட மூத்தவள் போன்றவள் வன்னிமை.
அவள் அழகானவள்.
இவள் அமைதியானவள்.
பார்ப்பவரை ஈர்ப்பவளாக இளையவளே இருந்தாலும், எல்லோருடைய மதிப்புக்கும் உரியவளாக எப்போதும் மூத்தவளே இருப்பதுண்டு.
எங்களுக்கும் இடையிடையில் சின்னவளோடு முறுகல் வரும். புறப்பட்டு மூத்தவளிடம் வந்து விடுவோம். அட! நாங்கள்தான் என்று இல்லை. சங்கிலியன் காலத்திலேயே அப்படித்தானாம். அவரும் ஒருமுறை தன் படையை அழைத்துக்கொண்டு மூத்தவளின் வீட்டுக்கு வந்துவிட்டார்.
சின்னவளுக்கு மனிதர்களை எடை போடும் நுட்பம் தெரியாது. சிரித்தபடி யார் வந தாலும், நல்லவர்கள்தான் அவளுக்கு. வீட்டிலுள்ளவர்களிடம்தான் அவளுக்குவாய். வெளியாட்களிடம் தேன்தான். வருபவர்களுக்கும் அவளை விட்டுப்போக மனம் வராது. அவளின் முகமறியாதவர்களும் அவள் பற்றித் தாமறிந்த கதைகளால் ஈர்க்கப்படுவர். கப்பலைக் கட்டிக் கொண்டாவது புறப்பட்டுவிடுவர்.
போர்த்துகேய காலத்திலிருந்தே இதே சிக்கல்தான். அதற்கு முந்தைய கதைகள் எனக்குத் தெரியவில்லை. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், ஆரியர்கள் என்று எல்லோருமே வந்த சில நாட்களிலேயே தம் சொந்த முகங்களைக் காட்டி அவளைப் புண்ணாக்க, கோபத்தில் கொதித்தெழும்பிச் சிலிர்க்கும் தன் மக்களை மூத்தவளிடம் அனுப்பிவிடுவாள்.
அவளுக்குத் தெரியும் அவர்களுக்கு அதுவே பொருத்தமான இடம் என்று. அவளுக்குத் தெரியும் அவர்களே தனது மீட்பர்கள் என்று. அவளுக்குத் தெரியும் தன்னுடனான அவர்களின் ஊடல் நிலையானதல்ல என்று. அவளுக்குத் தெரியும் தன்னிடம் வராமல் அவர்களால் இருக்க முடியாது என்று.
சின்னவளின் பிள்ளைகளிடம் மூத்தவளுக்கு பற்று அதிகம். தன்னிடம் இருப்பவற்றையெல்லாம் வாரிக் கொடுப்பாள். தனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் சொல்லிக் கொடுப்பாள். வாரிக்கொடுத்தாள். சொல்லிக் கொடுத்தாள்.
விளையாட்டுப் பிள்ளைகளாய் வருபவர்களையும் வீரத்தின் பிள்ளைகளாய் மாற்றும் வலிமை பெரியவளிடம் உண்டு. வீரர்களாக வருபவர்களையும் உரசி உரசி மேலும் கூர்மையானவர்களாய் ஆக்கும் வலிமை பெரியவளிடம் உண்டு. மாற்றினாள். ஆக்கினாள்.
நாம் உரம் பெற்றோம்.1987 இல் வந்தபோது நாம் உரம் பெற்றோம் 1996 இல் வந்தபோது ஒரு தடவை போல இன்னொரு தடவை இருப்பதில்லை.
கடைசியாகச் சின்னவளை நாம் 1996 இல் விட்டு வந்தோம். அடங்காச் சினத்தோடு வந்த எமக்கு கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் நகர்ப்புறப் போர் முறையைப் பழக்கினாள் பெரியவள். தன்னிடமிருந்த இரகசியங்களை எல்லாம் எமக்குச் சொன்னாள். மணலாற்றிலிருந்து பனங்காமத் தொங்கல்வரை காட்டுச் சண்டை பழக்கினாள். காட்டின் மர்மங்களை காட்டித்தந்தாள்.
நுளம்புகளை எதிர்க்கும் வலிமையை, மலேரியாவை வெல்லும் மனோபலத்தை, பசியை, பனியை, பகலவனை வெல்லும் பெரும் பலத்தைத் தந்தாள். எதுவுமே இல்லாமல் வாழும் வாழ்வை, கிடைப்பவற்றை மிகச் சரியாகப் பயன்படுத்தும் வாழ்வை எங்களுக்குப் பழக்கினாள். புறப்படும் போதெல்லாம் புூரிப்போடு வழியனுப்பினாள்.
பொன்னேரியில் விரையும் படகுகளில் அமர்ந்தபடி அவளுக்குக் கையசைத்தோம். பகைவனின் பிடியில் சிக்கி வேலிகளுள்ளும் மதில்களின் பின்னாலும் பதுங்கிக் கிடந்த இளையவளுக்கு சிறகுகளைச் சுமந்து சென்றோம். வழியனுப்பினாள்.
கைதடிப் பகுதிச் சண்டையெல்லாம் கடுமையானதுதான். வெளியான பகுதியில் பகைவர்களின் கடுமையான எதிர்ப்பின் நடுவே முன்னோக்கி ஓடினோம். விழ விழ ஓடினோம். எவரும் நிற்கவில்லை. வீழ்ந்தவர்கள் எல்லோருமே ஒரே விடயத்தைத்தான் சொன்னார்கள்.
"என்னை ஒருதரும் பாக்க வேண்டாம். விடாதை பிடி"
காயங்களோடும் பாரங்களோடும் முன்னோக்கி ஓடிக் கொண்டிருந்தவர்களின் காதுகள் ஒரே ஒரு கட்டளையையே உள்வாங்கிக் கொண்டன.
"விடாதை பிடி"
வீழ்ந்தவர்களின் கட்டளை அது.
வீழும்போது தாம் வழங்க வேண்டிய கட்டளையும் அதுவே.
"விடாதை பிடி"
லெப்h}னன்ட் அன்பினி, 2ம் லெப்ரினன்ட் தாயகி, 2ம் லெப்ரினன்ட் சிவமதி.
எல்லோரது கட்டளைகளும் கைதடி நாவற்குழி வெளியில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. கைதடிச் சந்தியில், நாவற்குழிப் பாலத்தின் தொடக்கத்தில் முடிவில் அமைக்கப்பட்டிருக்கும் பகைவர்களின் காப்பரண் சுவர்களோடு மோதி மோதி ஒலிக்கின்றன அவர்களின் குரல்கள்.
"விடாதை பிடி"
காற்று ஊவென்றிரைந்தது. அவர்களுக்குப் பயமாயிருக்கவில்லை. பரிதாபமாக இருந்தது. எத்தனை உயிர்கள் இந்த வெளியில் போயின. இவர்கள் இருக்கின்றார்களா, இல்லையா என்று அறிய வழியின்றி எத்தனை உயிர்கள் நித்தமும் வேகுகின்றன.
எங்கே புதைத்திருப்பார்கள்? தலை வாசல் பிள்ளையாருக்குப் பின்னாலா? முன்னாலுள்ள வயல் வெளியிலா? அல்லது எம் காலடியிலேயா?
கால்கள் கூசின. மண்வெட்டியை ஓங்கி நிலத்தைக் கொத்தக் கைகள் கூசின.
அவலத்தோடு கொலையுண்டவர்களினது சாவின் பின்னரான அமைதியை நாம் கலைத்துவிடப் போகின்றோமா?
"உறவுகளே, எங்களை மன்னியுங்கள்"
ஓங்கிய மண்வெட்டியோடு ஒவ வொரு முறையும் அள்ளுண்ட மண்ணில் எவரது எச்சங்களுமே இல்லை என்று உறுதி செய்தவாறே செம்மணி வெளியில் நிலையமைத்து முடிப்பதற்குள் மனதால் களைத்து விட்டோம். இன்னும் எத்தனை பேரை இப்படி இழக்கப் போகின்றாய் யாழ்ப்பாணமே?
அன்றைய சண்டை பெருஞ்சண்டை. விழுதெறிந்த ஆலமரக் கூடலுள் அமைக்கப்பட்டிருந்த தன் காப்பரணில் நின்றவாறு நிலைமையை நிதானமாகக் கணிப்பிட்டாள் மேஜர் சீத்தா. வலமும் இடமுமாக வயல்வெளிக்குள் அமைக்கப்படிருந்த ஏனைய காவல் நிலைகள், ஏற்கனவே மழைநீரில் ஊறிக்கிடந்த காவல் நிலைகள் பகைவரின் கடும் எறிகணை வீச்சால் பொத பொதத்து விழ, காயமடைந்தவர்கள் உடன் நின்றவர்களின் வித்துடல்களைச் சுமந்தவாறு விலகுவதைத் தவிர, வேறு வழியே இருக்கவில்லை.
எல்லோரையும் வெளியேறும்படி பணித்தாள் சீத்தா. எல்லோரையும் அனுப்பிவிட்டு, தன் காப்பரணில் தனித்து நின்றாள் சீத்தா. கூட நின்றவள் காயப்பட, அவளையும் போகுமாறு கண்டிப்பாகப் பணித்து விட்டு தனித்து நின்றாள் சீத்தா.
"தனியாக நிற்கவேண்டாம். உடனேயே பின்னுக்கு வா"
என்ற கட்டளைப் பீடத்திற்குப் பணிய மறுத்து, தனித்து நின்றாள் சீத்தா.
"நிறைய ஆமி வாறான். என்னை அவங்களுக்குத் தெரியேல்ல. எனக்கு அவங்களைத் தெரியுது. என்னட்டை 40மி.மீ ஸெல்லும் இருக்குது. ரைபிளும் இருக்குது. இப்ப இவங்களை விட்டா பிறகு அடிக்கிறது கஸ்ரம். நான் அடிபடப் போறன்"
புதையுண்டு போயிருந்த நானு}று பேருமாக சீத்தா பேரிட்டாள்.
கடைசி நிமிடத்தில் உயிர்த்துளிக்காக பகைவரிடம் இறைஞ்சிய அவலக் குரல்களையே இதுவரை சுமந்த காற்று,
"நான் வரமாட்டன். அடிபடப் போறன்"
என்ற சீத்தாவின் குரலைச் சுமந்து வீசத் தொடங்கிற்று. தலைவாயிற் பிள்ளையாரின் உடைந்த கோயிற் சுவருடன், அரைப்பனை உயரத்தில் நிமிர்ந்து நிற்கும் விளம்பரப் பலகையுடன் மோதி மோதி வீசும் காற்றில் அந்தக் கம்பீரமான குரல் எதிரொலிக்கின்றது.
"இப்ப இவங்களை விட்டா, பிறகு அடிக்கிறது கஸ்ரம்"
அது எமது கடைசிச் சண்டை. பலத்தைப் பெருக்குவதற்காய் பெருநிலத்திடம் மறுபடி வந்தோம். எங்கள் பெரும் பலத்தை தீச்சுவாலை எதிர் நடவடிக்கையில் காட்டியதால், அதற்கு முன் வந்த வெற்றி நிச்சயம் படையினரைத் தடுத்து வல்லமை காட்டியதால், கூண்டோடு கலைத்துக் கொடியேற்றியதால் திறந்த நெடும் பாதை வழியே உன்னிடம் வந்தோம் யாழ்ப்பாணமே.
திறந்த நெடும் பாதை வழியே உன்னிடம் வந்தோம் தலை நகரமே.
திறந்த நெடும் பாதை வழியே உன்னிடம் வந்தோம் வாவி நகரே.
பாணனுக்குப் பரிசாகப் போன சிறு நிலமே.
தாயக நீள் நிலத்தின் சிறு துளியே,
வருவோம்.
மறுபடி வருவோம்.
அடையாள அட்டைகளைக் காட்டியதாய் அல்லாமல், இனத்தின் அடையாளத்தை, வீரத்தின் அடையாளத்தை, தாயகத்தின் தனித்துவ அடையாளங்களைச் சுமந்ததாய் நிகழும் அந்த வருகை.
எமது கடல் எமது வயல்
எமது வெளி எமது குளம்
எமது நிலம் எமது வனம்
எமது நதி எமது சனம்
எமதெனவே எமதெனவே
எமதெனவே எமதெனவே
(நன்றி நிலாந்தன்)
என்ற பாடலை இசைத்தபடி, கொடியைச் சுமந்தபடி, தாயகத்தின் தனித்துவ அடையாளங்களைச் சுமந்தபடி
மறுபடி வருவோம் தலைநகரமே
மறுபடி வருவோம் வாவிநகரே
மறுபடி வருவோம் யாழ்நிலமே.