06-21-2003, 09:01 PM
அனுபவத்தின் உயிர்
-து}யவன்-
ஒன்றும் செய்யாமல் விடுவதிலும் ஏதாவது செய்வது நல்லது என்பதால் சிகிச்சையை ஆரம்பிக்க வேகமாகச் செயற்பட்டனர். தேவையான மாற்றுக் குருதி தயார் செய்து உபகரணங்களை ஒழுங்கு செய்து, மின் ஒளியைத்தயார் செய்து காயக்காரனை மேசையில் கிடத்தி சிகிச்சையை ஆரம்பிக்கையில் எல்லாமே பிந்திவிட்டது என்பது புரிந்தது. விழுப்புண்ணடைந்தவன் தனது இறுதி மூச்சுக்காக அவஸ்தைப்படத் தொடங்கிவிட்டான். மெல்ல மெல்ல ஆவி பிரிய அவன் துடிப்புக்கள் அடங்கிப் போகின்றன. வீரச்சாவு என்பது உறுதி செய்யப்படுகின்றது
நீரைக் கிழித்து விரைகிறது நீருந்து விசைப்படகு. கடூர இருளும் கருங்கடலும் கைகோர்த்துள்ளன. விசைப் படகில் மோதும் பேரலைகள் உள்ளிருப்பவர்களைத் து}க்கியடிக்கின்றது. அப்படகில் '50 கலிபர்' துப்பாக்கியொன்று பொருத்தப்பட்டுள்ளது. அதனைத் தயார் நிலையில் வைத்தபடி வலத்திசையை உற்று நோக்குகின்றாள் ஒரு பெண் கடற்புலி. அவளின் கால்களுக்கு அருகில் வலது கால் முழுவதும் P.ழு.P கட்டுடன் கிடத்தப்பட்டுள்ள போராளியொருவன். அங்கு காணப்படும் போராளி மருத்துவனும் ஏனைய சகலரும் வலத்திசையாலே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள். சுமார் ஒரு மைல் து}ரமளவில் நடைபெறும் கடற்சமர் இடையிடையே கடலில் தீப்பிளம்புகளைத் தோற்றுவிக்கின்றது. இருளைக் கிடையாகக் கிழிக்கும் ரவை மழையும், வானைப் பிரகாசமாக்கி நட்சத்திரங்களைக் கரைய வைக்கும் பரா வெளிச்சங்களும், படகில் இரைந்தபடியே கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கும் தொலைத் தொடர்புக்கருவியும், வலியில் முனகும் காயக்காரனும், கடல் நீரில் நனைந்து கடற்காற்றினால் சில்லிடும் உடல்களுமென கடற்சமர் சூடுபிடித்துள்ளது. இக் காயக்காரனை வன்னிப்பெருநிலம் கொண்டு செல்லவும். படைக்கல பரிமாற்றங்கள் செய்யவுமென, பாதுகாப்புக் கொடுத்து நிற்கும் கடற்புலி கலங்களிற்கும் கடற்படைக் கலங்களிற்கும் இடையேயான கடற்சமர் ஆரம்பித்துவிட்டது.
இதோ! இவர்களின் கடல் வியுூகத்தைஉடைத்து, பகைக் கலமொன்று நெருப்புத் துண்டங்களை வேகமாக உமிழ்ந்து வரும் இராட்சத முதலையென, அலைகளில் பாய்ந்து பாய்ந்து பக்கவாட்டமாக இவர்களை நோக்கி வருகின்றது. தனது ஆளுகையில் இருக்கும் இயந்திரத் துப்பாக்கியை அவள் அதனை நோக்கித் திருப்புகின்றாள். இவர்களின் சூட்டு வலுவோ பலமடங்கு குறைவானது. எனினும், சில கணங்களில் நேரடி வலுச்சண்டையொன்று மூழப்போகின்றது. முண்ணாணைச் சில்லிட வைக்கும் அச்சிலகண இடைவெளியில், இவ விரு கலங்களிடையே சீறிப்பாய்ந்து வந த கடற்புலிச சமர்க்கலமொன்று பகைக் கலத்தைப் போரிற்கு இழுக்கின்றது. அது தன் திசை மாற்றிச் செல்கின்றது. ஒரு காயக்காரனைக் காப்பாற்றவென சிலர் வீரச்சாவடையும், பலர் காயமடையும் உடற்சமர் தொடர்கின்றது. அச் சூழலிலும் அம்மருத்துவனின் மனவோட்டம் சில நாட்கள் பின் நோக்கி கடக்கின்றது.
1999 யுூலை 31, அதிகாலை அந்தத் திருமலை காட்டு முகாமில் பரபரப்புக் குறைந்து காணப்படுகின்றது. பெரும்பாலானவர்கள் பதுங்கித் தாக்குதல் ஒன்றைச் செய்வதற்காக இரவோடிரவாக நகர்ந்து விட்டிருந்தனர். திட்டமிட்டபடி சூரியக்கத}ர்கள் தெறிக்கும் நேரம் வீதிச் சோதனைக்கு வரும் பகைவர் மீது உயிர் பறிக்கும் தாக்குதல் தொடங்கப்படும். இவர்கள் தரப்பில் எவ வித இழப்புக்களும் ஏற்படாத வண்ணமே திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஏனெனில் அம்முகாமின் மூன்று திசைகளிலும், சில மைல் தொலைவில் தொடர் இராணுவ முகாம்கள் உள்ளன. நான்காம் திசையை கடல்வரையறுத்துள்ளது.
இச்சூழ்நிலையில் காயமடைபவர்களைக் காப்பாற்றி பராமரித்து வன்னிக்கு அனுப்புவதென்பது கற்பனை கடந்த கடிதங்களை உள்ளடக்கியதாகும். வேகமான நகர்த்திறனைக் கொண்டிருப்பதுடன், தற்காலிகமாக தங்க இடங்களை அமைத்து தங்குவதே இவர்கள் வழமையாகும். எதிரிக்குத் தொல்லை கொடுக்கும் தாக்குதல்களை அடிக்கடி மேற்கொள்ள வேண்டும். இதனால் பகைவனுடைய படைபலம் இம்மாவட்டத்தில் முடக்கப்படும். வன்னியை ஊடறுக்க முனையும் 'ஜெயசிக்குறுப்' படையினருக்கு வலுவுூட்டும் படைகள் இங்கிருந்து செல்வது தவிர்க்கப்படும். மேலும் இத்தாக்குதல் நடக்கும் இடத்தில்தான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு போராளியை எதிரி கொன்று அவன் தலையை வெட்டிச் சென்றிருந்தான். அதற்கான பதிலடியாகவும் இது அமைய வேண்டும். திடீரென இவர்களின் தொலைத் தொடர்புக் கருவிகள் உயிர் பெறுகின்றன. சண்டையின் விபரத்தைக் களமுனைத் தளபதி அறிவிக்கின்றார். இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட மற்றவர்கள் தப்பியோடிவிட்டார்கள் என இவர்கள் கைப்பற்றிய ஆயுதங்களுடன் எவ வித இழப்புக்களுமின்றி பின் வாங்குகின்றனர். களமருத்துவன் ஆசுவாசப் பெருமூச்சு விடுகின்றான். எதிரியின் இராணுவ மூளை இவர்கள் பின்வாங்கும் திசையைச் சரியாகக் கணித்திருக்க வேண்டும். பல முனைகளில் இருந்தும் ஒருங்கினைந்த எறிகணை வீச்சை செறிவாக மேற்கொள்கின்றான். முகாம் மீண்ட போராளிகள் கையசைப்பினு}டாகவும், புன்சிரிப்பினு}டாகவும் வெற்றியைப் பகிர்ந்தபடியே பதுங்கு குழிகளினுள் புகுந்து கொள்கிறார்கள். அப்பொழுது வந்து விழுந்து வெடித்த எறிகணையொன்று இருவரைக் காயப்படுத்தி விட்டது.
கணமும் தாமதிக்காது அவர்களை காப்பரண்களினுள் இழுத்துச் சென்றவர்கள் இரத்தப் பொருக்கைக் கட்டுப்படுத்துகின்றனர். மேலதிக சிகிச்சையினை இப்பொழுது செய்யமுடியாது. எறிகணை வீச்சு சற்றேனும் ஓய வேண்டும். கால்மணி நேரத்தின் பின்னர் காயங்களைக் களமருத்துவன் கவனமாகப் பரிசோதிக்கிறான். உடனடியாக இருவருக்கும் பெரிய சத்திர சிகிச்சைகள் செய்ய வேண்டும். ஒருவனுக்கு வலதுகால் முழங்காலிற்கு கீழாகச் சிதைந்து விட்து. மற்றவனுக்கு முதுகினைத் துளையிட்டுச் சென்றுள்ள எறிகணைச் சிதறல் வயிற்றறை உள்ளுறுப்புகளைத் தாக்கிவிட்டது.
தளபதிக்கு மருத்துவர் நிலைமையை விளக்குகின்றனர். அவர் அணிகளை மீள ஒழுங்கமைக்கின்றார். இரண்டாமவனின் வயிற்றறையினைத் திறந்துதான் மேலதிக சிகிச்சையினை மேற்கொள் வேண்டும். அதற்குத் தேவையான மருந்து இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தில், ஆதரவாளர் வீடொன்றின் குளிர்சாதனப் பெட்டியினுள் வைக்கப்பட்டுள்ளது. அதனை எடுத்த வருவதற்காக அணிகளை அனுப்ப வேண்டும். ஒரு பகல் நடந்து, இரவு இராணுவக் காவல் அரண்கள் கடந்து, ஊர்மனையினுள் புகுந்து, குறித்த மருந்தினை எடுத்து, மறுநாள் பகல் மீள வேண்டும். ஏதோவொரு வழியில் நிச்சயம் இராணுவத்தினரின் பதுங்கித் தாக்குதல்களை எதிர்பார்க்கலாம். அவ வாறு நடைபெறின் சிலர் இறக்கவோ, காயமடையவோ வேண்டி வரலாம். அவ வாறு நடந்தால்லு}லு}.. நினைக்கவே பயமாக இருக்கிறது. காயமடைதல் மருத்துவத் தேவைக்காகச் செல்லுதல், மீண்டும் காயமடைதல், மருத்துத்தேவைக்காகச் செல்லுதல், மீண்டும் காயமடைதல், மீண்டும்லு}லு}லு}லு} எனவொரு நச்சுவட்டமே தொடர் கதையாகிவிடும். எனினும் ஆள் எண்ணிக்கை மீதான இலாப நட்டக் கணக்கைவிட போராளிகளின் உளவியல் பலம் பேணப்பட வேண்டும். ஆதலால் துணைத்தளபதி தலைமையில் அணிகள் புறப்பட்டுவிட்டன.
இங்கு போராளி மருத்துவன் உதவியாளர்களுடன் தனது மணியை வேகப்படுத்துகின்றான். காட்டு மரம் ஒன்றின் கீழ் காட்டு மரங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட மாதிரிக் கட்டில் ஒன்றில் கால்க் காயக்காரனுக்கு சிகிச்சையை ஆரம்பிக்கின்றான். எவ வித அடிப்படை உயிர்காப்பு வசதியும் இல்லாமல் மயக்க மருந்து கொடுத்து சத்திர சிகிச்சை செய்யப்படுகின்றது. சாதாரண சூழலில் இவ வாறு செய்வது மருத்துவ விதிகளுக்கு முற்றிலும் முரணானது. ஆனால் அதுவே இங்கே விதியானது. சிகிச்சை நடைபெற்றுக்க கொண்டிருக்கும் போதே தேவையான மருந்துகள் பல்வேறு பகுதிகளில் உருமறைந்திருந்த மரப் பரண்களில் இருந்து எடுத்துவரப் படுகின்றன. போராளியொருவனில் இருந்து பெறப்பட்ட இரத்தமானது நேரடிப் பரிசோதனை மூலம் ணருங்கொட்டாமை உறுதி செய்யப்பட்டு இவனுக்கு ஏற்றப்படுகின்றது. புதிய சூழல் என்பதால் நுண்ணுயிர் கொல்லி மருந்துகளுக்கு தாக்குப்பிடிக்க வல்லமை பெற்ற கிருமிகளின் தொற்று தவிர்க்கப்படும். இது சாதகமான ஒன்று. வெட்டித் திறக்கப்பட்ட கால்க் காயத்திலிருந்து இரத்தப் பெருக்கை ஏற்படுத்தும் நாடி நாளங்கள் பிடித்துக்கட்டப்படுகின்றன. சிதைந்த தசை நார்கள் வெட்டி அகற்றப்படுகின்றது. என்பு சீராக்கப்பட்டு P.ழு.P போடப்பட்டு சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு செய்யப்படுகின்றது.
மறுபகுதியில் ஒரு தற்காலிகமாக சத்திர சிகிச்சைக்கூடம் 'பிளாஸ்டிக் ரெண்டினால்' அமைக்கப்படுகின்றது. அவ வேலை முடிவடைய சில மணித்தியாலங்கள் தேவைப்படும். சிறு மின் பிறப்பாக்கி மூலம் மின்சாரம் வழங்கப்படுகின்றது. தளபதி உட்பட அனைவரும் பம்பரமாகச் செயற்படுகின்றனர். இதனுள்தான் வயிற்றறையைத் திறக்கும் சிகிச்சையைச் செய்யலாம்.
வயிற்றறைக் காயத்திற்குட்பட்டவனின் நிலையோ மோசமடைந்து கொண்டு செல்கின்றது. நிமிடங்கள் ஒவ வொன்றும் நாட்களாகக் கழிகின்றது. "டொக்டர் நான் தப்புவனா" ஏன் எனக்கு இன்னும் ஒப்பிரேசன் செய்வில்லை?? போன்ற அவனின் கேள்விகள் இவனைக் குடைந்து எடுக்கின்றது. மருத்துவனோ அவன் தலையைத் தடவிய வண்ணம் "இன்னும் கொஞ்ச நேரத்தில தொடங்கிடுவம். மருந்துக்குப் போனவையள் வந்து கொண்டிருக்கினம்" எனத் தன்னாலான பொய்களைச் சொல்கின்றான். அவனுக்கு வாயினால் எதுவும் அருந்தக் கொடுக்கவில்லை. திரவ ஊடகத்தின் மூலம் உடலின் அனுசேபத் தேவையானது புூர்த்தி செய்யப்படுகின்றது. நாடித்துடிப்பு வீதம், குருதியமுக்கம், உடல் வெப்பநிலை என்பன அளக்கப்பட்டு அட்டவணைப் படுத்தப்படுகின்றது. மருத்துவரோ காயக்காரனுக்கும் அருகிலேயே அமர்ந்திருக்கிறார். சென்றவர்கள் ஊரினுள் நுழையும் நேரம் நெருங்கிவிட்டது. நேரம் மென்னிருள் கடந்து ஆழமான பகுதிக்குள் செல்கின்றது. திடீரென சத்தங்களுடன் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. ஒருவரினது முகத்திலும் ஈயாடவில்லை. அவர்களுக்கு அடி விழுந்துவிட்டது. இவர்கள் கலைந்து சென்றிருப்பார்கள்.
சிலர் எதிர்பாராத நிகழ்வுகளே வழமையாகி விட்ட வாழ்க்கைக்குப் பழகியவர்கள். ஆழ்ந்த யோசனையுடன் காத்திருக்கின்றனர். நள்ளிரவு தாண்டிவிட்டது மீண்டும் தொடர்பு சாதனத்தில் தொடர்பெடுத்த உபதளபதி நிலமையை அறிவிக்கின்றார். தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தாங்கள் காயமோ உயிரிழப்போ இன்றித் தப்பிவிட்டதாகவும், எதிரி உசார் அடைந்துவிட்டதால் தாங்கள் மீண்டும் மீண்டும் முயற்சித்தும் முடியவில்லை எனவும், மறுநாள் இரவு மீண்டும் முயற்சிப்பதாகவும் கூறுகின்றார். தளபதி மருத்துவரிடம் என்ன சொல்வது எனக் கேட்கிறார்.
நிலைமை கையை மீறிவிட்டது. ஏற்கனவே தாமதமாகிவிட்டது. இன்னுமொரு நாள் அவனால் தாக்குப் பிடிக்க முடியாது. இதனை அவனுக்கு தெரிவிக்கவும் இயலாது சாதாரண மயக்கமருந்தைக் கொடுத்து சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டியதுதான். அவ வாறுவயிற்றறையை வெட்டித் திறந்தால் காற்றடித்த பலு}னாக குடல்கள் வெளித்தள்ளிக் கொண்டு வரும். அவற்றை மீண்டும் உள்ளே செலுத்தி சிகிச்சையை முடிப்பது என்பது மிகவும் கடினமானது. எனினும் அதனைத்தான் செய்ய முடியும். அவ வாறு செய்வதை சத்திர சிகிச்சைக்குரிய மருத்தியல் புத்தகங்கள் அனுமதிக்கின்றனவா எனத் தேடித் தேடிப் பார்க்கின்றான். புத்தகங்களைப் பார்த்தும் காயத்துக்குள்ளானவனின் உடல் நிலையைப் பரிசோதிப்பது தளபதியிடம் நிலைமையைக் கேட்பது என மாறி மாறி செயற்பட்டுக் கொண்டிருந்தவன். அவரின் கேள்விக்கு நாங்கள் இருக்கிறதைக் கொண்டு தொடங்குவோம். அவர்களை வரச்சொல்லுங்கள் என்கிறான்.
ஒன்றும் செய்யாமல் விடுவதிலும் ஏதாவது செய்வது நல்லது என்பதால் சிகிச்சையை ஆரம்பிக்க வேகமாகச் செயற்பட்டனர். தேவையான மாற்றுக் குருதி தயார் செய்து உபகரணங்களை ஒழுங்கு செய்து, மின் ஒளியைத்தயார் செய்து காயக்காரனை மேசையில் கிடத்தி சிகிச்சையை ஆரம்பிக்கையில் எல்லாமே பிந்திவிட்டது என்பது புரிந்தது. விழுப்புண்ணடைந்தவன் தனது இறுதி மூச்சுக்காக அவஸ்தைப்படத் தொடங்கிவிட்டான். மெல்ல மெல்ல ஆவி பிரிய அவன் துடிப்புக்கள் அடங்கிப் போகின்றன. வீரச்சாவு என்பது உறுதி செய்யப்படுகின்றது.
களமருத்துவ வாழ்வில் அவன் சந்தித்த தோல்வியின் பட்டியல் நீள்வதாக உணர்கின்றான். தன்னுணர்வுகளை முகத்தில் வெளிக்காட்டாமல் தளபதிக்கு விடயத்தைச் சொல்கின்றான். மறுநாள் வீரமரண நிகழ்வு நடந்தது. இவர்கள் இருக்கும் பகுதியிலேயே அவ வித்துடல் விதைக்கப்படுகின்றது. தப்பியிருப்பவனைத் தொடர்ந்து அங்கு வைத்துப் பராமரிக்க முடியாது. வன்னிக்கு அனுப்ப வேண்டும். அதற்கு இரண்டு நாள் நடந்து கடற்கரை செல்ல வேண்டும். இன்றிரவு நித்திரை செய்தால்தான் நாளை காலை நடக்கத் தொடங்கலாம். இவனை ஏதோவொரு குற்றவுணர்வு கொல்கின்றது.
"இப்படியான இடங்களில் பயன்படுத்தக் கூடியவாறு, குளிர்சாதனப் பெட்டி தேவைப்படாத வகையில் மருந்து தயாரித்து இருக்கமாட்டார்களா?" மீண்டும் இரவு புத்தகங்களைப் புரட்டுகின்றான். அவன் தேடியதைக் கண்டுகொள்கின்றான். குறித்த மருந்து இருந்திருந்தால் இம்மரணத்தைத் தவிர்த்திருக்கலாம். மேற்படி மருந்தைக் குறிப்பெடுத்தவன் துறைசார் பொறுப்பாளரிடம் அறிவித்து வெளியிலிருந்து இதனை எடுப்பிக்க வேண்டும், என எண்ணுகின்றான். அப்பொழுது "டொக்டர்" எனக் கூப்பிட்டபடியே வரும் தளபதி சொல்கிறார். "களைத்துப்போயிருப்பீர்கள், இரண்டு நாள் தொடர்ந்து நடக்க வேணும், நித்திரை செய்யலாம்தானே!" என, இவனிடமிருந்த வெறுமை கலந்த சிரிப்பொன்று வெளிவர முயற்சிக்கின்றது.