Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மழை ஸ்ரேயா
#1
<img src='http://img295.imageshack.us/img295/9073/yarlshi0da.jpg' border='0' alt='user posted image'>

மழை

'மழை' டைட்டில் மட்டுமல்ல; கிட்டத்தட்ட ஒரு கேரக்டராகவே படம் முழுக்க வருகிறது. படத்தில் நாயகனும் நாயகியும் சந்திக்கும்போதெல்லாம் மழை வருவது கவிதை. மற்றபடி படம் மாமூல் மசாலாதான். 'வர்ஷம்' தெலுங்கு படத்தையே 'மழை'யாக தமிழுக்கு இறக்குமதி செய்திருக்கிறார்கள்.


படப்பிடிப்பில் நடிகை ஸ்ரேயாவை கோடீஸ்வர தாதா ராகுல்தேவ் கடத்திப்போகிறார். படப்பிடிப்பு தடைபட்டதால் தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் தனது நண்பரான ஹோம் மினிஸ்டர் வரை தொடர்பு கொண்டாலும் அனைவரும் ராகுல்தேவை பகைத்துக்கொள்ள அஞ்சுகிறார்கள். ஸ்ரேயாவின் அப்பா கலாபவனின் யோசனையின்படி பிரமிட் நடராஜன் ஜெயம் ரவியிடம் ஸ்ரேயாவை மீட்கச் சொல்கிறார். முதலில் ஸ்ரேயாவை காப்பாற்ற ஆவேசமாக மறுத்த ரவி பிறகு தனது சித்தப்பாவின் ஆபரேசனுக்கு பிரமிட் நடராஜன் உதவ வேண்டும் என்ற நிபந்தனையில் ஸ்ரேயாவை காப்பாற்ற செல்கிறார்.

இடையே ஒரு ப்ளாஷ்பேக். மழைப்பிரியரான ஸ்ரேயா மழை வந்தால் குஷியாகி மழையில் நனைந்து ஆடிப்பாடத் துவங்கிவிடுவார். ரவி-ஸ்ரேயா சந்திக்கும் போதெல்லாம் மழை வந்து இவர்களுக்குள் காதலை ஏற்படுத்துகிறது. ரவி ஸ்ரேயாவை முதன்முதலில் சந்தித்த அதே மழையில் ராகுல்தேவும் ஸ்ரேயாவை பார்த்து கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறார். குடும்பப் பொறுப்பில்லாத கலாபவன்மணிக்கு பணம் தந்து அவரை வழிக்கு கொண்டுவர முயற்சி செய்கிறார்.

இந்நிலையில் மகளின் காதல் பற்றி தெரியவந்த கலாபவன்மணி ராகுல்தேவிடம் தெரிவிக்கிறார். ராகுல் ஸ்ரேயாவை மறந்துவிட ரவியை மிரட்ட அது ரவியிடம் பலிப்பதில்லை. அதற்குள் ஸ்ரேயாவுக்கு நடிக்க வாய்ப்பு வரவே ராகுல் தேவ் உதவியுடன் ரவி-ஸ்ரேயா இடையே சதிசெய்து பிளவை ஏற்படுத்தி, ரவி ஊரைவிட்டே கிளம்ப வைத்து விடுகிறார்.

பிறகு மகளை நடிகையாக்கி கோடீஸ்வரராக ஆசைப்பட்டு ராகுல் தேவுக்கு தெரியாமல் ஊரைவிட்டு குடும்பத்துடன் சென்றுவிடுகிறார். ப்ளாஷ்பேக் முடிகிறது. ரவி எப்படி ஸ்ரேயாவை காப்பாற்றினார் ராகுல்தேவை தண்டிக்கிறார் என்பது மீதிக்கதை.

அறிமுக இயக்குனர் ராஜ்குமார் மூலப்படத்திலிருந்து தமிழுக்கு ஏற்ப மாற்றங்களை பெரிதாகச் செய்யவில்லை. வில்லனின் வீட்டிலிருந்து ஸ்ரேயாவை ரவி காப்பாற்ற புத்திசாலித்தனமான நடவடிக்கை எடுப்பதாக காட்டி ரசிக்கவைத்திருக்கலாம். ரவி நூற்றுக்கணக்கான அடியாட்களுடன் மோதி அடித்து நொறுக்குவது சுத்தஹம்பக். அதேபோல க்ளைமாக்ஸில் தனிமனிதனான ரவியைப் பிடிப்பதற்காக பல லாரிகளில் ஆட்களை கூட்டிப்போவதெல்லாம் சகிக்கவில்லை.

ஒரே மழையில் நாயகனும் வில்லனும் நாயகியைப் பார்த்து மயங்குவது ரசிக்கும்படி உள்ளது. அதுவும் ஹீரோயின் பாடும் 'நீ வரும் போது' அழகான பாடலில் அந்நிகழ்வு அமைந்திருப்பது சூப்பர். ரவி காதல், அடிதடி இரண்டிலும் நன்றாக செய்திருக்கிறார். ஸ்ரேயாவுக்கு குடும்பபாங்கான தோற்றம். ஒரளவு நடிக்கவும் செய்திருக்கிறார்.

கலாபவன்மணியின் காமெடி கலந்த வில்லதனம் வழக்கமானதாக இருந்தாலும் ரசிக்கலாம். வடிவேலு குறைந்த காட்சிகளே வருகிறார். அறிமுகவில்லன் ராகுல்தேவ் வழக்கமான வில்லன்தான். மற்றும் அம்பிகா, சார்லி, வெங்கட் பிரபு, ராஜேஷ் நடித்திருக்கிறார்கள்.

ஸ்ரீஹரி பிரசாத் பாடல்கள் பரவாயில்லை. ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது.

மழை- கொஞ்சம் பெய்திருக்கிறது.

Virakesari
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
மழை ஸ்ரேயா - by Mathan - 10-10-2005, 02:33 PM
[No subject] - by Mathan - 10-10-2005, 03:04 PM
[No subject] - by kurukaalapoovan - 10-10-2005, 03:59 PM
[No subject] - by Vishnu - 10-10-2005, 05:11 PM
[No subject] - by vasisutha - 10-10-2005, 05:25 PM
[No subject] - by Vishnu - 10-10-2005, 05:29 PM
[No subject] - by Birundan - 10-10-2005, 05:34 PM
[No subject] - by KULAKADDAN - 10-10-2005, 05:38 PM
[No subject] - by vasisutha - 10-10-2005, 05:48 PM
[No subject] - by Thala - 10-10-2005, 11:09 PM
[No subject] - by அனிதா - 10-12-2005, 08:54 AM
[No subject] - by RaMa - 10-13-2005, 04:51 AM
[No subject] - by vasisutha - 10-13-2005, 11:09 PM
[No subject] - by Rasikai - 10-14-2005, 06:00 PM
[No subject] - by Mathan - 10-20-2005, 07:09 AM
[No subject] - by ப்ரியசகி - 10-20-2005, 04:57 PM
[No subject] - by Mathan - 10-20-2005, 06:24 PM
[No subject] - by Rasikai - 10-20-2005, 08:35 PM
[No subject] - by vasisutha - 10-21-2005, 02:29 PM
[No subject] - by ப்ரியசகி - 10-22-2005, 11:31 AM
[No subject] - by ப்ரியசகி - 10-22-2005, 11:42 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)