10-10-2005, 04:50 AM
vennila Wrote:எனது கருத்து அதாவது பெண்மையை மதிக்க தெரியாதவங்க என்பதற்கான விளக்கம் மழையில் நனைந்து தெப்பலான உடையுடன் வந்த பெண்மையை ரசித்தால் இவர்கள் பெண்மையை மதிக்கிறவங்களா? இதுதான் என் கேள்வி....
மேலுள்ள உங்கள் கருத்து நீங்கள் எப்படி இந்தக் கவிதையில் சொல்லப் பட்டதை உள்வாங்கி உள்ளீர்கள் என்பதற்கு சான்று.தனி நபர் பற்றுதலில் இருந்து கருத்து எழுதும் போது ஏற்படும் பிறழ்வுகள் இவை தான்.இதை விட நான் வேறு ஒன்றும் புதிசாக , இதை வாசிப்பவர்களுக்கு எழுதி விட முடியாது.கீழே யாழ் களத்தில் இடப்பட்ட இந்தக் கவிதை சான்று பகரும்.
http://www.yarl.com/forum/viewtopic.php?t=3086&start=0
பிரியாவிடை
பட்ட மரமான என்னை விட்டு
பறந்து செல்ல
நீ நினைத்துவிட்டாய்
பரவாயில்லை- நீ
பறந்து செல்
அழகிய பட்சியே
ஓர் பசுமையான சோலைதனில்
படர்ந்து வளர்ந்த அடர்ந்த
மரமொன்றிலே
அமைத்துக் கொள்
உனக்காக ஒர் அழகிய கூடுதனை
பட்டுப்போன மொட்டை மரமான
நான் உன் ஞாபகத்தோடே
மீதமாயிருக்கின்ற -என்
காலத்தைக் கடத்திக் கொள்கிறேன்
இன்னும் சில நாட்களிலே
நிலத்திலே சரிந்து விழுவேன்
அல்லது
சரிக்கப்பட்டு விழுவேன்
நிதமும் உன் நினைவுக் கோடரி
என்னிதயமதை கொத்தி தின்கிறது
என்ன செய்வது
எனக்கிது கண்ணீர் கலந்த
கடும் கோடையாயிற்று
இறுதியாய் உன் இரைப்பையின்
பசி தீர்த்திடவென
ஒரு கனிகூட இல்லாது போயிற்று
இந்த காய்ந்த காயப்பட்ட கிளையிலே
நிழலுக்காகவென நீ
ஒதுங்கியதை உறவுக்காக
என் பக்கம் ஒதுங்கிடுவதாய் உவகைகொண்டு
உள்ளமதை சிதைத்துக்கொண்டது தான் மிச்சம்
மொட்டை மரமான என்மீதும்
நீ மோகம் கொண்டு ஓய்வு தேடி
உறவாடியதற்காக உயிர்மூச்சுள்ளவரை
உன் நினைவினை நான் இழக்கமாட்டேன்
மரமான மனமும் ரணமான வாழ்வும்
உரமான உன் நினைவால்
உயிர்வாழ்ந்திடும் என்பது
உன் நினைப்பு.
ஒரு உறுதியற்ற அஸ்திவாரம்
ஒரு நாள் சரிந்துவிடும்
பட்சியே நீயாவது
சந்தோசமாக வாழ்ந்திடு

