10-10-2005, 07:52 AM
அயன்ஸ்ரீனும் நியூட்டனும் பட்டறிவை வைச்சு சிந்திச்சாங்க...விஞ்ஞான சித்தாந்தம் படைச்சாங்க...பட்டறிவை வைச்சு அப்பிளை மேலும் கீழும் எறிஞ்சி விளையாடிட்டு இருக்கல்ல...! நீங்க பட்டறிவு என்று இன்னும் பட்டுப்போன கருத்துக்களுக்கு புதிய தோற்றம் கொடுத்து புரட்சி என்று உங்க தேவைகளை தீர்க்க நிக்கிறியள்... உண்மை அதுவல்ல... இப்ப சமூகமோ விஞ்ஞானமோ எல்லாம் ஆய்வின் முடிவில்தான் தீர்வுகள் எட்டுகின்றன...! வேணும் எண்டா தமிழர்கள் மத்தியில் ஒரு சமூகவியல் ஆய்வு செய்வம் வாங்கோ... பேராசிரியர்கள்... ஆய்வாளர்களை வைச்சு நீங்க வொலண்டியரா இருக்க செய்வம்... முடிவுகளை எட்டுவம்...! சும்மா தனி மனித கற்பனைகளை வக்கிரங்களை பட்டறிவு பகுத்தறிவு என்றதில அர்த்தமே இல்ல...! அதை ஏற்க வேணும் எண்டது சமுதாயக் கட்டாயமும் இல்ல...இதுகள் பொழுது போக்கிட்டு போறதாத்தான் முடியும்...! விளையாட்டுத் தனமான குருட்டுக் கற்பனைக் கருத்துக்களால்...மற்றவர்கள் மனங்கள் நோகடிக்கப்படுவதே தொடர்கிறது..! உங்களால் சமூக ஆய்வு முடிவுகளையே கிரகிக்க முடியல்ல...என்றால் உங்களுக்கு பட்டறிவுதான் சரி..என்றால்...அதோட கிடந்து உளலுங்கோ...எவரும் வேண்டாம் எண்டல்ல..ஆனா அதை சமூகமும் செய்யனும் புரட்சி சீர்திருத்தம் என்று பிதட்டாதேங்கோ...???! ஆதாரபூர்வமில்லாத தனி நபர் கற்பனைகளை வைச்சு... சமூக முடிவுகள் எட்ட இது ஒன்றும் கற்காலம் இல்லை...! விஞ்ஞான யுகம்... ஆய்வு செய்து முடிவுகளை எட்டுவம் வாங்கோ...! எத்தினை பேர் தயார்...???! தமிழர்கள் மத்தியில் நூற்றாண்டுகளாகவே சமூகவியல் ஆய்வுகள் நடந்ததாக தெரியல்ல...! சில சமூகவியல் ஆய்வுகளில் ஈடுபட்டவர்கள் என்ற வகையில் சிங்களவர்கள் செய்கிறார்கள்...அரசியல் ஆய்வுகளுக்கு அப்பாலும்...என்பது மெய்...! குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பல ஆய்வுகளுக்கு இடமிருக்கு..சமூகவியல் விஞ்ஞானம் படிப்பவர்கள் இவற்றைத் தேர்வு செய்யுங்களன்...! நல்ல முடிவுகளைத் தாருங்களன்.. அறிவு பூர்வமா ஒப்பீட்டு ரீதியா...சும்மா கற்பனைல அளந்துகட்டாம...! நேரத்தை வீணடிக்காம... தமிழர்கள் பட்டங்கள் பெறுவது கலியாணம் முடிக்க...என்று சிங்கள நண்பன் ஒருவன் சொன்னது இப்ப சரியாத்தான் தெரியுது...! நீங்கள் திருந்தாயள்...அது நிச்சயம்..இப்படியே உங்களுக்க நீங்களே யார் புரட்சி சீர்திருத்தம் பேசுறான் பண்ணுறான் என்று உங்க அளவீடுகளை வைச்சிட்டு மெச்சிட்டு இருங்க...உலகம் அதைக் கண்டு கொள்ளப் போறதில்ல..அரசியலிலும் இதுதான் நடந்திட்டு இருக்கு...! உருப்படாயள்...அறிவுபூர்வமா ஆதார பூர்வமா ஆய்வியல் ரீதியா நீங்க விடயங்களை அணுகாட்டி உருப்படாயள்..தூசணக் கவிதை (அறிவுள்ள எவனும் தூசணத்தில எழுதான்...அவனுக்கு அதுக்கு நல்ல பொருள் கொடுக்க தெரியும்...இருக்கு...! அது ஆங்கிலமோ தமிழோ பிரஞ்சோ...) எழுதிறத பாராட்டிட்டு புரட்சி என்று கொண்டு இருப்பியள்...இதுதான் நிஜம்..! இதுக்கு மேல உங்க கூட கதைக்கிறதில அர்த்தமே இல்லை...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

