10-09-2005, 07:25 PM
இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. உமது நிறுவனத்திüன் ஒரு சகோதர நிறுவனத்தில் தானே மீணடும் வேலை தருகின்றார்கள். ஆகவே உமது தலைமைநிலயம் ஒன்று தானே. ஆனால் புதிதாக வேலை ஒப்பந்தம் கையெழுத்து போடும்போது அதனை நன்கு வாசித்துப் பார்த்து கையெழுத்திடவும். உங்கள் தலைமை நிறுவனமும் ஒன்றாதலால் உங்கள் 8வருட சேவையும் சேர்த்தே கணக்கிட வேண்டும் அதே போல் சம்பளத்திலும் மாற்றமிருக்காது ( குறையாது ) பார்த்துக் கொள்ளும். இவையெல்லாவற்றிற்கும் ஆலோசனை நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு அஜீவன் கூறியதுபோல் தொழிற்சங்க உரிமைகளுக்காக நடவடிக்கை எடுக்கும் அமைப்போன்றில் நீங்கள் அங்கத்துவராக இணைந்திருப்பது நல்லது. தற்போது இவ்வாறான நடவடிக்கைகளுக்கு யுூனியா (Unia) என்ற அமைப்பு நல்லது. அங்கத்துவப்பணமும் குறைவு. நீங்கள் இருக்குமிடத்திலும் இதன் கிளைக்காரியாலயம் இருக்கும். விரும்பினால் இணைந்து கொள்ளுங்கள். உங்கள் அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து வைப்பார்கள்.

