10-11-2005, 09:57 PM
<b>பூகம்பம்: பாகிஸ்தானில் உயிரிழப்பு எண்ணிக்கை முப்பத்து மூவாயிரத்தைத் தாண்டியது.</b>
காஷ்மீரில் சனிக்கிழமை இடம்பெற்ற பூகம்பத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து பாகிஸ்தான் அரசினால் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ தொகை கடுமையாக அதிகரித்துள்ளது.தற்போது இந்த எண்ணிக்கை முப்பத்து மூவாயிரத்தைத் தாண்டியுள்ளது.
ஆனால் நான்கு நாட்கள் கடந்து விட்ட நிலையில் உதவிகள் இன்னமும் சில பகுதிகளுக்கு சென்று அடையவில்லை. அத்துடன் கடும் குளிரும், தொடர்மழையும் பிற பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகளைப் பாதித்துள்ளன.
பூகம்பத்தின் மூடப்பட்ட சில வீதிகளில் இடிபாடுகள் அகற்றப்பட்ட போதிலும், அவை மீண்டும் புதிய மண் சரிவுகளால் மூடப்பட்டுள்ளன.பாகிஸ்தானின் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் உள்ள பாக் பகுதியில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர், அங்கு மிகவும் சிறிய அளவிலான உதவிகளே வந்தடைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
நகரில் உள்ள பல பிள்ளைகள் அவர்களது பள்ளிக்கூடங்கள் இடிந்து வீழ்ந்ததனாலேயே கொல்லப்பட்டதாகவும், இன்னும் மீட்கப்படாத நூற்றுக்கணக்கான சடலங்கள் இடிபாடுகளில் அகப்பட்டுக் கிடப்பதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.
மலைகளின் உச்சியில் உள்ள பல பிந்தங்கிய, சென்றடைய முடியாத கிராமங்கள் முற்றாகத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதகாவும், அங்கு வாழ்ந்தவர்களின் நிலைமை குறித்து எந்தவிதமான தகவல்களும் வரவில்லை என்றும் எமது செய்தியாளர் கூறுகிறார்.
<b>இந்திய நிர்வாக காஷ்மீரில் சாவு எண்ணிக்கை ஆயிரத்து முன்னூறு</b>
மீட்புப் பணிகளில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது
இந்தியாவின் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் பூகம்பத்தால் 1300 பேர் உயிரிழந்துள்ளதாக இன்று அந்தப் பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் கூறியிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட பல மலைப்பகுதிகளை சென்றடைய முடியாத நிலை நீடிப்பதால், இறந்தவர்களின் எண்ணிக்கை உயரக் கூடும் என்றும் இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்திய இராணுவம் நீர், உணவு மற்றும் மருந்துப் பொருட்களை சாத்தியமான இடங்களுக்கு அனுப்பி வருவதாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்தார்.ஆனால் சில கிராமங்களுக்கு உதவி எதுவும் போய்ச் சேரவில்லை என்றும் அவர் கூறினார்.
பூகம்பத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட யூர் நகரவாசிகள், மன்மொகன் சிங்கை கோபத்துடன் எதிர்கொண்டதாக அங்கிருந்த பிபிசி செய்தியாளர் தெரிவித்தார்.
உதவிப் பொருட்கள் வழங்குவதில் உள்ள குரைபாடுகள் தனக்குத் தெரியும் என்று கூறிய மன்மோகன் சிங் அவர்கள், தனது அரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வதாகத் தெரிவித்தார்.
<b>பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 27 கோடி டொலர்கள் தேவை: ஐ.நா.மன்றம்</b>
உணவுக்காக அலைபாயும் பாதிக்கப்பட்ட மக்கள்
தெற்காசியப் பூகம்பத்தின் அழிவுகளால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 27 கோடி டொலர்கள் தேவை என்று ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
உணவு, போர்வைகள், குளிர்காலக் கூடாரங்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் ஆகியவையே அவசரமாகத் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உதவிகளுக்கான அதிகாரி ஒருவர் ஜெனிவாவில் கூறியுள்ளார்.
காஷ்மீர் பிராந்தியத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும், அத்துடன் 10 லட்சம் பேருக்கு அதிமுக்கியமாக உடனடி தேவைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
நீண்ட கால மீள்கட்டமைப்புக்கு மேலதிக நிதி தேவைப்படும் என்று தெரிகிறது. மேலும் இந்த பூகம்பத்தில் குறைந்தது ஆயிரம் மருத்துவமனைகள் நிர்மூலம் ஆகியுள்ளதாக ஐ.நா. நம்புகிறது.
நன்றி பிபிசி தமிழ்

<b> .. .. !!</b>