Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொழும்பு குண்டுவெடிப்பு EPDP யினரின் திட்டமிட்ட சதிமுயற்சி
#1
கொழும்பு வாகனக் குண்டுவெடிப்பு ஒரு உள்வீட்டு வேலையே!
[செவ்வாய்க்கிழமை, 11 ஒக்ரொபர் 2005, 21:27 ஈழம்] [கொழும்பு நிருபர்]
டக்ளஸ் தேவானந்தாவின் அந்தரங்கச் செயலாளர் அந்தோனி ஜெயராஜின் ஆடம்பர வாகனம் வெள்ளவத்தை நெல்சன் பிளேசிலுள்ள தினமுரசு அலுவலகம் முன்பாக 06ம் திகதி காலை குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டமை தெரிந்ததே.


இது தொடர்பாகத் தற்போது கிடைக்கப்பெறும் தகவல்களின்படி, இது புலிகள் மீதான ஐரோப்பிய நாடுகளின் நிரந்தரத் தடைக்கான அழுத்தத்தைக் கொடுக்கும் ஒரு செயலாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உறுதியாகத் தெரியவருகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த இடமாகக் கருதப்படும் ஒரிடத்தில் மேற்கொள்ளப்பட்ட இக் குண்டுவெடிப்பின் போது, அந்தரங்கச் செயலரோ அல்லது வேறு யாருமே அங்கேயிருக்கவில்லையென்பதுடன், மேற்படி செயலர் அன்றைய தினம் தனது வாகனத்தைத் தவிர்த்து, பிறிதொரு வாகனத்தில் பயணித்ததாகவும் இங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கு விடுதலைப்புலிகள் பயணம் செய்வது மறு அறிவித்தல் வரும்வரை தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை வலுப்படுத்தி, நிரந்தரத் தடையொன்றை ஏற்படுத்துவதற்காகவே இந்தச் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் தெரியவருகிறது.

இதன் ஒரு கட்டமாக, ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகள் மீதான தடையை வலுப்படுத்த வேண்டும் எனவும், இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு புலிகளுடன் பேசுவது ஏற்ற பரிகாரமல்ல எனவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கும், செயலகத்திற்கும் டக்ளஸ் தேவானந்தா உத்தியோகபூர்வமாகக் கடிதமெழுதியுள்ளார்.

இவ்வாறான தமது செயற்பாடுகளிற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையிலேயே, ஈ.பி.டி.பி.யினராலும் அவர்களுடன் வழிகாட்டிகளான இராணுவப் புலனாய்வுத்துறையாலுமே இக்குண்டுவெடிப்பு திட்டமிட்டுச் செய்யப்பட்டிருக்கிறது என உறுதியாகத் தெரியவருகின்றது.

ஈ.பி.டி.பி. ஒரு அரச ஆயுதக்குழு என்பதும், அவர்கள் இராணுவத் துணைப்படைக்கான ஊதியத்தை சிறீலங்கா இராணுவத்திடம் இருந்து பெற்றுவருகிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


www.puthinam.com
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
கொழும்பு குண்டுவெடிப்பு EPDP யினரின் திட்டமிட்ட சதிமுயற்சி - by வினித் - 10-11-2005, 04:06 PM
[No subject] - by வினித் - 10-12-2005, 10:01 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)