10-08-2005, 06:17 PM
சுபா Wrote:<b>\"சுபா நீங்க சொந்தப் பேரில வந்து எழுதுங்க,10 கருத்தோடேயே நல்லா தமிழ் எழுதுறீங்க.\"</b>
என்ன நாரதரே சொல்லுறீங்க? இது என்னுடைய சொந்த பெயர்தான் இத விட வேற பெயருக்கு நான் எங்க போறது..!என்னுடைய முளுப்பெயரே சிறிதரன் சுபா தான் .. நான் பூலோகத்தில உள்ள பெயரெல்லாம் வைக்கலிங்க என்னுடைய சொந்த பெயர்ல வந்துருக்கன்.. சரி நீங்களும் புதுசா யாழ்ல இணைந்தவுடனே நல்லா தமிழ்ல தானே எழுதியிருக்குறீங்க அப்ப உங்கள சொல்லலாமா நீங்க வேற 4 5 பெயர்ல வாறீங்க எண்டு .. :wink: :roll:
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...ighlight=#92701 இத பாருங்க நீங்களும் தமிழ்ல தான் எழுதியிருக்குறீங்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 8)
அது சரி என்ன யாழ்ல கருத்துக்கள் எழுதனும் எண்டால் எங்காவது பள்ளிக் கூடத்தில் தமிழ் படித்திட்டு வந்து எழுதனுமா என்ன..? அப்படியா எல்லாரும் எழுதுறீங்க????
நீங்க கொண்டு வந்து கவிதை என்று சொல்லி இதை போட்டு இருக்குறீங்களே அது எனக்கு வாசிக்க ஒரு மாதிரி இருந்தது சோ அதுதான் என்ன கருத்தை சொன்னன் சரிங்களா. யாழ்க்களத்தில் கருத்துக்கள் எழுதும் மற்ற பெண்களும் இந்த பக்கத்தில் வந்து கருந்து எழுதுறாங்க இல்லையெண்டால் என்ன அர்த்தம் இந்த கவிதை அவர்களுக்கும் பிடிக்கவில்லை என்றுதானே.. :roll:
கலோ வாங்கோ வங்கோ சுபா
நீங்க வந்ததே தெரியேல்ல இதுக்க உடனேயே வந்திட்டியள்,இதுக்க ஒருத்தரும் பெண்கள் எழுதேல்ல எண்டுறியள் ஏன் நீங்க எழுதிருக்கிறியள்,வெண்ணிலா எழுதியிருக்கிறா.
பிறகு கனக்க சொந்தப் பேரில இணயத்தில எழுதிற கன பெண்கள் பின்னோட்டம் இட்டிருக்கினம்.சில எழுத்தாளர் மார் கூட தனி மடலில எழுதினவை.அவைக்கு ஏன் களத்தில எழுதப் பயம் எண்டு தெரியேல்ல.சில வேளை நான் இதுக்க எழுதினதுகளை வாசிச்சா உங்களுக்கு விளங்கும். நீங்க பழசெல்லாம் வாசிச்சிருக்கிறியள் பிரட்டிப் பாருங்கோவன்,பெண்ணியம் கதச்சவைக் கெல்லாம் என்ன முத்திரை குத்தப்பட்டது எண்டு.
வேற உங்கட விமர்சனத்திற்கு வருவம் முதலில கவிதைன்ட கருவப் பற்றி என்ன நினைக்கிறீங்க , நீங்க கொளும்பில பஸ்ஸில எல்லாம் போய் வாறனீங்க தானே.அதில் கூறப்பட்டவை பொய் என்கின்றீர்களா?அப்படி நடப்பதில்லை என்கின்றீர்களா?அப்படி எண்டா நல்ல விசயம்.இவர் எழுதினவர் கற்பனையில தான் எழுதி இருக்கிறார் என்ன.பெண்களுக்கு பிரச்சினயே இப்படி எழுதுறாக்களால தானே. நான் ஒரு விசரன் பேசாம இருப்பம் எண்டில்ல.போட்ட ஐசின்ட படத்தைப் பாத்து ரசிச்சிப்போட்டு இருப்பம் எண்டில்ல.என்னாப்ப இன்னும் கொன்ச்சம் படம் இதை விடத் திறமாக் கிடக்குது கொன்டு வந்து போடுங்க்கோவன்,இன்னும் நாகரீகமாக இருக்கும்,உந்த விசரங்களின்ட கவிதய விட்டுட்டு.
சரி அடுத்தது மொழி அதில சொன்னதை எப்படி மாற்றிச் சொல்லலாம். உங்களுக்கு வேற மாதிரிச் சொல்லேலும் எண்டா எழுதுங்கோவன்.அப்ப பாப்பம் கவிதை எப்படி வருகுது எண்டு.எனக்கு அந்த மொழியில எழுதினதால தான் அது ஒரு கூரிய ஆயிதம் போல ஒரு வீச்சா வந்திருக்கிற மாதிரி இருக்கு.இதை விடத் திறமான மொழி எல்லம் கம்பரின் கம்பராமாயணத்தில வந்திருக்கு அதை எல்லாம் எவ்வளவு நல்ல விசயம் எண்டு இந்தக் களத்திலேயே வாதிட்டிருக்கினம்.மொழி எண்பது ஒரு ஆயிதம் மாதிரி அதை என்னத்துக்குப் பயன் படுத்திறம் எண்டதில தான் அதுவின்ட நன்மை தீமை இருக்கு.ஒரு விசயம் அரு வெறுப்பானது எண்டதக் காட்ட அவர் அந்த மொழியப் பாவிசிருக்கலாம்.மற்றது நாகரீகத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறியள்,இன்னும் கொன்ச்சம் சொல்லுங்கோவான் கேப்பம்.ஏனெண்டா இங்க பெண்கள் இப்படியான தலைப்புகளுக்க எழுதிறதே குறய நீங்க ஆவது எழுதுங்கோவன்.

