10-08-2005, 04:39 AM
இறந்தவன் மேற் பழி
அந்நிய காலம் வந்ததடியே! பைந்தொடியே
இளம்பிடியே புங்கொடியே
சிந்தை ஒன்றாகி நாம இன்பத்தின் எல்லை
தேடிச் சுகிக்கையில் எனக்கிந்தக் தொல்லை
வந்ததே இனி நான் வாழ்வதற் கில்லை
மனத்தில் எனக்கிருப்ப தொன்றே அதை இன்றே
குணக்குன்றே கேள்நன்றே
குடும்பிணி யாளன் நான் இறந்த பின் மாதே!
கைம்பெண்ணாய் வருந்தாதே பழி என்றன் மீதே
அடஞ் செய்யும் வைதிகம் பொருள் படுத் தாதே
ஆசைக் குரியவனை நாடு மகிழ்வோடு தார் சூடு
நலம் தேடு!
கற்கண்டு போன்றபெண் கணவனை இழந் தால்
கசந்த பெண் ஆவது விந்தை தான் புவி மேல்
சொற்கண்டு மலைக்காதே உன் பகுத் தறிவால்
தோஷம் குணம் அறிந்து நடப்பாய் துயர் கடப்பர்ய
துணை பிடிப்பாய் பயம் விடுப்பாய்
அந்நிய காலம் வந்ததடியே! பைந்தொடியே
இளம்பிடியே புங்கொடியே
சிந்தை ஒன்றாகி நாம இன்பத்தின் எல்லை
தேடிச் சுகிக்கையில் எனக்கிந்தக் தொல்லை
வந்ததே இனி நான் வாழ்வதற் கில்லை
மனத்தில் எனக்கிருப்ப தொன்றே அதை இன்றே
குணக்குன்றே கேள்நன்றே
குடும்பிணி யாளன் நான் இறந்த பின் மாதே!
கைம்பெண்ணாய் வருந்தாதே பழி என்றன் மீதே
அடஞ் செய்யும் வைதிகம் பொருள் படுத் தாதே
ஆசைக் குரியவனை நாடு மகிழ்வோடு தார் சூடு
நலம் தேடு!
கற்கண்டு போன்றபெண் கணவனை இழந் தால்
கசந்த பெண் ஆவது விந்தை தான் புவி மேல்
சொற்கண்டு மலைக்காதே உன் பகுத் தறிவால்
தோஷம் குணம் அறிந்து நடப்பாய் துயர் கடப்பர்ய
துணை பிடிப்பாய் பயம் விடுப்பாய்

