10-10-2005, 02:36 PM
iruvizhi Wrote:கருத்தம்மா மற்றும் பாஞ்சாலம் குறிச்சி இன்னும் பல இனிய தமிழ் திரைப்படங்கள் உள்ளன. கமலின் திரைபடங்கள் என்று பார்த்தால் பாரதிராசா மற்றும் பாலுமகேந்திரா போன்றவர்கலின் இயக்கத்தி வந்த திரைப்படங்களை மிகவும் ரசித்து பார்த்ததுண்டு. ஆனால் இப்போது கமல் குடுக்கும் படங்களோ. ஆர்வக்கோளாறால் அவரையும் மீறிய உணர்வுகலால் வெளிப்படும் இயலாமைகளே. ஆதலால்த்தான் அவர் சொல்லவரும் விடயம் எளிதில் எல்லொரையும் சென்றடைவதில்லை.இருவிழி...கமல் தமிழ் திரைப்படபரிணாமவளர்ச்சி உலக சினிமாவின் வளர்ச்சியோடு ஒத்துபோக வேணுமென்ற ஆர்வ கோளறாலினால் படம் எடுக்கிறார் ...அவர் எடுத்த படங்கள் சில வியாபர ரீதியாக தோல்வியடைந்து இருந்தாலும் தரத்தில் எவ்விதத்தில் குறைந்தில்லை என்பது என் கருத்து
வெறும் நாடகங்களையே தமிழ் சினிமாவாக காலம் காலமாக பார்த்து வந்த தமிழ் ரசிகர்களை சினிமாவின் இலக்கணங்களுக்குமைய சினிமாவை எடுத்து ஒரு ரசனை புரட்சி செய்தவர்கள் பாலசந்தர் பாரதிராஜா போன்றோராகும்...பாலசந்தர் அரங்கேற்றம் படமூலமும் பாரதிராஜா 16 வயதினிலை மூலம் செய்திருந்தார்கள்
அதன் பின் வந்த பாலுமகேந்திரா மகேந்திரன் filim instituteயிலிருந்து வெளியறிய டைரக்டர்கள் நல்ல படங்களை தந்து கொண்டிருந்தார்கள்...துரஸ்டவசமாக மீண்டும் சினிமாவின ரசனை தரம் குறைந்தது.
பாலசந்தரின் படங்களில் உதவி டைரக்சனாக இருந்தவர் அனந்து என்பவர் ..பொதுவுடமை சிந்தனையுள்ளவர் இவர் தான் உலக சினிமாக்களை கமலுக்கு அறிவுறு்த்தியவர் ஆவர் .கமல் உலக சினிமாக்களுக்கு நிகராக தமிழ் சினிமாவை கொண்டு போகும் முயற்ச்சியில் தொடர்வாரென்றும் நம்புகிறேன் தமிழ் சினிமா ரசிகர்ளின் ரசனையும் உயரம் என்று நம்புவோமாக

