![]() |
|
கனவின் முகங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கனவின் முகங்கள் (/showthread.php?tid=2975) |
கனவின் முகங்கள் - Muthukumaran - 10-08-2005 <b>என் கனவில் வந்த ஒரு நிகழ்வை கவிதையாக்கும் முயற்சி. கவிதையாகாமலும் இருக்கலாம் என்ற போதிலும் ஒரு சிறு முயற்சி...</b> [u][size=18]<b>கனவின் முகங்கள்</b> <b>நெல்லைக்குள் புகுந்த தண்ணீர் நாம் சொந்த ஊருக்குப் போன போதும் வந்துவிட்டது. கரை தேடி நானொதுங்க நீ வேகமாக செல்கிறாய். எதிர்கரையில் நிற்கிறான் எனது நண்பனொருவன் நம் பழைய வீட்டிற்கு சென்ற பின் நீ என்னை அணைத்துக் கொண்ட அந்த நேரத்தில். உன் உயிர் பிரியத் துவங்குவதாய் உணர்கிறேன் ஒருவித வாசம் என்னை குலையச் செய்ய நகர்ந்த என்னை ஓரக்கண்ணால் அழைத்தபோது மடி தந்தேன் நீ அடங்க... சட்டெனன்று ஒரு மாற்றம் - நீ ஒற்றைப்பல் இருக்கும் பச்சிளங்குழந்தையாகிவிட என் மகளாய் பிறந்துவிடு என்றானது எனது பிராத்தனைகள்.. உறவுகள் கூடி நிற்க நான் உன் மரணத்தைச் சொன்ன நேரத்தில் அப்பா உன் நெஞ்சில் கைவைத்தழுத்த மறுபடியும் சுருங்கிய தேகத்தோடு எழுகிறாய் என் கனவை முடித்து....</b> புரியாதவர்களுக்கு கனவில் வந்தவர் என் அப்பத்தா. இது போல அடிக்கடி வரும். காட்சிகளில் மட்டும் மாற்றம் ஆனால் கரு ஒன்றே. - RaMa - 10-08-2005 ம்ம் உங்கள் அப்பத்தாவின் கவிதை நன்று - ப்ரியசகி - 10-09-2005 ஆகா..வித்யாசமாக இருக்கிறது... - Nanban - 10-09-2005 கனவுகள் ஒரு விநோத போதகன். என்றோ நிகழ்ந்தவைகளை என்றோ ஒரு நாள் வெளிப்படுத்தும் - உரு மாற்றி - அடையாளம் தெரியாத வடிவத்தில். பாட்டியை நேசித்த மனம் அந்தப் பிரிவினால் பாதிக்கப்பட்டு கனவு காணுகிறது - மீண்டும் அந்தப் பாட்டியின் வடிவமே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று. அதுவரையிலும் சரிதான். ஆனால் கரையேறிய பின்னும் எதிர்திசையில் ஒரு நண்பன் (நானல்ல) நிற்கின்றானே - அது எதனால்? மற்றும் கவிதையினுள் - மற்றொரு பாத்திரமாக வந்து நிற்கிறார் தந்தை. அதன் பொருள்? அதுவும் அவர் தன் தாயின் நெஞ்சில் கை வைத்து அழுத்தி தன் தாயை எழுப்பிக் கொண்டு போய்விடுகிறார். உங்கள் நேசத்திற்குரிய பாட்டி எழுந்து போனதும் தான் உங்களின் கனவு ஒரு முடிவுக்கு வருகிறது. எதிர்திசை நண்பன்இ அருமைத் தந்தையார்இ பாசமிகு பாட்டி இவர்களுக்குள் பொதுவாக உங்களிடம் ஏதோ ஒன்று இருக்கிறது. தேடிப் பாருங்கள் - வேறு ஏதாவது புலப்படும். பாட்டி மகளாக பிறப்பெடுப்பதல்ல கனவு. இன்னும் ஆழத்தில் வேறு பொருள்களும் காணக் கிடைக்கும். இல்லையா? |