10-07-2005, 09:36 PM
narathar Wrote:குருவியாரே நீர் எவ்வளவு தான் அனுதாப அலயைத் தேட இந்த கருத்தாடலை தனி நபர் தூற்றலாக்கச் சித்தரிக்க முயன்றாலும், நான் இது வரை எழுதிய எந்தக் கருத்துக்குமே பதிற் கருத்தாடலை முன் வைக்கவில்லை.உமது வழக்கமான கருத்தாடல் தூற்றல் பாணியயே பின் பற்றுகிறீர்.உமது நிலைக்கு கீழிறங்காமல் அவற்றைப் புறந்தள்ளி விட்டு,பின் வரும் கேள்விகளுக்கு விடை பகர்வீர்.
நீர் ஐஸ்வர்யாவிடம் காண்கின்ற கலை என்ன ,என்பதை முதலில் விளக்கவும்?அது ஏன் மற்றவர்களிடம் இல்லை என்பதையும் விளக்கவும். நீர் கண்டு குதூகலித்த அந்தப் படத்தில் எவ்வாறு அந்தக் கலை மிழிர்ந்ததையும் விளக்கவும்.இதை நீர் விளக்கினீர் என்றால் ,மிகுதி எல்லாருக்கும் தானா விளங்கும்.
ஆனால் நீர் அதைச் செய்யப் போவதில்லை.மீண்டும் தனி நபர் தூற்றலிலும் கருத்துத் திருபுகளிலும் ஈடுபட்டு எப்படி யாவது இந்தத் கருத்தாடலை மூடிவிடுவது அல்லது தடை செய்வது தான் உமது நோக்கம்.உமது நேர்மை அவ்வளவு தான்.இது சில குழந்தைகளுக்கு இப்ப புரியாட்டிலும் பிறகு ஒரு நாளைக்குப் புரியும் .
நாங்கள் தூற்றது இருக்கட்டும்..அதைத்தான் நீங்கள் வந்ததில் இருந்து செய்கிறீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்..!
முதலில் கருத்தை சரியாக உள்வாங்கக் கற்றுக் கொள்ளுங்கள்..! ஐஸ்வரியா ராய் படத்தில் கலையை ரசித்ததாகச் சொன்னது பிருந்தன்...அவர் ரசித்த கலை எதுவாக இருந்ததோ...அதையே கண்கள் கலையை ரசிக்கட்டும் என்றோம்...! அது அவருடைய விருப்பு வெறுப்பைப் பொறுத்தது...அதில் உங்களுக்கோ எங்களுக்கோ தலையிட உரிமையில்லை..!
அப்புறம் உலகம் எப்படி ஐஸ்வரியாவை உலக அழகியாக்கியதோ...அதே வடிவத்தில் எல்லோரைப் போலவும் நாங்களும் காண்கிறோம்..! அதற்காக அவர்தான் அழகி என்று கொண்டாடவில்லை...அவர் ஒரு அழகி அவ்வளவும் தான்...அதோடு சரி.....! அவர் மட்டும் தான் அழகி என்பதும் அவரையே கனவில் நினைச்சிட்டு வாழுறது என்பதும்...அது உங்கள் கற்பனை...அது உங்கள் சுதந்திரம்...அதை எங்களுக்கு என்று ஆக்கிறதுதான் அபந்தம்...! உங்களுக்கு அதுக்கு உரிமையில்லை...! அதைப் புரிந்து கொள்ளுங்கள்..! உங்கள் கற்பனைகள் உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள்...மற்றவர்கள் மேல் அவற்றைப் போடுவதே தூற்றல்...காழ்புணர்ச்சி..! இப்ப புரியுதோ...யார் தூற்றித் திரிவதென்று..! மற்றவர்களின் விடயத்தில் மூக்கு நுழைப்பதை தவிர்ப்பது சிறந்தது..! இவின் நாங்கள் கனவில் வாழ்ந்தால் கூட நீங்கள் என்ன சமூகப்பிரபுபா எங்களுக்கு இப்படி இரு அப்படி இருக்காதே என்று கட்டளை இட...! உங்களால் ஒரு கருத்தை மற்றவர்கள் மீது குறை கண்டு அவர்களை பொருளாக்கி சொல்லமுடியவில்லை என்றால்..உங்களில் தான் ஏதோ குறை...அதையே நீங்கள் மற்றவர்களிலும் காண விளைகிறீர்கள் என்றாகிடும் கவனம்..! :twisted:
உண்மையில் உங்களில் சிலருக்கு பதில் அளிப்பதில் பயனில்லை..உங்கள் சிலரின் நோக்கம் இரண்டு...
1. யாழ் களத்தில் புதுமை புரட்சி சீர்திருத்தம் என்ற போர்வையில் சாத்தியமான அனைத்தையும் (நல்லது 4 சொன்னா கெட்டது 1004 சொல்லுவியள்) புகுத்துவது....அதன் மூலம் சமூகத்தவறுகளை சீர்திருத்தமாகக் காட்டி மறைப்பது அல்லது மாற்றமாக்குவது...!
2. அதற்கு தடையாக இருக்கவல்லவர்களை வெளியேற்றுவது அல்லது விரட்டுவது...அல்லது அவர்களை குற்றவாளிகளாகச் சித்தரிப்பது..!
( இது யாழ் கள ஆரம்பத்தில் இருந்து நடந்து வருகிறது... களப் பொறுப்பாளர் தான் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி இதை சமாளித்து வருகிறார்...உண்மையில் மோகன் அண்ணாதான் பாரட்டத்தக்கவர்...! காரணம்... சிங்களவர்களுக்கு தலைமை தாங்குவதும்... வெள்ளையர்களுக்கு தலைமை தாங்குவதும் இலகு...தமிழர்களுக்கு தலைமை தாங்குவது என்பது மிகச் சிரமமான காரியம்...! )
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

