Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பூகம்பம்
#3
<b>பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நூற்றுக்கணக்கில் பலி: பல கிராமங்கள் முற்றிலும் நாசம்</b>

பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மிகப்பெரிய அளவில் சனிக்கிழமை பூகம்பம் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கில் பொதுமக்கள் உயிரிழந்தனர்.

சில கிராமங்கல் முழுவதுமாக நாசம் அடைந்தன. அதிக அளவில் இஸ்லாமாபாதும் முஸôபராபாதும் பாதிப்புக்குள்ளாயின. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. கட்டடங்கள் இடிந்தன.

பீதிக்குள்ளன மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வந்து தெருக்களில் திரண்டனர்.

இந்திய நேரப்படி காலை 9.20 மணிக்கு பூகம்பம் ஏற்பட்டதாகவும், இதில் நூற்றுக்கணக்கில் மக்கள் உயிரிழந்திருப்பார்கள் என்றும் உள்துறை அமைச்சர் அப்தார் ஷெர்பாவ் தெரிவித்ததாக ஜியோ டிவி தெரிவித்துள்ளது.

தற்போது கிடைத்துள்ள தகவல்கள்பட பல கிராமங்கள் கூண்டோடு நாசமாகி உள்ளன என்றும் அமைச்சர் ஷெர்பாவ் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாதில் பல மாடி கட்டடம் ஒன்று தரைமட்டமானது. இதில் உயிரிழப்பு மிக அதிக அளவில் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதன் இடிபாடுகளில் 200க்கும அதிகமானோர் சிக்கியிருப்பதாக பாகிஸ்தான் டிவி தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைநகரான முஸôபராபாதில் நீதிமன்ற கட்டடம் இடிந்து நொறுங்கியதில் நீதிபதி உள்பட 25 பேர் இறந்தனர் என்று அதிகார வட்டாரங்களை மேற்கொள்காட்டி தொலைக்காட்சி செய்திகள் தெரிவித்தன

தினமணி
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
பூகம்பம் - by ragavaa - 10-08-2005, 01:52 PM
[No subject] - by vasisutha - 10-08-2005, 03:36 PM
[No subject] - by vasisutha - 10-08-2005, 03:46 PM
[No subject] - by kurukaalapoovan - 10-08-2005, 05:10 PM
[No subject] - by Thala - 10-08-2005, 05:22 PM
[No subject] - by kurukaalapoovan - 10-08-2005, 06:43 PM
[No subject] - by Mathan - 10-08-2005, 07:13 PM
[No subject] - by kurukaalapoovan - 10-08-2005, 07:38 PM
[No subject] - by Mathan - 10-08-2005, 07:41 PM
[No subject] - by Mathan - 10-08-2005, 07:45 PM
[No subject] - by kurukaalapoovan - 10-08-2005, 08:16 PM
[No subject] - by Danklas - 10-09-2005, 07:47 AM
[No subject] - by Danklas - 10-09-2005, 01:50 PM
பூகம்பம் - by Birundan - 10-10-2005, 07:14 PM
[No subject] - by Rasikai - 10-11-2005, 09:57 PM
[No subject] - by RaMa - 10-11-2005, 10:38 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)