Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கனவின் முகங்கள்
#1
<b>என் கனவில் வந்த ஒரு நிகழ்வை கவிதையாக்கும் முயற்சி. கவிதையாகாமலும் இருக்கலாம் என்ற போதிலும் ஒரு சிறு முயற்சி...</b>

[u][size=18]<b>கனவின் முகங்கள்</b>

<b>நெல்லைக்குள் புகுந்த தண்ணீர்
நாம் சொந்த ஊருக்குப் போன போதும் வந்துவிட்டது.
கரை தேடி நானொதுங்க நீ வேகமாக செல்கிறாய்.
எதிர்கரையில் நிற்கிறான் எனது நண்பனொருவன்
நம் பழைய வீட்டிற்கு சென்ற பின்
நீ என்னை அணைத்துக் கொண்ட அந்த நேரத்தில்.
உன் உயிர் பிரியத் துவங்குவதாய் உணர்கிறேன்
ஒருவித வாசம் என்னை குலையச் செய்ய
நகர்ந்த என்னை ஓரக்கண்ணால் அழைத்தபோது
மடி தந்தேன் நீ அடங்க...
சட்டெனன்று ஒரு மாற்றம் -
நீ
ஒற்றைப்பல் இருக்கும் பச்சிளங்குழந்தையாகிவிட
என் மகளாய் பிறந்துவிடு என்றானது
எனது பிராத்தனைகள்..
உறவுகள் கூடி நிற்க
நான் உன் மரணத்தைச் சொன்ன நேரத்தில்
அப்பா உன் நெஞ்சில் கைவைத்தழுத்த
மறுபடியும் சுருங்கிய தேகத்தோடு எழுகிறாய்
என் கனவை முடித்து....</b>
புரியாதவர்களுக்கு கனவில் வந்தவர் என் அப்பத்தா.
இது போல அடிக்கடி வரும். காட்சிகளில் மட்டும் மாற்றம் ஆனால் கரு ஒன்றே.

.
Reply


Messages In This Thread
கனவின் முகங்கள் - by Muthukumaran - 10-08-2005, 05:38 PM
[No subject] - by RaMa - 10-08-2005, 05:50 PM
[No subject] - by ப்ரியசகி - 10-09-2005, 11:32 AM
[No subject] - by Nanban - 10-09-2005, 04:02 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)