10-10-2005, 04:22 PM
jeya Wrote:நண்பன், உங்கள் கவிதை வரிகள் அழகாக இருக்கிறது தொடர்ந்து தாருங்கள் ......
கவிதையின் வெளிப்பாடு இரு கூறுகளில் நிற்கும் - ஒன்று கவிதையின் புற வடிவம். இரண்டாவது கவிதையின் மையக் கரு.
புதியவர்களுக்கு - அதாவது ஒரு கவிஞனை முதன்முதலாக வாசிப்பவருக்கு - புற வடிவில் தான் கவனம் செல்லும். ஒரு பெண்ணின் புற அழகில் மயங்கும் ஒரு வாலிபனைப் போல. பிறகு தான் கவிதையின் உள்ளீட்டுக் குணமான கருப்பொருளைத் தேடும் படலம் ஆரம்பிக்கும். ஒரு பெண்ணின் அக அழகை நாடும் காதலன் போல்.
இங்கு புதிதாக எழுதுவதால் - முதலில் லகுவான கவிதைகளை வாசிக்கக் கொடுக்கலாம் என்றும் பின்னர் சிறிது சிறிதாக சிக்கலான கவிதை வடிவங்களைக் கொடுக்கலாம் என்றும் எண்ணம்.
தயார் படுத்திக் கொள்ளுங்கள் நண்பர்களே....
-----------------
-----------------
-----------------
-----------------
-----------------

