Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கனவின் முகங்கள்
#4
கனவுகள் ஒரு விநோத போதகன். என்றோ நிகழ்ந்தவைகளை என்றோ ஒரு நாள் வெளிப்படுத்தும் - உரு மாற்றி - அடையாளம் தெரியாத வடிவத்தில். பாட்டியை நேசித்த மனம் அந்தப் பிரிவினால் பாதிக்கப்பட்டு கனவு காணுகிறது - மீண்டும் அந்தப் பாட்டியின் வடிவமே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று. அதுவரையிலும் சரிதான்.

ஆனால் கரையேறிய பின்னும் எதிர்திசையில் ஒரு நண்பன் (நானல்ல) நிற்கின்றானே - அது எதனால்? மற்றும் கவிதையினுள் - மற்றொரு பாத்திரமாக வந்து நிற்கிறார் தந்தை. அதன் பொருள்? அதுவும் அவர் தன் தாயின் நெஞ்சில் கை வைத்து அழுத்தி தன் தாயை எழுப்பிக் கொண்டு போய்விடுகிறார். உங்கள் நேசத்திற்குரிய பாட்டி எழுந்து போனதும் தான் உங்களின் கனவு ஒரு முடிவுக்கு வருகிறது.

எதிர்திசை நண்பன்இ அருமைத் தந்தையார்இ பாசமிகு பாட்டி இவர்களுக்குள் பொதுவாக உங்களிடம் ஏதோ ஒன்று இருக்கிறது. தேடிப் பாருங்கள் - வேறு ஏதாவது புலப்படும்.

பாட்டி மகளாக பிறப்பெடுப்பதல்ல கனவு. இன்னும் ஆழத்தில் வேறு பொருள்களும் காணக் கிடைக்கும். இல்லையா?
-----------------


-----------------




-----------------
Reply


Messages In This Thread
[No subject] - by RaMa - 10-08-2005, 05:50 PM
[No subject] - by ப்ரியசகி - 10-09-2005, 11:32 AM
[No subject] - by Nanban - 10-09-2005, 04:02 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)