![]() |
|
சுவிசில்லிருந்து உதவிதேவை...... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: சுவிசில்லிருந்து உதவிதேவை...... (/showthread.php?tid=2962) |
சுவிசில்லிருந்து உதவிதேவை...... - விது - 10-09-2005 சுவிசில்லிருந்து உதவிதேவை...... நான் கடந்த 8 வருடங்களாக வேலைசெய்த நிறுவனம் திடீர்ரென ழூடப்போவதாகவும் எமது தாய்நிறுவனத்தின் பல்வேறுதொழில் சார் கிளைநிறுவனங்களின் ஏதாவதுதொன்றில் எமது தெரிவுக்கேற்ப வேலைதருவதாக கூறியுள்ளார்கள். எனது கேள்வி என்னவெண்றால் இப்படி வேலைமாறுவது எனக்கு சாதகமா? அல்லது பாதகமா? நான் புதிதாக வேலைசெய்ய போகும்மிடத்தில் ஏதோஒரு காரணம் காட்டி இலகுவில் வேலையில்லிருந்து நீக்கமுடியுமல்லவா? தயவு செய்து உங்கள் சொந்த அனுபவம.; கேள்விப்பட்டவை.தொழில்சட்டவிதிமுறைகள் தெரிந்தால் உதவுங்கள். மிக்க நன்றி: விது சுவிஸ் - AJeevan - 10-09-2005 இது பாதகமில்லை விது. சாதகமே. நீங்கள் விரும்பாவிட்டால் உங்களை வேலையில் இருந்து நிறுத்த நீங்களே வாய்ப்பளிப்பதாகிவிடும். இருந்தாலும் நீங்கள் புதிதாக வேலைக்கான கொண்டிராக்டில் கையெழுத்திட வேண்டி வரும். அப்போது படித்துப் பார்த்து கையெழுத்திடவும். இதற்கு நல்லதொரு வழி தொழிற் சங்க உரிமைக்காக பேசும் இடங்கள் இருக்கின்றன. உடனடியாக அதில் இணைந்து கொள்வதுதான். அவர்கள் வழி காட்டுவார்கள். தேவைப்படின் எங்கே வேலை செய்கிறீர்கள் என்று எழுதினால் அது சார்பான யுனியன்(Union) பெயர்களைத் தரலாம். - Vasampu - 10-09-2005 இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. உமது நிறுவனத்திüன் ஒரு சகோதர நிறுவனத்தில் தானே மீணடும் வேலை தருகின்றார்கள். ஆகவே உமது தலைமைநிலயம் ஒன்று தானே. ஆனால் புதிதாக வேலை ஒப்பந்தம் கையெழுத்து போடும்போது அதனை நன்கு வாசித்துப் பார்த்து கையெழுத்திடவும். உங்கள் தலைமை நிறுவனமும் ஒன்றாதலால் உங்கள் 8வருட சேவையும் சேர்த்தே கணக்கிட வேண்டும் அதே போல் சம்பளத்திலும் மாற்றமிருக்காது ( குறையாது ) பார்த்துக் கொள்ளும். இவையெல்லாவற்றிற்கும் ஆலோசனை நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு அஜீவன் கூறியதுபோல் தொழிற்சங்க உரிமைகளுக்காக நடவடிக்கை எடுக்கும் அமைப்போன்றில் நீங்கள் அங்கத்துவராக இணைந்திருப்பது நல்லது. தற்போது இவ்வாறான நடவடிக்கைகளுக்கு யுூனியா (Unia) என்ற அமைப்பு நல்லது. அங்கத்துவப்பணமும் குறைவு. நீங்கள் இருக்குமிடத்திலும் இதன் கிளைக்காரியாலயம் இருக்கும். விரும்பினால் இணைந்து கொள்ளுங்கள். உங்கள் அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து வைப்பார்கள். - விது - 10-10-2005 மிக்க நன்றி அஜீவன்அண்ணா மற்றும் வசம்பு யுூனியாவை பற்றி கேள்விப்படடுள்ளேன் இங்கும் கிளையிருக்கிறது இனித்தான் இணையவுள்ளேன் தகவலுக்கு மிக்க நன்றி. - AJeevan - 10-10-2005 விது கோப் ரெட்சுட்டிலிம் (Coop coop Rechtsschutz ) நீங்கள் கேட்கலாம். VPOD, SSP என்ற அரசியல் கட்சி தொழில் சங்கம் மிக பிரபலம் வாய்ந்தது. இதன் உறுப்பினர்கள் வைத்தியசாலைகள் - விமான நிலையம் - முக்கிய தொழில்சாலைகள் போன்றவற்றில் இருக்கின்றனர். விரும்பினால் கோப் ரெட்சுட்டில் கேட்டும் பாருங்கள். நான் VPOD உறுப்பினன். மேலதிக விபரங்கள் <img src='http://www.vpod-ssp.ch/vpod_ssp.gif' border='0' alt='user posted image'> http://www.vpod-ssp.ch/ or http://www.cooprecht.ch/ - விது - 10-10-2005 மீண்டும் மிக்க நன்றி அஜீவன்அண்ணா நானும் ஏற்கனவே டஸ் எனும் றெக்ஸ்சுட்டின் உறுப்பினர் டஸ்சும் வேலைசம்பந்தமான பிரச்சினைகளையும் கையாள்வதாகவும் கூறியுள்ளார்கள் அவர்களுடன் இனித்தான் தொடர்பு கொள்ளவுள்ளோன். வேலைமாறுவதில் எந்தப்பிரச்சினையும்மில்லை ஆனால் புதிய இடத்தில் குறுகியகாலத்தில் வேலையில்லிருந்து நிறுத்தினால் எமது நிறுவனம் மூடப்படும்போது கிடைக்க வேண்டிய நஸ்டஈடுகள் மற்றும் சலுகைகளையிழக்க வேண்டிவரலாம் என்பதே என்பயம் |