Yarl Forum
தமிழ்ச்சினிமாவின் சிறந்த பத்துப்படங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: தமிழ்ச்சினிமாவின் சிறந்த பத்துப்படங்கள் (/showthread.php?tid=2987)

Pages: 1 2


தமிழ்ச்சினிமாவின் சிறந்த பத்துப்படங்கள் - கோமதி - 10-08-2005

நான் இதுவரை பார்த்த தமிழ்ச்சினிமாப் படங்களில் எனக்குப்பிடித்த முதல் பத்துப் படங்களை வரிசைப்படுத்தி அவை பற்றிக் கதைக்கலாமென்று நினைத்து இப்பதிவைத் தொடங்கினேன்.
ஏனையோரும் தங்களது சிறந்த பத்துக்களை வெளியிடலாம். ஒருவருக்கொருவர் தமது தகவல்களையும் விருப்பு வெறுப்பு விமர்சனங்களையும் பகிரந்து கொள்ளலாம். ஒவ்வொருவரின் ரசனை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

எனது முதலிரண்டு படங்களும் எந்தக் குழப்பமுமில்லாமல் தெரிவானவை.

<b>ஹேராம்
அன்பே சிவம்.</b>
ஏனைய சிறந்த எட்டுப்படங்களாக நான் கருதுபவை இவைதாம். ஒழுங்கு மாறிவரக்கூடும். ஆனால் எட்டைத் தெரிந்து எழுதுகிறேன்.

<b>முகம்
அழகி
நாயகன்
பிதாமகன்
முள்ளும் மலரும்
மூன்றாம் பிறை
பதினாறு வயதினிலே
விருமாண்டி</b>

மேற்கண்டவை எவையும் தனியே நாயகன், பாடல்கள், சண்டைக்காட்சிகள் என்பவற்றை வைத்து என்னால் எடை போடப்படவில்லை. மேலும் இதுவரை நான் பார்த்த படங்களுள் இவை என்னை மிகவும் கவர்ந்த முதல் பத்துப்படங்களே. நான் பார்க்காத படங்களுள் (பெரும்பாலும் 1990 இன் பின் வந்த எந்தப்படமும் தவறவிடப்படவில்லை) என்னைக்கவரக்கூடிய நல்ல படங்கள் தவறவிடப்பட்டிருக்கக்கூடும்.

இவற்றில் ஒரு படத்தைப்பற்றி அடுத்து எழுதுகிறேன்.


- KULAKADDAN - 10-08-2005

கோமதி இதை போல ஒரு வலைப்பதிவில் படித்த ஞாபகம். உங்களது சொந்த ஆக்கம் என்றால் சரி, வலைப்பதிவில் எடுத்தது என்றால் அதன் இணைப்பையும் அவர் பெயரையும் இடலாமே 8)

http://www.yarl.com/forum/viewtopic.php?t=6352


- கோமதி - 10-08-2005

முதலில் அன்பே சிவத்தைப் பற்றிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். எனக்கு மிகமிகப் பிடித்த படம். எல்லாப் படங்களும் ஒரே கதையைக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்தபோது வந்த அருமையான படம். இதை ஆங்கிலப் படத்தின் தழுவல் என்றும் சொல்கிறார்கள். இருந்துவிட்டுப் போகட்டுமே.

நல்லதொரு படத்தைத் தமிழுக்குத் தந்த கமலுக்கு நன்றி.
நான் இப்படத்தைப் பற்றி என்னென்ன சொல்ல நினைத்தேனோ அவை யாவற்றையும் ஒருவர் ஏற்கெனவே எழுதியிருக்கிறார். ஒரு வலைப்பதிவில் இப்பதிவைப் பார்த்த பின் அதையே இங்கு படியெடுத்துப் போடலாமென்று முடிவெடுத்துவிட்டேன்.

அந்த விமர்சனத்துடன் பெரும்பாலும் ஒத்துப்போகிறேன். படங்களை எப்படி இணைப்பது என்று தெரியவில்லை. ஆகவே படங்களை இணைக்கவில்லை.
இந்த விமர்சனத்தை எழுதிய வசந்தனுக்கு நன்றி.

மூலச்சுட்டி: http://vasanthanin.blogspot.com/2004/12/bl...6928359307.html

<b>இதோ வசந்தனின் விமர்சனம்.</b>


ஏறத்தாள ஒரு வருடத்தின் முன்பு பார்த்த படம். மீண்டும் பார்க்க நினைத்தாலும் முடியாத இடம். எனவே நினைவிலிருப்பவற்றை வைத்து இப்படத்தின் மீதான என் பார்வையைச் சொல்கிறேன். இதுவொரு திரைப்பட விமர்சனமன்று. அதற்கான முழுவடிவத்தை இது பெறவில்லை. குறிப்பாக முழுத்தகவல்களும் தெரியவில்லை. மேலும் எனக்கந்த அருகதை இருப்பதாகவும் எண்ணவில்லை. ஒரு இரசிகனாக என்னை வசீகரித்த இப்படத்தைப் பற்றி ஏதாவது எழுத வேண்டும் போல் தோன்றியதன் விளைவிது.

படக் கதைக்கு வருவோம். (படம் வெளிவந்து நீண்ட காலமென்பதால் கதையைச் சொல்வதில் தப்பில்லை.)

<img src='http://www.webulagam.com/cinema/review/0301/27/images/img1030127034_1_2.gif' border='0' alt='user posted image'>

சிவப்புச் சிந்தனை கொண்ட தொழிலாளியான நாயகன் கமல் (நல்லான் அல்லது சிவம்) வீதிநாடகக் கலைஞனாகவும் ஓவியனாகவும் இருக்கிறார். முதலாளியின் (நாசர்) மகளான பாலாவுடன் (கிரண்) எதிர்பாராவிதமாய் நட்புக் கொண்டு, பின் காதல் கொண்டு... இப்படியே போகிற போது (என்ன பாட்டி கதை சொன்ன மாதிரியிருக்கா?) அவளின் தந்தைக்குக் காதல் தெரியவந்து அவளை வீட்டில் அடைத்து வைக்க, இருவரும் தப்பிக் கேரளாவுக்குப் போக முடிவெடுக்கிறார்கள். கமல் தன் நண்பர்களுடன் பேருந்திற் பயணம் செய்யும்போது (நாயகி இல்லை) நடக்கும் விபத்தில் ஏனையோர் சாக அவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்படுகிறார்

வைத்தியசாலைக்கு வரும் முதலாளி நாசர் கமல் பிழைத்திருப்பதைப் பார்த்துவிட்டு தானாகவே சாகப்போகிறவனைக் கொல்வானேன் என்று (அல்லது தான் வணங்கும சிவனே கொன்று விடுவானென்று) எதுவும் செய்யாமல் விட்டுவிட்டுப் போகிறார். ஆனால் எவருமே எதிர்பாரா வண்ணம் கமல் குணமாகிறார். காதலியைத் தேடிவரும் அவரிடம், அவளிடம் நீ இறந்து விட்டதாகச் சொல்லி வேறு திருமணம் செய்து வைத்து விட்டேன். தயவுசெய்து அவள் வாழ்கையில் குறுக்கிடாதே எனக்கேட்கும் நாசரிடமிருந்து விடை பெறுகிறார் கமல். இது ஒரு பாகம்.

எதிர்பாராத சந்தர்ப்பத்தில் புவனேஸ்வர் விமானநிலையத்திற் சந்தித்துவிட்ட கமலும் மாதவனும் தமிழ்நாடு வருகின்றனர். வெள்ளம், புயலால் பயணப் பாதைகள் பாதிக்கப்பட எப்படியோ பல்வேறு வழிகளில் முயற்சித்து வந்து சேர்கின்றனர். இடையே சமூகப் பிரக்ஞையற்ற சராசரி மேல்தட்டு வர்க்க மனப்பான்மையுடனிருக்கும் மாதவனைப் படிப்படியாக மாற்றுகிறார் கமல். மாதவனின் திருமன வீட்டில் தான் காதலித்த பாலா தான் மாதவனின் மனைவியாகப் போகிறவள் என்பதும் நாசர் தன்னிடம் சொன்னதெல்லாம் பொய்யென்பதும் தெரிய வருகிறது. கல்யாணத்தைக் குழப்பாமலிருக்க என்ன வேண்டுமானாலும் கேள் எனக் கேட்கும நாசரிடம், தொழிலாளிகளின் மாதாந்தச் சம்பளத்தைக் கூட்டிக் கொடுக்கும்படிக் கேட்டுப் பெற்றுக் கொடுத்துவிட்டுத் தன்பாட்டிற் போகிறார். இது இன்னொரு பாகம்.

விமான நிலையத்தில் கமலைத் தீவிரவாதியென்று (தப்பாக நினைத்து) காவல்துறையினரிடம் போட்டுக் கொடுத்துவிட்டுப் பதுங்கும் மாதவனைக் கமல் சந்திப்பதோடு தொடங்குகிறது படம். விபத்துக்கு முன் பின் என இரு பாகங்களும் சரியான இடத்தில் நினைவு மீட்டல்களாக (flash back) கலந்து வருகிறது காட்சிகள். கமலுடன் இணைந்து நடிப்பதில் சக நடிகனுக்குள்ள ஆபத்து அனைவரும் அறிந்ததே. (வசூல் ராஜாவில் பிரபுக்கு நேர்ந்தது தெரிந்ததே.) ஆனால் இப்படத்தில் மாதவன் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார்: அதுவும் கமலுக்கு ஈடாகவே.

<img src='http://www.webulagam.com/cinema/review/0301/27/images/img1030127034_1_1.gif' border='0' alt='user posted image'>

கமலின் நடிப்பைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. முகம் முழுவதும் வடுக்களோடு அடிக்கடி தாடை இழுத்தபடி வரும் கமல் நெஞசில் நிறைகிறார். ஒப்பனைக் கலைஞனுக்கு ஒரு சபாஷ். (வெளிநாட்டிலிருந்து யாரோ வந்திருந்ததாக அறிந்தேன். விபரம் தெரிந்தாற் சொல்லவும்). காவல் நிலையத்தில், நான்கூட நீ ஏதோ உண்மையான கம்யூனிஸ்டோன்னு நெனச்சிட்டேன். புடிச்சாலும் புளியங்கொம்பாத் தான்யா புடிச்சிருக்கே என்று காவலாளியொருவன் கேட்கும்போது, குற்ற உணர்வில் தவிக்கும் கமல்; கிரணிடம் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு தன்னை மறந்து விடும்படி கூறும் காட்சியில் போராடலாம், ஆனா வாழ்நாள் பூரா போராடிக்கிட்டிருக்க முடியுமா? என்று ஆற்றாமையை வெளிப்படுத்தும் கமல்; பலவீனமான நேரத்தில் கிரணைக் கட்டிக்கொண்டு திருமணதத்திற்குச் சம்மதிக்கும் கமல்; விபத்துக்குக் காரணமான நாயைத் தன்னுடன் அழைத்துச் சென்று வளர்க்கும் கமல்; என கமல் நிறைந்திருக்கிறார்.

கிரண் தான் கதாநாயகி. உடம்பைக் காட்டவோ ஆபாச நடனத்திற்கோ சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை. கொடுத்த பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார். நாசர் ஆர்ப்பாட்டமில்லாத பாத்திரம். (வில்லன் என்று சொல்ல முடியாது, ஏனெனில் வில்லன் பற்றிய ஒரு விம்பம் எனக்குத் தமிழ் சினிமாவால் ஏற்படுத்தப்பட்டுள்ளது). தென்னாடுடைய சிவனே போற்றி என்று அடிக்கடி சொல்லிக்கொண்டு திரிவது; இன்னைக்கு விரதம். பச்சத்தண்ணி தொட மாட்டம்ல என்றுவிட்டு பின்புறம் போய்த் தண்ணியடிப்பது; சந்தர்ப்பம் கிடைத்தும் கமலைக் கொல்லாமல் விடுவது, பின் இறுதி நேரதிதில் கொல்ல ஆள் ஏவி விடுவது; என்று மனிதர் இயல்பாக அசத்தியிருக்கிறார்.

மதன் வசனமெழுதி நடித்துமிருக்கிறார். அவ்வப்போது கதைக்கருவைச் சார்ந்து வசனங்கள் வரும்போது மின்னுகிறார். எ.டு:- ரஸ்யா தான் ஒடஞ்சிடுச்சே அப்புறமேன் கம்யூனிசத்தத் தூக்கிப் பிடிக்கிறீங்க? என்று மாதவன் கேட்க, தாஜ்மகால் இடிஞ்சிட்டா காதலிக்கிறதயே விட்டிடுவீங்களா? என்று கமல் திருப்பிக் கேட்பார். காதல் ஒரு feeling என்றால் கம்யூனிசமும் ஒரு feeling தான்; என்பார் கமல். நீச்சற்குளத்தில் I can't swim என மாதவன் அலறுகையில். சாகப் போறப்பவாவது தமிழ் பேசுங்க என்று கமல் சொல்வது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். நானும் கடவும், நீயும் கடவுள் என்பதாகட்டும், கிரடிட் கார்ட் சம்பந்தமான காட்சிகளாகட்டும் மிக நன்று.

வித்தியாசாகரின் இசையில் பாடல்கள் அருமை. வைரமுத்துவின் யார் யார் சிவன் எனும் பாட்டு வசீகரிக்கிறது. காட்சிகள் சிறப்பாக உள்ளன. வெள்ளப் பெருக்குக் காட்சியும், தொடருந்து (ரயில்) விபத்துக்காட்சியும் பிரமிப்பூட்டுகிறது. மிகுந்த சிரத்தையெடுத்துச் செதுக்கியிருக்கிறார்கள். கலை இயக்குநர் பிரபாகருக்கு ஒரு சலாம். தெருக்கூத்துக் (வீதி நாடம்) காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது. பிரளயனின் கலையைப் படத்தில் அருமையாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இப்படத்திற் பிடிக்காத விசயங்களேயில்லையா? எனக் கேட்கலாம். ஆம், எனக்குக் கமல் மேல் (அது விரிவடைந்து இறுதியில் தமிழ்ச் சினிமாச் சூழல் மீதே திரும்புகிறது) கோபம் வந்த இடமொன்றுண்டு. (சுந்தர். சி. தானே இயக்குநர் என்றுவிட்டு கமல் தப்ப முடியாது). கமலை அடிக்க நாசரால் ஏவிவிடப்பட்டவர்களை, தன்னுடனிருப்பவர்களை ஒதுங்கியிருக்கச் சொல்லிவிட்டு கமல் ஒத்தை ஆளாக ஒரு குடையை வைத்து அடித்துத் துவம்சம் செய்கிறார். அதுவும் அவருடைய வீதிநாடகக் கலைஞர்களும் தொழிலாளர்களும் வாழும் இடத்தில். என்னவொரு கோமாளித்தனம்? (நான் மற்றைய படங்களைப்பற்றிக் கதைக்கவில்லை.) அழகிய ஒரு கோலத்தில் மலம் கழித்த மாதிரி. இப்படியொரு படத்தில் (சாத்தியமேயற்ற) தனிமனித பராக்கிரமம் தேவையா? (அதற்குள் ஜேம்ஸ் பாண்ட் பாணிச் சண்டை வேறு) கம்யூனிசத்தின் அடிப்படையே தோழமை, ஒற்றுமை, சேர்ந்து முகங்கொடுக்கும் தன்மை. அக்கோட்பாடு சார்ந்த படத்தில் அக் கோட்பாட்டைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கலைஞன் இப்படிச் செய்யலாமா? மாறாக எல்லாத் தொழிலாளர்கயையும் (பார்வையாளராய் மேளமடித்து நாயகனுக்கு உசுப்பேற்றிக் கொண்டிருந்த) இணைத்து அவர்களை அடித்து விரட்டியிருந்தால் கதைக்கருவிற்கு இன்னும் வலுச்சேர்த்திருக்கும். (இதைப்பற்றி என் நண்பனொருவனுடன் கதைத்துக் கொண்டிருந்தபோது அவன் சொன்னான் படம் பார்க்கும் எங்களுக்கு அட! நாம் பார்த்துக் கொண்டிருப்பது தமிழ்ப்படம் தான் என்பதை நினைவூட்டத்தான் அப்படியொரு காட்சியை கமல் வைத்தாராம். அவனுக்குக் குசும்பு அதிகம்தான்.)

நகைச்சுவைக்கென தனியான சுவடோ (track) தனிநடிகரோ (விவேக், வடிவேலு) இப்படத்தில் இல்லை. (அந்தளவில் நிம்மதி). கதையுடன் இயல்பாகவே வருகிறது நகைச்சுவைக் காட்சிகள். இவ்வளவு இறுக்கமான (serious) கதைக்களத்தை இயல்பாக யதார்த்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். கடவுள் இல்லையென்று எடுத்த எடுப்பில் அடித்துக்கூறும் பிரச்சாரப் பாணியில் இல்லாமல் அழகாகவே கதை சொல்லப்பட்டுள்ளது. கமல் தனது அரசியலைத் தெளிவாகச் சொல்லியுள்ளார்.

நான் இப்படத்தைப்பற்றி அதிகம் கதைத்து (எழுதி?) விட்டேன் போலுள்ளது. ஏனெனில் அவ்வளவுக்கு என்னைக் கவர்ந்த படமிது. படவெளியீட்டின் போதே இப்படத்தின் வர்த்தக வெற்றிபற்றி கமல் சரியாகவே கணித்திருந்தாரென நினைக்கிறேன். படவெளியீடன்று பி.பி.சி. திமிழோசையில் வெளிவந்த அவரது செவ்வியில் அது விளங்குகிறது. இப்படத்தை வெற்றியடைய விடாமற் செய்ததற்குப் பிராயச்சித்தமாக இன்னும் எவ்வளவு காலம் ஒரு நல்ல படத்திற்காகக் காத்திருக்க வேண்டும்?


- Mathan - 10-08-2005

கோமதி,

படங்களை எப்படி இணைப்பது எப்படி என்று தெரியவில்லை என எழுதியிருந்தீங்க, அதனால் படங்களை இணைத்து விட்டிருக்கின்றேன். படங்களை இணைப்பது எப்படி என்று அறிய இந்த தலைப்பை பாருங்கள்.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=6203


- கோமதி - 10-08-2005

குளக்கடான்,(பேர் சரியோ தெரியேல)
முதலாவதா போட்டது என்ர ஆக்கம் தான். அது என்னெண்டு இன்னொருத்தரின்ர விருப்ப வரிசைப்பட்டியல என்னுடைய விருப்பப்பட்டியலாப் போடுறது?
வசந்தன் பதிவில அன்பே சிவம் பற்றின விமர்சனத்தைப் பாத்த உடனதான், என்ர ரசனையும் அதோட ஒத்துப் போனபடியா இப்படியொரு முயற்சியத் துவங்கினேன். இப்பபாத்தா முகம் பற்றியும் அவர் எழுதியிருக்கிறார். எனக்கும் மிகப்பிடித்த படம் முகம். அடுத்ததா அவரின்ர பதிவையே முகத்துக்கா விமர்சனமாப் போட்டிலாம். என்ர வேல சுகம்.
நீங்கள் வலைப்பதிவில் நீண்ட காலமா இருக்கிறியள் எண்டு கேள்வி. நான் குறிப்பிட்ட படங்களுக்குரிய விமர்சனங்களை அராவது எழுதியிருந்தா அந்த இணைப்புக்களத் தந்தா என்ர வேலை சுகமாப்போகும்.
அவயள மாதிரி சிறப்பா என்னால விமர்சனம் எழுத ஏலாது தானே?
அதுசரி நீங்கள் உங்கட பட்டியலைப் போட்டிருக்கலாமே?


- கோமதி - 10-08-2005

நன்றி மதன். வாசித்தறிகிறேன்.
குளக்காடன்,
நீங்கள் இதே பட்டியலை ஏதாவது வலைப்பதிவில் பார்த்திருந்தால் அந்தச் சுட்டியைத் தரமுடியுமா?
எனது ரசனைக்கேற்ற மாதிரி ஆராவது இருந்தால் அறிய ஆவல். அதாலதான் கேக்கிறன்.


- Vishnu - 10-08-2005

கோமதி.... உங்கள் விமர்சனங்களை எழுதுங்கள்.. உங்கள் ரசனையையும் அறிந்து கொள்வோம்.

நான் இதுவரை பார்த்த படங்களில் 2 படங்கள் எனக்கு பிடித்தவை. முதல் 2 என்று சொன்னால் அந்த 2ஜயும் தான் சொல்வேன்.

பிடித்ததுக்கு காரணம் என்ன என்று கேட்டால் சொல்வது கொஞ்சம் கஸ்டம். எனோ அப்படிதான்... பிடிக்காததுக்கு காரணம் சொல்வேன். பிடித்ததுக்கு சொல்ல முடிவதில்லை.

எனக்கு பிடித்த 2 படங்கள்.
<b>
புது புது அர்த்தங்கள்
நினைவிருக்கும் வரை</b>

உங்கள் விமர்சனங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


- narathar - 10-08-2005

கோமதி அட்டோகிராப் மற்றும் சொல்ல மறந்த கதை பாகவில்லயா,இந்தப் பட்டியலுக்க இவையும் வரும் எண்டு நினைக்கிறன்.அன்பே சிவம் பற்றி தெரியப் படுத்தியதற்கு நன்றி தேடிப் பார்க்க வேண்டிய படம் போல் இருக்கு.தொடர்ந்து எழுதுங்க நல்ல படங்களை அடயாளம் காட்ட.குளக்காட்டனும் தான் உங்களோடயே வச்சுக் கொன்டிருந்தா சரி வராது ,எல்லாரோடையும் பகிர்ந்து கொள்ளுங்க.


- கோமதி - 10-08-2005

ஆட்டோகிராப், சொல்லமறந்தகதை இரண்டும் பார்த்தேன். அவை இந்தப் பத்துக்குள் வரா. இவைக்குப் பின்தான் வரும். கருத்துக்கு நன்றி நாரதர்.


- vasisutha - 10-08-2005

<b>எனக்கு பிடித்த 10 படங்கள்..</b>

1. அன்பே சிவம் (<i>கமல்..மாதவன்</i>)

2. சிப்பிக்குள் முத்து (<i>கமல்.. ராதிகா</i>)

3. என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு (<i>சத்யராஜ்.. சுகாசினி</i>)

4. பூவே பூச்சூடவா (<i>பத்மினி.. நதியா</i>)

5. சின்னக் கண்ணம்மா (<i>கார்த்திக்.. நாசர்..சுகாசினி</i>)

6. வேதம் புதிது (<i>சத்யராஜ்.. அமலா.. ராஜா</i>)

7. பாண்டவர் பூமி (<i>ராஜ்கிரண்</i>)

8. ஆறில் இருந்து அறுபது வரை (<i>ரஜினிகாந்</i>)

9. பொற்காலம் (<i>முரளி.. மீனா</i>)

10. சேது (<i>விக்ரம்</i>)

அன்பே சிவம் எனக்கு மிகவும் பிடித்தபடம்.

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படமும் எனக்கு மிகவும்
பிடித்த படம்..


- Mathan - 10-09-2005

பிடித்த 10 படங்கள் என்று என்னால் தெரிவு செய்ய முடியலை, ஆனா இங்க எழுதியிருக்க படங்களுக்குள் .... நான் பார்த்தவைகளுக்குள் பிடித்த படங்கள் இவை ...

ஹேராம்
அன்பே சிவம்.
அழகி
நாயகன்
பாண்டவர் பூமி
ஆட்டோகிராப்


- stalin - 10-10-2005

அன்பே சிவம் படத்தின்...SCREENPLAY தமிழுக்கு புதிசு..அந்த படத்தில் சராசரி படத்திலுமில்லாத ஒன்று் அந்தபடத்தை பல முறை என்னை பார்க்க வைத்தது.. ரசியா உடைந்து சுக்கு நீறாப்போயிட்டது இன்னுமென்ன கம்னீயூஸ்ட் என்று மாதவன் கேட்க...... காதல் சின்னம் தாஜ்மாகல் உடைந்து போயிட்டு வைப்பம் அதற்காக காதல் என்ற உணர்வு இப்ப இல்லையென்றதா....அது போல் கம்னியூஸ்ட் என்றது ஒரு பீலிங் என்று கமல் விளங்க படுத்துகிறாரே அருமையான வரிகள்....பெர்லின் சுவர் உடைப்பினூடு கம்னீயுசியம் என்ற சிந்தினை அழிந்து போயிட்டுதென்று குழம்பி போனவர்களுக்கு தெளியவைக்கும் அருமையான வரிகள்
ஆனால் பொருளாதிரீயாக தோல்வியடைந்தது துரஸ்டவசம்


- iruvizhi - 10-10-2005

[b][size=18]வேதம் புதிது
16 வயதினிலே
முள்ளும் மலரும்
மூன்றாம் பிறை
அழகி
தேவர்மகன்.
பூவே உனக்காக
இது நம்ம ஆளு
பாரதி கண்ணம்மா
கையெழுத்து (ஆட்டோகிராப்)


- sinnakuddy - 10-10-2005

எனக்கு பிடித்த பத்து படங்கள்

1.அன்பே சிவம்

2.வீடு (பாலு மகேந்திரா டைரக்சன்)

3. அவள்அப்படித்தான்(ருத்ராயிவின் டைரக்சனில் கமல் ரஜனி நடித்த கறுப்பு வெள்ளைபடம)

4.யாருக்காக அழுதான்(நாகேஸ் நடித்த ஜெயகாந்தன் கதையை மூலமாக கொண்ட படம்)


5.உதிரிப்பூக்கள்(மகேந்திரன் டைரக்சன்)
6.புதிய வார்ப்புக்கள(பாரதிராஜா டைரக்சன்)
7.நீர்க்குமிழி(நாகேஸ் நடித்த பாலசந்தரின் டைரக்சன்)
8.வாடைக்காற்று(ஈழத்து திரைப்படம் ஏ.ஈ மனோகரன் dr இந்திரகுமார் ஆனந்தராணி நடித்த

செங்கையாழியனின் கதையை மூலமாக கொண்ட படம்)

9.பொன்மணி(சித்ரலோகா மெளனகுரு நடித்த ஈழத்து திரைபடம்)

10.ஹேராம்

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- கோமதி - 10-10-2005

என் தெரிவில் இடம்பெற்றுள்ள முகம் பற்றி வசந்தன் பதிவிலுள்ள விமர்சனம் இது.

http://vasanthanin.blogspot.com/2004/12/bl...og-post_17.html
-------------------------------------
<b>முகம்</b>

டிசூம் டிசூம்.. என்று ஒருவனே 20 பேரை அடிக்கும் சண்டைகளேதுமற்று, நினைத்த மாத்திரத்திற் பல நாடுகளுக்குச் சென்று கட்டிப் புரண்டு பாடும் டூயட் எதுவுமில்லாமல், வாய்ச்சவடாலடிக்கும் வசனங்களோ நடிகர்களோ இல்லாமல், நகைச்சுவை (காமடி) என்ற பேரில் அலட்டல்களோ கோமாளிக்கூத்துக்களோ இல்லாமல்;;.... இப்படி தமிழ்ச்சினிமாவுக்கே உரித்தான அடிப்படைத் தகுதிகள் இல்லாமல் வெளிவந்த படம் முகம்.
<img src='http://www.indiafilm.com/cinedairy/mugam.jpg' border='0' alt='user posted image'>

கோரமான முகம் கொண்ட ஒருவன், அம்முகத்துக்காகவே சமூகத்தாற் புறக்கணிக்கப்படுகிறான். வேலை கூட எடுக்க முடியவில்லை@ தன்னைக் காதலிக்கிறாள் என நினைப்பவளின் நிராகரிப்பு. இப்படி தன் முகத்துக்காகவே எல்லாவற்றிலும் நிராகரிக்கப்படும் ஒருவன், தற்செயலாய் முகமூடியொன்றால் அழகான முகத்தோற்றத்தைப் பெறுகிறான். முன்பு தன்னை நிராகரித்துக் கேவலப்படுத்திய சினிமாவில் நட்சத்திரமாகிறான். யாரும் நெருங்க முடியாத உயரம். நாடே அவனை வணங்குகிறது. திருமணம் கூட நடந்து விடுகிறது. இருந்தாலும், தன் முகம் போலவே தன்னைச் சுற்றியிருக்கும் கும்பலும் புகழும் ஏன் பாசமும் கூட போலியானதென்பதை நன்றாக உணர்கிறான். தன் பழைய முகத்துக்காக ஏங்குகிறான். இறுதியிற் பழைய முகத்தை அடைகிறான். ஆனால் தான் இன்னார் தானென்று கதறிச் சொன்னபோதும் அதைக் கேட்காமல் அடித்துத் துரத்துகிறது சமூகம், மனைவி உட்பட. அப்போதுதான், உயிர்வாழ்வதற்கென்றாலும் தனக்கு ஒரு போலி முகம் கட்டாயம் தேவை என்பதை உணர்கிறான். பழையபடி முகமூடி அணிந்து வருபவனை தங்கள் தலைவனாய் வணங்கி ஆர்ப்பரிக்கிறது சமூகம். போலியே நிரந்தரமாக, போலியாகவே வாழ்ந்து விடுவதென்று தயாராகிறான் அம் மனிதன்.

<img src='http://www.sysindia.com/tamil/cine/vimarsanam/mugam.jpg' border='0' alt='user posted image'>இது தான் கதை. கதாநாயகனாக நாசர். நாசர் தான் படமே. அவரைவிட படத்தில் ஓரளவு தெரிவது மணிவண்ணன் தான். படத்தின் முதன்மைப் பாத்திரங்கள் நாசரும் அந்த முகமூடியும் தான். நாசர் தனக்குக் கிடைத்த வாய்ப்பை நழுவவிடவில்லை. அசத்தியிருக்கிறார் மனிதர். பருக்களும் வடுக்களும் நிறைந்த அந்தக் கோரமுகத்தோடு;ம் சரி, சினிமா சூப்பர் ஸ்டாராகவும் சரி, குற்ற உணர்வோடு குமுறுபவராகவும் சரி, தன் பழைய முகத்தையும் சுதந்திரத்தையும் யாசித்து ஏங்குவதிலும் சரி, கொடி நாட்டியிருக்கிறார். அந்த முகத்தோடேயே சினிமாவில் நடிக்க சந்தர்ப்பம் கிடைத்ததும் (வேலைக்காரன் வேடம்) அவர் அடிக்கும் பந்தா, அதே படத்தைத் திரையிற் பார்த்துக்கெண்டிருக்கும் போது அவர் நடித்த காட்சி வந்ததும் திரையைக் கிழித்து நாசமாக்கி கீழத்தரமான வார்த்தைகளால் திட்டி அவரைத்தேடி அடித்த மக்களிடம் உதை வாங்கும் காட்சி என்று படம் முழுவதும் நிறைந்திருக்கிறார் நாசர். நாசரின் நீண்ட சினிமா வரலாற்றில் முகம் ஒரு மகுடம்.

கதாநாயகியாக வருபவர் ரோஜா. உண்மையில் அதிக வேலையில்லை. புடத்தில் கதை தான் முதன்மையென்பதால் மனிதர்களுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை. நாசரின் அழகான (போலியான) முகத்தைக் காதலிக்கும் ரோஜா தர்ணா (வீட்டின் முன் இருந்து போராட்டம்) இருந்து அவரைக் கல்யாணம் செய்கிறார். காதலிக்கும்(?) போதும் சரி, கல்யாணத்தின் பின்பும் சரி, இயல்பாகவே இருக்கிறார். (வழமையானபடி இரண்டு இடத்திலும் இரண்டிரண்டு பாடல்கள் வரவேண்டும், அதுவும் இரண்டு பாடல்களாவது வெளிநாட்டில் இருக்க வேண்டும். விதியை மீறியதால் இயக்குநருக்கு தடா போட வேண்டும்.)
படம் பின்பகுதியில் வேகமாகவே நகர்கிறது. ரோஜாவின் ஆசை, தர்ணா, கல்யாணம் எல்லாமே படுவேகம். (அவ்வளவுக்கு மசாலாக்களைத் தவிர்ப்பதில் இயக்குநர் குறியாகவேஇருந்துள்ளார்). வில்லனென்று சொல்ல ஒருவர் கூட படத்திலில்லை. பின்னணி இசையின் முக்கியத்துவத்தை உணர இப்படத்தைப் பார்க்க வேண்டும். இசைஞானி பின்னியெடுத்திருக்கிறார். பாடல்கள் இல்லாததும் ஒரு காரணமோ? ஓளிப்பதிவு நன்றாக உள்ளது. அதுவும் நாசர் நடிகனான பின்வரும் காட்சிகள் கண்ணுக்குக் குளிர்மை. பட ஆரம்பத்திற் கொஞ்சம் கவனமெடுத்திருக்கலாம். ஒளிப்பதிவாளரின் பெயர் தெரியவில்லை. மன்னிக்கவும்.
சினிமாவைச் சாடை மாடையாய் நக்கலடிப்பதையும் விடவில்லை. எடுத்துக்காட்டுக்கள்: மணிவண்ணின் மேக்கப் கொமன்ட்ஸ்; நாசரிடம் படக்கதை விபரிக்கையில் அவர் கதை பிடிக்காமல் நல்ல சினிமா எடுக்க ஆலோசனை கூறுவது.


இருந்தாலும் இப்படத்திற் சில குறைகள்: நாசருக்கு முகமூடி மூலம் முகம் மாறுவதும் அதை அவர் நீக்கமுடியாமலிருப்பதும் தர்க்க ரீதியிற் சரியாக இல்லை. அம்புலிமாமா கதை போலுள்ளது. கொஞ்சம் ஹொலிவூட் பாணியில் யோசித்து காட்சியை அமைத்திருக்கலாம். இருந்தாலும் இப்படியான நல்ல படங்களுக்குரிய பட்ஜெட்டுக்குள் இவ்வளவுதான் முடியும் என்ற நிலையுள்ளது.
வழமையான சினிமா வட்டத்திற்குள்ளருந்து வெளிவந்து ஓர் அழகான, வலிமையான படத்தைத் தந்த இயக்குநர் ஞான ராஜசேகரன் அவர்களுக்கு நன்றி. (பாரதி, மோகமுள் போன்ற அருமையான படங்களைத் தந்தவர் இவரே.) இப்படத்துக்கு மக்களிடமிருந்து பணம் கிடைத்திருக்காது என்பது தெரியும். ஏதாவது விருது கிடைத்திருக்க வேண்டும். கிடைத்ததா தெரியவில்லை.


- tharma - 10-10-2005

http://img1.imageshack.us/img_viewer_frame...07/barsik19.jpg


- iruvizhi - 10-10-2005

[quote=iruvizhi][b][size=18]வேதம் புதிது
16 வயதினிலே
முள்ளும் மலரும்
மூன்றாம் பிறை
அழகி
தேவர்மகன்.
பூவே உனக்காக
இது நம்ம ஆளு
பாரதி கண்ணம்மா
கையெழுத்து(ஆட்டோகிராப்)


என்னை கவர்ந்த காட்சி வேதம் புதிது திரைப்படத்தில் புரட்சித்தமிழன் சத்தியராசும் ஒரு சிறுவனும் ஆற்ரினைக் கடந்த பின் நிகழும் காட்சி. இருவரும் ஆற்றினை கடக்க வேண்டிய சூழல் ஒன்று உருவாகிய போது. சத்தியராசு தன் தோளில் சிறுவனை சுமந்த வண்ணம் ஆற்றினை கடப்பார். ஆற்றின் மறு கரையினை அடைந்ததும், சிறுவனை கரையில் இரக்கிவிட்டு பின் சிறிவன் பாலுத்தேவரை(சத்தியராசுவை) பார்த்து மூச்சுக்கு முன்னூறுதடவை பாலுத்தேவர் பாலுத்தேவர் என்கின்றீர்களே. பாலு என்பது உங்கள் பெயர் தேவர் என்பது நீங்கள் படித்துவாங்கிய பட்டமா? எனக்கேட்கும் போது. பாலுத்தேவரின் கன்னத்தில் அடி விழ்வது போன்ற காட்சி அமைத்திருப்பார்கள் மிகவும் அற்பதமான காட்சி அமைப்பு. பின்னர் சிறுவன் கரையில் நின்றவாறு "நான் கரை ஏறிவிட்டேன், நீங்கள் எப்போது கர ஏறப்போகின்றீர்கள்?" என்று பால்த்தேவரிடம் கேட்பான். இந்தக்காட்சி என்னை மிகவும் மெய் சிலிர்க்க வைத்தது. சத்திய ராசுவின் அபாரமான நடிப்பினையும் பாரதிராசாவின் நுணுக்கமான திரைக்கதை இயக்கத்தினையும் இளையராசாவின் இனிய இசையினையும் இப்படம் பார்த்த பின்னே நான் இவர்களையும் இவர்களின் திறமைகளையும் அறிந்து கொண்டேன்.


- இவோன் - 10-10-2005

சின்னக்குட்டியரே,
எனக்கு நல்லாக் கிட்டவா நிக்கிறியள்.
பாலுமகேந்திராவின்ர <b>வீடு, சந்தியாராகம்</b>
ஜெயகாந்தனின்ர <b>யாருக்காக அழுதான், ஒரு நடிகை நாடகம் பாக்கிறாள்,</b>ருத்ரையாவின்ர <b>அவள் அப்படித்தான்</b>,

இப்படியான படங்களை எடுக்கிறதுக்கு மட்டுமில்ல, முழுக்க பாத்து முடிக்கிறதுக்கே ஒரு திமிர் வேணும்.
நான் <b>வீடு, சந்தியாராகம்</b> எண்ட ரெண்டு படத்தையும் கொஞ்சக்காலமா வைச்சிருந்தன். கொஞ்சப் பேருக்குப் போட்டிக்காட்டினன், நல்ல படம் பாருங்கோ எண்டு. அண்டையோட என்னை விசரன் எண்டு நினைக்கத் தொடங்கீட்டாங்கள்.
<b>'அவள் அப்பிடித்தான்' </b>மாதிரியெல்லாம் இனியெங்க தமிழ்ச்சினிமாவில படங்கள் வரப்போகுது.

கோமதி சொல்லியிருக்கிறதுக்குள்ள <b>அன்பே சிவமும் ஹேராமும்</b> என்ர முதல் பத்துக்குள்ள வரும்.
ஆனா என்ர கருத்து என்னெண்டா, உப்பிடி பட்டியல் போடேக்க, சீரியஸ் படங்கள், பொழுதுபோக்குப் படங்கள் எண்டோ,
நல்ல படங்கள், நகைச்சுவைப் படங்கள் எண்டோ ரெண்டு வகைப்படுத்திப் பாக்கிறது நல்லம். ஏனெண்டா நகைச்சுவைப்படங்கள் கூட மிகப்பிடித்த படங்களுள் வந்துவிடும். ஆனால் அது அப்பட்டியலிலுள்ள மற்றய கருத்தாளமிக்க படங்களைக் குழப்பி விடும்.

பொழுதுபோக்குப் படங்களுள் எனது முதல் ஐந்தைத் தருகிறேன்.
1.மும்பை எக்ஸ்பிரஸ்
2.காதலா காதலா
3.காதலிக்க நேரமில்லை.
4.தெனாலி
5.பஞ்ச தந்திரம்.

குறிப்பு: இவற்றுள் 4 படங்கள் கமலுடையவை. ஓமோம். சந்தேகமேயில்லாமல் தமிழல் மாற்றுச் சினிமாவுக்குரிய நம்பிக்கை கமல்தான். நகைச்சுவைப் படங்களில்கூட மாற்றுப்பாதையைக் கொண்டுவந்தவர். கெளண்டமணி செந்திலுக்கு உதைப்பதையும், விவேக் வாய்கிழிய கருத்துச் சொல்வதையும், வடிவேலுவின் புலம்பலையும்தான் நகைச்சுவையென இன்றும் நம்பிக்கொண்டும் ரசித்துக்கொண்டுமிருக்கும் தமிழ்ச்சமூகத்தின் மத்தியில் மும்பை எக்ஸ்பிரஸ் போல முயற்சிகள் செய்வதற்கு எவனுக்கும் துணிவும் திறமையும் இல்லை.

-------------------------------------

நகைச்சுவைப் படங்கள் அல்லது பொழுது போக்குப் படங்களுக்கான பட்டியலைத் தனிப்பதிவாக வைத்து வாதிப்பது இன்னும் சிறந்ததென்று நினைக்கிறேன். உங்கள் பதிலென்ன?


- adithadi - 10-10-2005

ஞானஒளி
ஆட்டோகிராப்
காதல்
7G ரெயின்போகாலனி
வருசம் பதினாறு
மகா நதி
அவன் தான் மனிதன்
காதலுக்கு மரியாதை
கன்னத்தில் முத்தமிட்டால்
அன்பே சிவம்


- Birundan - 10-10-2005

தேவதாஸ்
ரத்தக்கண்ணீர்
வீரபாண்டியகட்டபொம்மன்
பாசமலர்
குருதிப்புனல்
வறுமையின்நிறம்சிவப்பு
ஹேராம்
கடவுள்
பாரதி
காமரஜர்