Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பூகம்பம்
#2
<b>வட மாநிலத்தில் பயங்கர பூகம்பம்: 30 பேர் பலி- கட்டிடங்கள் இடிந்தன; பீதியில் மக்கள் ஓட்டம்</b>

சுமத்ரா தீவு அருகே கடந்த ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் ஆசிய நில அமைப்பில் மாறுதலை ஏற்படுத்தி விட்டது.

பூமிக்கு அடியில் உள்ள தட்டுக்கள், பர்மா நோக்கி நகர்வதன் காரணமாக இந்தியாவில் இனி வரும் நாட்களில் பயங்கர நில நடுக்கம் ஏற்படும் என்று நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தனர். அதை நிரூபிப்பது போல வட இந்திய மாநிலங்களை இன்று பயங்கர நில நடுக்கம் நிலை குலைய செய்தது.

பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இன்று (சனிக்கிழமை) காலை 9.25 மணிக்கு மிகப்பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் 7.6 ரிக்டேர் ஸ்கேல் என்ற அளவுக்கு பயங்கரமானதாக இருந்தது.

கடந்த ஆண்டு சுனாமியை உருவாக்கிய நில நடுக்கத்துக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பயங்கர நிலநடுக்கம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மேற்கு முசாபராபாத் நகரில் நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்தது.

இது இந்திய எல்லைக்கு மிக அருகில் உள்ள நகரமாகும்.

இந்த நில நடுக்கத்தால், இந்தியாவின் வட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மற்ற மாநிலங்களை விட காஷ்மீர் மாநிலம்தான் அதிக பாதிப்புக்குள்ளானது. நில நடுக்கம் மையம் கொண்டிருந்த மேற்கு முசாபராபாத் நகர் அருகே காஷ்மீர் இருப்பதே இதற்கு காரணம் ஆகும்.

காஷ்மீரில் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. குறிப்பாக `ïரி' பகுதியில் பெரிய அளவில் அழிவு ஏற்பட்டுள்ளது. அங்கு மட்டும் 200 வீடுகள் இடிந்தன. பாரமுல்லா மாவட்டமும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இடிந்த வீடுகளை அகற்றும் பணிகளில் உள்ளூர் போலீசாருடன் ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமானப் படையும் மீட்பு பணிகளில் குதித்துள்ளது.

பாரமுல்லா மாவட்டத்தில் பல வீடுகள் இடிந்து விழுந்ததும் தீ பிடித்துக் கொண்டன. இதனால் சில இடங்களில் மீட்பு பணிகளில் இடைïறு ஏற்பட்டது.

உதாம்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்நகரில் ஒரு வீடு இடிந்து விழுந்ததில் பில்லு என்பவர் இடி பாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார். அவரது 2 மகள்களும் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். ராஜோரி, பூஞ்ச், கத்ரா பகுதிகளில் 13 வீடுகள் இடிந்து விழுந்தது தெரிய வந்துள்ளது. ஜம்மு மாவட்டம் முழுக்க மக்களிடம் பதட்டம் நிலவுகிறது.

காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லை அருகே இந்திய ராணுவம் ஏராளமான பதுங்கு குழிகளை அமைத்துள்ளது. நில நடுக்கம் காரணமாக அந்த ரகசிய பதுங்கு குழிகள் இடிந்து நாசமாயின. பதுங்கு குழிகளுக்குள் இருந்த ஏராளமான ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். ïரி செக்டர் பகுதியில் இருந்த பதுங்கு குழி முற்றிலுமாக நொறுங்கியது. அதனுள் இருந்த 15 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.

ஏராளமானவர்கள் இடி பாடுகளுக்குள்சிக்கி கிடக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களை மீட்க ராணுவத்தின் அதிரடி படையினர் நவீன கருவிகளுடன் சென்றுள்ளனர்.

பூஞ்ச், பாரமுல்லா, குப் வாரா மாவட்டங்களில் உள்ள குக்கிராமங்களில் இடிந்த வீடுகளுக்குள் இருப்பவர்களை மீட்க ராணுவ ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமடித்து வருகின்றன. முசாபராபாத் அருகில் இந்த 3 மாவட்டங்களும் இருப்பதால் காஷ்மீரின் இதர பகுதிகளை விட இந்த 3 மாவட்டங்கள் மட்டுமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் நெடுஞ்சாலையில் ராம் பென் பெல்ட் ஏரியாவில் உள்ள சிரஜ்ஜில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஜம்மு- காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

போன் இணைப்புகளும் செயல் இழந்தன. காஷ்மீரில் பல இடங்களில் வீடுகள் இடிந்து விட்டதால் மக்களிடையே பீதி நீடிக்கிறது. வீடுகளுக்குள் செல்ல பயந்து தெருக்களில் மக்கள் உட்கார்ந்து இருக்கின்றனர்.

காஷ்மீரில் செல்போன் இணைப்பு மட்டுமே இயங்குகிறது. அதன் உதவியுடன் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஜம்மு உள்பட பல நகரங்களில் ஆயிரக்கணக்கான வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஜம்முவில் 27 அரசு அலுவலகங்களில் பெரிய விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பயந்துபோன அரசு ஊழியர்கள் அலுவலகங்களுக்குள் சென்று வேலை பார்க்க மறுத்து விட்டனர்.

அது போல பள்ளி களிலும் பீதி பரவியது. இதைத் தொடர்ந்து இன்று காஷ்மீர் மாநிலம் முழுக்க பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

காஷ்மீரில் பல இடங்களில் மின்சார தொடர்பும் துண்டிக்கப்பட்டு விட்டது. குடிநீர் இணைப்புகளும் நொறுங்கி விட்டதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. கனரக வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு விட்டன. பதுத், தோடா பகுதிகளிலும் வீடுகள் இடிந்து கிடப்பதாக தெரிய வந்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் வீடுகள் இடிந்து கிடப்பதாக தகவல்கள் வரத் தொடங்கி உள்ளன. இன்று மதியம் 1.30 மணிக்கு கிடைத்த தகவல்படி காஷ்மீரில் 15 ராணுவவீரர்கள் உள்பட 30 பேர் பலியாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

வீடுகளின் இடிபாடுகளில் சிக்கி நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காஷ்மீரில் மின்சாரம், தொலை தொடர்பு, குடிநீர் உள்பட அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால்மக் களிடம் ஏற்பட்டுள்ளபீதி குறையவில்லை. பொது மக்களுக்கு உதவ ராணுவத்தினர் தீவிரமாக களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.

இது வரை 30 பேர் பலியான நிலையில் பொருள் சேதம் பற்றி அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.


<b>பாகிஸ்தானில் நிலநடுக்கத்துக்கு 1000 பேர் பலி</b>

வடஇந்திய மாநிலங்களைத் தொடர்ந்து அண்டை நாடான பாகிஸ்தானிலும் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதற்கு இதுவரை மொத்தம் 1000 பேர் பலியாகியுள்ளனர்.

இத்தகவலை பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் அஃப்தாப் அகமத் கான் தெரிவிக்கையில் பாகிஸ்தானின் பல கிராமங்கள் இந்நிலநடுக்கத்தால் கடுமையாக சேதமுற்றதாக தகவல்கள் வந்துள்ளன. இதுவரை 1000 பேர் வரை இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது என்றார்.

இந்நிலநடுக்கம் 7.9 ரிக்டர்கள் பதிவாகியுள்ளது. இஸ்லாமாபாதில் 10 தளங்களைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் பல உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும் என அஞ்சப்படுகிறது.

சனிக்கிழமை என்பதால் பள்ளிகளுக்கும் பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை. ஆகவே இறந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

வடக்கு பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் 12}க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல வீடுகளும் அடுக்குமாடி கட்டிடங்களும் இடிந்து விழுந்துவிட்டதாக பாக். டி.வி. சேனல்கள் தெரிவித்துள்ளன.


செய்திகள்:

தினமணி.. மற்றும் மாலைமலர்
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
பூகம்பம் - by ragavaa - 10-08-2005, 01:52 PM
நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர் பலி - by vasisutha - 10-08-2005, 03:32 PM
[No subject] - by vasisutha - 10-08-2005, 03:36 PM
[No subject] - by vasisutha - 10-08-2005, 03:46 PM
[No subject] - by kurukaalapoovan - 10-08-2005, 05:10 PM
[No subject] - by Thala - 10-08-2005, 05:22 PM
[No subject] - by kurukaalapoovan - 10-08-2005, 06:43 PM
[No subject] - by Mathan - 10-08-2005, 07:13 PM
[No subject] - by kurukaalapoovan - 10-08-2005, 07:38 PM
[No subject] - by Mathan - 10-08-2005, 07:41 PM
[No subject] - by Mathan - 10-08-2005, 07:45 PM
[No subject] - by kurukaalapoovan - 10-08-2005, 08:16 PM
[No subject] - by Danklas - 10-09-2005, 07:47 AM
[No subject] - by Danklas - 10-09-2005, 01:50 PM
பூகம்பம் - by Birundan - 10-10-2005, 07:14 PM
[No subject] - by Rasikai - 10-11-2005, 09:57 PM
[No subject] - by RaMa - 10-11-2005, 10:38 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)