10-10-2005, 07:14 PM
பூமி தட்டு மோதியதால் பூகம்பம் வெடித்தது:
இந்திய துணை கண்டம் நகர்ந்து பூமி தட்டு மோதியதால் பூகம்பம் வெடித்தது: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்
புதுடெல்லி, அக். 10-
பூமியானது சுனாமி தாக்குதல், புயல், பூகம்பம் என இயற்கை சீற்றங்களால் அடுத்தடுத்து அழிவை சந்தித்து வருகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தோனேசியா அருகே கடலுக்கு அடியில் உருவான பூகம்பம் காரணமாக சுனாமி பேரலைகள் ஏற்பட்டு பெரும் உயிர்ச் சேதத்தையும், பொருட்சேதத்தையும் ஏற்படுத் தியது.
அதன் பிறகு இந்தியாவில் அந்தமான் நிகோபார் தீவு களிலும், சுமத்ரா தீவு பகுதி யிலும் அடுத்தடுத்து லேசான நில நடுக்கங்கள் ஏற்பட்டு மக்களை பயமுறுத்தி வந்தது.
இப்போது லேசான நில நடுக்கங்கள் ஒன்று சேர்ந்து தாக்கியது போல் கடந்த சனிக்கிழமை இந்தியாவின் வடக்கு பகுதியையும் பாகிஸ்தானையும் பூகம்பம் தாக்கி மீண்டும் ஒரு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
சுனாமி தாக்கி ஓராண்டு நிறைவடைவதற்குள் மற் றொரு பூகம்பம் தாக்கி பேரழிவை ஏற்படுத்தியிருப்பது உலக மக்களை பெரிதும் அச்ச மடையச் செய்துள்ளது.
நவீன தொழில் நுட்பங் களுடன் எதற்கும் அஞ்சாமல் இருந்து வந்த அமெரிக் காவையே `காத்ரீனா', `ரீட்டா' என அடுத்தடுத்து இரு புயல்கள் தாக்கி நிலைகுலைய வைத்து விட்டது.
எந்த நேரத்தில் எந்த ரூபத்தில் இயற்கைச் சீற்றம் அழிவை ஏற்படுத்துமோ என்ற பீதி உலகம் முழுவதும் நிலவுகிறது.
ஒரு பக்கம் இயற்கை சீற்றம் நம்மை தாக்கினாலும் மறுபக்கம் புவியியல் நிபுணர்கள் இயற்கை சீற்றங்கள் குறித்து இடைவிடாமல் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
பாகிஸ்தானிலும், இந்தியா விலும் சனிக்கிழமை தாக்கிய பூகம்பம் எப்படி உருவானது என்று அமெரிக்க நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர். அவர் கள் வெளியிட்டுள்ள தகவல் மக்களை அதிர்ச்சி அடைய வைப்பதாக உள்ளது. அந்த தகவல்கள் வருமாறு :-
இந்திய துணைக் கண்டம் அமைந்துள்ள பூமித் தட்டானது ஆண்டுக்கு 4 செ.மீ. என்ற வீதத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.
இது யுரேஷியக் கண்டத்துக்கு அடியில் உள்ள பூமித்தட்டுக்குள் செல்கிறது. அப் போது அதற்கு நேராக மேலே உள்ள பூமியின் மேல் பகுதி உயர்ந்து அடுக்குகள் ஏற்படுகின்றன.
இதனால் உலகின் மிக உயரமான சிகரங்கள் இமயமலையில் உருவாகின்றன. பல்லாயிரக்கணக்கான ஆண்டு களாக இவ்வாறு மாற்றம் நிகழ்ந்து வருவதால் இமயமலை, காரகோரம் மலைத்தொடர், பாமீர் முடிச்சுப்பகுதி, ஹிந்துகுஷ் மலைத் தொடர் ஆகியவை உருவாயின.
இந்த இரு பூமித்தட்டுகளும் மோதிக் கொள்வதால் ஏற் படும் அழுத்தமானது மலையடிவாரப் பகுதியில் உள்ள பூமித்தட்டின் மேல் பகுதியில் அதிர்வுகளையும் பிளவுகளை ஏற்படுத்துகிறது.
சனிக்கிழமை ஏற்பட்ட பூகம்பத்துக்கு பூமித்தட்டுகளின் மோதலே காரணம். பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரின் தலைநகரான முசா பராபாத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் இந்த பூகம்பம் மையம் கொண்டு தாக்கியது.
இந்த இடம் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படும் பகுதியாகும். இதனால் அங்கு வளைவு வடிவப் பாறைகளும், சிறு சிறு குன்றுகளும் உருவாகியுள்ளன.
இந்த பூகம்பம் பூமியின் மேல் பரப்பில் இருந்து 10 கி.மீ. ஆழத்திலேயே உருவானதால் அதிக உயிர்ச்சேதம் ஏற்பட்ட தாக ஜப்பானிய பூகம்ப ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமிக்கு அடியில் மிக அதிக ஆழத்தில் ஏற்படக்கூடிய பூகம்பங்களால் அதிக சேதம் ஏற்படாது. லேசான அதிர்வுகள் மட்டுமே நிகழும். மேல் பரப்புக்கு அருகிலேயே ஏற்படும் பூகம்பங்களால் தான் சேதம் அதிகம் இருக்கும் என்றும் ஜப்பானிய ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள இமயமலை 5 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானது. இந்தியா- பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அமைந்துள்ள புவித்தட்டு யுரேஷிய தட்டுடன் மோதிக் கொண்டே இருப்பதால் அங்கு பூமியின் மேல் பரப்பு மட்டுமல்ல அதிக ஆழத்திலும் மோதல்கள் நடைபெற்று வருகிறது.
எனவே இது மீண்டும் பெரி தாக வெடிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அது மிகப்பெரிய பூகம்பமாக இருக்கும் என்றும் ஜப்பானிய ஆய் வாளர்கள் அதிர்ச்சயூட்டும் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மாலை மலர் தகவல்
http://www.maalaimalar.com/

.
.
.