10-11-2005, 05:32 PM
வணக்கம் நண்பன்.
கவிதைகள் நன்று.
உயரங்கள் தொடு, நிழல், அன்பானவளுக்காக ஆகிய கவிதைகள் படித்தேன். இதில் உயரங்கள் தொடு கவிதையை ஏற்கனவே வேறு தளத்தில் படித்த ஞாபகம்.
மகளுக்கு நல்ல நண்பனாய், அவள் உயரவும், உச்சங்கள் தொடவும் ஆதரவாய் - அன்புகாட்டும் உறவாய் -தந்தையாய் இருந்து வடித்த கவிதை நன்று.
நிழல் கவிதை உணர்வுபூர்வமானது என்கிற போதிலும், சிந்தனையைத் தூண்டுவதாய் அமைகிறது. அதில் 5ம் 6ம் இலக்கங்களில் உள்ளவற்றை கடைசியாய் போட்டு ஒழுங்கை மாற்றினால் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்பது எனது கருத்து.
அன்பானவளுக்காய் கவிதை சில வரிகளில் காதலின் தேவை எதுவென உணர்த்துவதாய் அமைந்துள்ளது. வாழ்க்கைத் துணையாய் இணைவதென்பது ஒரு இலக்கை நோக்கிய இணைந்த பயணத்துக்காய் என்பது அழகாக வெளிப்பட்டிருக்கிறது கவிதையில்.
நன்றி
தொடர்ந்தும் வாசிப்பேன்.