![]() |
|
மழை ஸ்ரேயா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: மழை ஸ்ரேயா (/showthread.php?tid=2945) Pages:
1
2
|
மழை ஸ்ரேயா - Mathan - 10-10-2005 <img src='http://img295.imageshack.us/img295/9073/yarlshi0da.jpg' border='0' alt='user posted image'> மழை 'மழை' டைட்டில் மட்டுமல்ல; கிட்டத்தட்ட ஒரு கேரக்டராகவே படம் முழுக்க வருகிறது. படத்தில் நாயகனும் நாயகியும் சந்திக்கும்போதெல்லாம் மழை வருவது கவிதை. மற்றபடி படம் மாமூல் மசாலாதான். 'வர்ஷம்' தெலுங்கு படத்தையே 'மழை'யாக தமிழுக்கு இறக்குமதி செய்திருக்கிறார்கள். படப்பிடிப்பில் நடிகை ஸ்ரேயாவை கோடீஸ்வர தாதா ராகுல்தேவ் கடத்திப்போகிறார். படப்பிடிப்பு தடைபட்டதால் தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் தனது நண்பரான ஹோம் மினிஸ்டர் வரை தொடர்பு கொண்டாலும் அனைவரும் ராகுல்தேவை பகைத்துக்கொள்ள அஞ்சுகிறார்கள். ஸ்ரேயாவின் அப்பா கலாபவனின் யோசனையின்படி பிரமிட் நடராஜன் ஜெயம் ரவியிடம் ஸ்ரேயாவை மீட்கச் சொல்கிறார். முதலில் ஸ்ரேயாவை காப்பாற்ற ஆவேசமாக மறுத்த ரவி பிறகு தனது சித்தப்பாவின் ஆபரேசனுக்கு பிரமிட் நடராஜன் உதவ வேண்டும் என்ற நிபந்தனையில் ஸ்ரேயாவை காப்பாற்ற செல்கிறார். இடையே ஒரு ப்ளாஷ்பேக். மழைப்பிரியரான ஸ்ரேயா மழை வந்தால் குஷியாகி மழையில் நனைந்து ஆடிப்பாடத் துவங்கிவிடுவார். ரவி-ஸ்ரேயா சந்திக்கும் போதெல்லாம் மழை வந்து இவர்களுக்குள் காதலை ஏற்படுத்துகிறது. ரவி ஸ்ரேயாவை முதன்முதலில் சந்தித்த அதே மழையில் ராகுல்தேவும் ஸ்ரேயாவை பார்த்து கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறார். குடும்பப் பொறுப்பில்லாத கலாபவன்மணிக்கு பணம் தந்து அவரை வழிக்கு கொண்டுவர முயற்சி செய்கிறார். இந்நிலையில் மகளின் காதல் பற்றி தெரியவந்த கலாபவன்மணி ராகுல்தேவிடம் தெரிவிக்கிறார். ராகுல் ஸ்ரேயாவை மறந்துவிட ரவியை மிரட்ட அது ரவியிடம் பலிப்பதில்லை. அதற்குள் ஸ்ரேயாவுக்கு நடிக்க வாய்ப்பு வரவே ராகுல் தேவ் உதவியுடன் ரவி-ஸ்ரேயா இடையே சதிசெய்து பிளவை ஏற்படுத்தி, ரவி ஊரைவிட்டே கிளம்ப வைத்து விடுகிறார். பிறகு மகளை நடிகையாக்கி கோடீஸ்வரராக ஆசைப்பட்டு ராகுல் தேவுக்கு தெரியாமல் ஊரைவிட்டு குடும்பத்துடன் சென்றுவிடுகிறார். ப்ளாஷ்பேக் முடிகிறது. ரவி எப்படி ஸ்ரேயாவை காப்பாற்றினார் ராகுல்தேவை தண்டிக்கிறார் என்பது மீதிக்கதை. அறிமுக இயக்குனர் ராஜ்குமார் மூலப்படத்திலிருந்து தமிழுக்கு ஏற்ப மாற்றங்களை பெரிதாகச் செய்யவில்லை. வில்லனின் வீட்டிலிருந்து ஸ்ரேயாவை ரவி காப்பாற்ற புத்திசாலித்தனமான நடவடிக்கை எடுப்பதாக காட்டி ரசிக்கவைத்திருக்கலாம். ரவி நூற்றுக்கணக்கான அடியாட்களுடன் மோதி அடித்து நொறுக்குவது சுத்தஹம்பக். அதேபோல க்ளைமாக்ஸில் தனிமனிதனான ரவியைப் பிடிப்பதற்காக பல லாரிகளில் ஆட்களை கூட்டிப்போவதெல்லாம் சகிக்கவில்லை. ஒரே மழையில் நாயகனும் வில்லனும் நாயகியைப் பார்த்து மயங்குவது ரசிக்கும்படி உள்ளது. அதுவும் ஹீரோயின் பாடும் 'நீ வரும் போது' அழகான பாடலில் அந்நிகழ்வு அமைந்திருப்பது சூப்பர். ரவி காதல், அடிதடி இரண்டிலும் நன்றாக செய்திருக்கிறார். ஸ்ரேயாவுக்கு குடும்பபாங்கான தோற்றம். ஒரளவு நடிக்கவும் செய்திருக்கிறார். கலாபவன்மணியின் காமெடி கலந்த வில்லதனம் வழக்கமானதாக இருந்தாலும் ரசிக்கலாம். வடிவேலு குறைந்த காட்சிகளே வருகிறார். அறிமுகவில்லன் ராகுல்தேவ் வழக்கமான வில்லன்தான். மற்றும் அம்பிகா, சார்லி, வெங்கட் பிரபு, ராஜேஷ் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீஹரி பிரசாத் பாடல்கள் பரவாயில்லை. ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. மழை- கொஞ்சம் பெய்திருக்கிறது. Virakesari - Mathan - 10-10-2005 <img src='http://img443.imageshack.us/img443/4857/yarlshi2pa.jpg' border='0' alt='user posted image'> மழை படத்தை இந்த இணைப்பில் பார்க்கலாம் (நன்றி தல) http://www.tamiltorrents.net/forums/index.php பாடல்களை தரவிறக்கம் செய்ய ... http://www.tamilbeat.com/forum/viewtopic.p...p?t=3769[/size] - kurukaalapoovan - 10-10-2005 என்ன மதன் உங்கடை குறுகால போன ரசனை. மழை எண்ட படத்தப்பற்றி எழுதிப்போட்டு கதாநாயகி நனைஞ்சிருக்கிற படத்தை கழுத்தோட மட்டும் போடுறியள்? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அவங்கள் எத்தின தரம் கட்.. கட்.. வன் மோ ற்ரைம் எண்டு கஷ்டப்பட்டு பம்பாலை தண்ணி அடிச்சு அடிச்சு எடுத்திருப்பங்கள். :oops: மழை கொஞ்சம் பெய்தென் பெய்யாட்டி தான் என்ன? கொடும்பாவி எரிச்சு வரவழைக்கிறதில என்பிரையோஞனம்? உதிலும் பாக்க தில்லானமோகனாம்பாள் பற்றியே நீங்கள் போட்டிருக்கலாம். :roll: தல நீர் தெரிவு செய்யிற படங்கள் கொஞ்சம் கூட நல்லாய் இல்லை. **** ? :evil: தணிக்கை - மதன் - Vishnu - 10-10-2005 kurukaalapoovan Wrote:என்ன மதன் உங்கடை குறுகால போன ரசனை. மழை எண்ட படத்தப்பற்றி எழுதிப்போட்டு கதாநாயகி நனைஞ்சிருக்கிற படத்தை கழுத்தோட மட்டும் போடுறியள்? <!--emo& <img src='http://img444.imageshack.us/img444/6626/naamlooswarekleuren012ys.jpg' border='0' alt='user posted image'> - vasisutha - 10-10-2005 Quote:http://www.tamiltorrents.net/forums/index.php இந்த இணைப்பில் ரொரண்ட் மூலம் தானே படம் தரவிறக்கலாம்.. வேற தளம் ஏதாவது இருந்தா சொல்லுங்கப்பா.. :roll: - Vishnu - 10-10-2005 ரோரன்ல தரையிறக்குங்கப்பா.. நல்ல தெளிவா பார்க்கலாம்... வேறு இடங்கள்ல தெளிவில்லாம இருக்கும். ஏன் வசி நீங்கள் இன்னும் உயாலக்கு மாறலையோ?? - Birundan - 10-10-2005 ஏன் வசி முதல் இணைப்பும் வேலை செய்கிறதே www.raagaswaram.com இங்கும் இருக்கு - KULAKADDAN - 10-10-2005 vasisutha Wrote:லங்காசிறி, tamilblood.tk இரண்டிலும் உள்ளது வசி.Quote:http://www.tamiltorrents.net/forums/index.php - vasisutha - 10-10-2005 நன்றி பிருந்தன் குளம்.. விஸ்ணு நான் முன்பு தொடக்கமே டொரண்ட் மூலம் தான் படங்கள் தரவிக்கி பார்ப்பது.. ஆனால் இப்ப அதை நிறுத்திவிட்டேன்.. சில பாதுகாப்பு பிரச்சனைகள் தான் காரணம்.. - Thala - 10-10-2005 vasisutha Wrote:Quote:http://www.tamiltorrents.net/forums/index.php அதுவும் ரொறன்ற் தான் ஆனா தரவிறக்க வேகம் குறைவு...<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->http://tmstorrents.com/ - அனிதா - 10-12-2005 <img src='http://img401.imageshack.us/img401/5987/shreya4000ca.jpg' border='0' alt='user posted image'> :wink: - RaMa - 10-13-2005 மழை நாயகிக்கு அதிர்ஷ்டம் அடித்தது ரஜினிகாந்த் ஜொடியாக ஸ்ரேயா ரஜினிகாந்த் நடிக்கும் சிவாஜி படத்தை ஏவி.எம். தயாரிக்கிறது. ஷங்கர் டைரக்டு செய்கிறார். ரஜினிகாந்துக்கு ஜொடியாக நடிப்பவர்கள் பட்டியலில் ஐஸ்வர்யாராய் ராணிமுகர்ஜி ஜொதிகா சினேகா நயன்தாரா ஆயிஷா ஆகிய பெயர்கள் அடிபட்டன. இப்போது அந்த அதிர்ஷ்டம் ஷிரயாவுக்கு அடித்துள்ளது. மழை படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள இவர் தெலுங்கில் முன்னணி நடிகைகள் வரிசையில் இடம் பிடித்திருக்கிறார். நன்றி: லாங்காசிறி - vasisutha - 10-13-2005 எல்லாம் யாழில அவக்கு ஒரு பக்கம் திறந்த ராசிதான் காரணம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Rasikai - 10-14-2005 <b>மழை நாயகிக்கு அதிர்ஷ்டம் அடித்தது ரஜினிகாந்த் ஜொடியாக ஸ்ரேயா</b> சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜொடியாக ஸ்ரேயா நடிக்கிறார். ரஜினிகாந்த் நடிக்கும் சிவாஜி படத்தை ஏவி.எம். தயாரிக்கிறது. ஷங்கர் டைரக்டு செய்கிறார். ரஜினிகாந்துக்கு ஜொடியாக நடிப்பவர்கள் பட்டியலில் ஐஸ்வர்யாராய் ராணிமுகர்ஜி ஜொதிகா சினேகா நயன்தாரா ஆயிஷா ஆகிய பெயர்கள் அடிபட்டன. இப்போது அந்த அதிர்ஷ்டம் ஷிரயாவுக்கு அடித்துள்ளது. மழை படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள இவர் தெலுங்கில் முன்னணி நடிகைகள் வரிசையில் இடம் பிடித்திருக்கிறார். படத்தில் 2 நாயகிகள் நடிப்பதால் மற்றொரு நாயகியாக நடிக்க ஐஸ்வர்யாராயிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர் நடிக்க வேண்டும் என்பதில் ரஜினியும் ஆர்வமாக இருக்கிறார். அந்த விருப்பத்தை சந்திரமுகி 200 வதுநாள் விழாவில் வெளியிட்டார். ஐஸ்வர்யாராயை நேரில் சந்தித்து பேச ஷங்கர் நேரம் கேட்டிருக்கிறார். சில தினங்களில் அவர் ஐஸ்வர்யாராயை சந்திக்கிறார். 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் அதற்குள் காட்சிகளை எடுத்து முடித்துவிடலாம் என்று ஷங்கர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனை அவரும் பரிசீலித்து வருகிறார். சிவாஜி படத்தின் இசையை ஏ.ஆர்.ரகுமான் அமைக்கிறார். கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார். dinamalar.com விடுப்பு : . - Mathan - 10-20-2005 தனுஷ் படத்திலிருந்து விலகி கொள்கிறேன்... -மழை நாயகி ஸ்ரேயா அறிவிப்பு! காரணம் ரஜினியா? <img src='http://img.indiaglitz.com/telugu/gallery/Actress/Shriya/9.jpg' border='0' alt='user posted image'> ஒரே நேரத்தில் மருமகனோடும், மாமனாரோடும் ஜோடி போட தயாரானார் தெலுங்கு தேச தென்றல் ஸ்ரேயா. அடுக்குமா இந்த அடாவடி? என்று தவித்து போன மாமனார் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. மருமகன் படத்திலிருந்து விலகிக் கொண்டார் ஸ்ரேயா. அதிகாரபூர்வமாக அவரே அறிவித்த செய்தி இது. ரஜினி சார் படங்களை நிறைய பார்த்திருக்கேன். அவரோட ஒரு முறையாவது பேச வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. ஆனால் அவர் படத்திலேயே ஹீரோயினா நடிப்பேன்னு கனவில் கூட நினைக்கலை. இந்த வாய்ப்புக்காக எத்தனையோ நடிகைகள் போட்டி போட்டு கொண்டிருக்கும்போது, என்னை செலக்ட் பண்ணிய அவருடைய பெருந்தன்மைக்கு நான் சல்யூட் அடிக்கணும். -இப்படி நீண்டு கொண்டே போகிறது ஸ்ரேயாவின் ரஜினி புராணம். இனிமேல்தான் மெயின் விஷயத்திற்கு வருகிறார் ஸ்ரே! இந்த படத்திற்காக மொத்தமாக கால்ஷீட் கொடுக்க வேண்டியிருந்ததால் நான் தனுஷ§டன் நடிக்கவிருந்த திருவிளையாடல் ஆரம்பம் படத்திற்கு கொடுத்திருந்த கால்ஷீட்டுகளை ரத்து செய்கிறேன். ஸ்ரேயாவின் இந்த அறிவிப்பு தனுஷை அதிர்ச்சியடைய செய்ததா என்றால் அதுதான் இல்லை. இப்படி அறிவிக்க சொல்லி இந்த படத்திலிருந்து ஸ்ரேயாவை விலகிக் கொள்ள செய்ததே மாமனார்தானாம். மாமனார் சொல் மிக்க மந்திரம் ஏது? tamil cinema - ப்ரியசகி - 10-20-2005 ம்ம்ம்ம்.... 8) 8) 8) :? :evil: - Mathan - 10-20-2005 இந்த முக அடையாளங்களுக்கு என்ன அர்த்தம்? - Rasikai - 10-20-2005 ரஜினிகாந்த் படத்துக்கு கால்ஷீட் கொடுத்த நடிகை ஸ்ரேயா தனுஷ் படத்துக்கு கால்ஷீட் ரத்து செய்கிறார். சிவாஜி படத்தில் ரஜினிகாந்துக்கு ஜொடியாக நடிக்க ஸ்ரேயா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சமீபத்தில் திரைக்கு வந்த மழை படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் இவர் ஸ்ரேயா கூறியது ரஜினியின் ரசிகை நான். அவருடன் நடிக்க வேண்டும் என்று எல்லா நடிகைகளுக்கும் ஆசை இருக்கும். எனக்கும் அந்த ஆசை இருந்தது. அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என கனவில்கூட நினைக்கவில்லை. தகவல் அறிந்தவுடன் துள்ளிக்குதித்தேன். சந்திரமுகி படத்தை சமீபத்தில் பார்த்தேன். அசத்தலாக இருந்தது. பாட்ஷா படையப்பா படங்களையும் பார்த்திருக்கிறேன். அவரை நேரில் பார்த்து நிறைய பேசவேண்டும் என்பது என் ஆசை. அது சிவாஜி படத்தில் நிறைவேறப்போகிறது. என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஷங்கர் இயக்கிய படங்களை பார்க்கும்போது ஆலிவுட் படங்களை பார்ப்பதுபோல் இருக்கும். அவரது இயக்கத்தில் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன். திரையுலக சாதனையாளர்களாக உலா வந்துக்கொண்டிருக்கும் இவர்களின் கூட்டணியில் பணியாற்ற இருக்கும் நாளைஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்றார் ஸ்ரேயா. திருவிளையடல் ஆரம்பம் படத்தில் தனு{டன் நடிக்க ஸ்ரேயா ஏற்கனவே ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்போது சிவாஜி படத்திற்கு ஒட்டுமொத்தமாக கால்ஷீட் அள்ளிக் கொடுத்திருப்பதால் தனுஷ் படத்துக்கு கால்ஷீட் தர இயலாத காரியமாக இருப்பதாக கூறி வருகிறாராம். உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஸ்ரேயா டெல்லியில் படித்தார். தெலுங்கு படத்தில் அறிமுகமாகி தற்போது தமிழில் காலூன்றி இருக்கிறார். தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாக நடிகை நான்தான் என்கிறார். dinakaran.com விடுப்பு : . - vasisutha - 10-21-2005 Mathan Wrote:இந்த முக அடையாளங்களுக்கு என்ன அர்த்தம்? ஆனந்தக் கோபம் என்று அர்த்தம் 8) :evil: - ப்ரியசகி - 10-22-2005 vasisutha Wrote:Mathan Wrote:இந்த முக அடையாளங்களுக்கு என்ன அர்த்தம்? ம்ம்..வசி அண்ணா சொன்னா சரியாத்தான் இருக்கும் :wink: |