11-16-2003, 06:07 PM
* கண்களை இழந்தவன் குருடனல்ல; எவன் தன்னிடமுள்ள குறைகளை மறைக்கிறானோ அவனே குருடன்.
—வால்டேர்.
* உற்சாகமுள்ளவனை எதிர்ப்பு தடை செய்வதில்லை. மாறாக அவனுக்கு அது மேலும் ஊக்கத்தை ஊட்டுகிறது.
—ஹில்லர்
* சோகம் எனும் பறவைகள், உங்கள் தலைக்கு மேல் பறப்பதை தடுக்க இயலாது; ஆனால், அவை உங்கள் தலையிலே கூடு கட்டி வாழ்வதை தவிர்க்கலாம். —ஸ்டிலி.
* அழகுணர்ச்சி, அன்புணர்ச்சி, நன்னடத்தை ஆகியவை மனித குலத்துக்கு பெருமையைக் கொடுக்கும்.
—அங்கர் பில்டி.
* பெருமையோ, இகழ்ச்சியோ தானே உருவாவதில்லை; உங்கள் கடமையை நன்றாக செய்யுங்கள்; எல்லாமே அதில்தான் அடங்குகின்றன. —இதோபதேசம்.
* மனவலிமை இருந்தால் மட்டும் போதாது; அவற்றை நல்லவிதமாக பயன்படுத்தவும் வேண்டும். —டெஸ்கார்டெஸ்.
* நம்பிக்கையும், அன்பும் ஆன்மாவின் தாய்ப்பால். இவ்விரண்டும் பெறாவிட்டால் ஆற்றல் முழுவதும் அழிந்து போகும். —ரஸ்கின்.
* ஒழுக்கம் போர்க்களம் போன்றது. நாம் ஒழுக்கத்தோடு வாழ வேண்டுமானால் ஓயாமல் மனதோடு போராட வேண்டும். —ரூஸோ.
* அறிவு இல்லாமல் தலை இயங்க முடியாது; அது போலவே அன்பு இல்லாமல் இதயம் இயங்க முடியாது.
—போனஸ் அயர்ஸ்.
* அன்பு அருளைத் தரும்; ஆற்றல் பொருளைத் தரும்; அன்புள்ள இடத்தில் தான் ஆண்டவன் இருக்கிறார்.
—காந்திஜி.
* எந்த ஒரு செயலிலும், உணர்ச்சி வசப்படாத சகிப்புத் தன்மையும், நிதானமும் சிறப்புக்குரியவை. —நபிகள் நாயகம்.
* துன்பங்களை பலர் பொறுத்து கொள்கின்றனர். ஆனால், அவமதிப்பை சகிப்பவர்கள் வெகு சிலர் தான்.
—தாமஸ்.
* தவறுகளை ஒப்புக் கொள்ளும் தைரியமும், அதை திருத்திக் கொள்வதற்கான பலனும் தான் வெற்றிக்கான வழி. —லெனின்.
* பிறருடைய அன்புக்கு பாத்திரமாவதை விட பிறரது நம்பிக்கைக்கு பாத்திரமாவது பன்மடங்கு மேல்.
—டொனால்டு.
* வற்றி போனால்தான், கிணற்றின் அருமை தெரியும். —பிராங்க்ளின்.
* தொழில் இல்லாத கல்வி, நீரின்றி வாடும் தாவரத்தைப் போன்றது. — போவீ.
* வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அதேபோல வாழ்வில், உயர்வும் ஒரே நாளில் கிட்டி விடாது.
—அரிஸ்டாட்டில்.
* உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் இருக்கும்; உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்வு இருக்கும். —சாக்ரடீஸ்.
* உற்சாகம் இல்லாத உள்ளங்களுக்கு சோம்பல் சரணாலயம்; மூடர்களுக்கு அது ஓய்வு நாள். —செஸ்டர்பீல்டு.
* பிறரை விட தான் புத்திசாலி என்று ஜம்பம் பேசுபவன் எளிதில் பிறரிடம் ஏமாந்து போவான். —ஈசாப்.
* கடமை உணர்வே உன் நேர்மையான வாழ்க்கைக்கு ஆதாரம். —ஹென்றி.
நன்றி: தினமலர்

[i][b]
!
!