Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்தியா ஈழத்தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுமா
#1
இனியாவது இந்தியா ஈழத்தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுமா?
http://sooriyan.com/index.php?option=conte...id=2355&Itemid=

தமிழ்த்தேசியம் என்றும், எதிலும், எங்கும், எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசிய தேவையுள்ளது. விழிப்புநிலையினூடாக சில முக்கிய முன்நகர்வுகளை மேற்கொள்ள முடியும். அதனூடாக தமிழ்த்தேசியம் எதிர்நோக்கவுள்ள பேராபத்தைத் தடுக்கலாம். அல்லது ஓரளவாவது குறைக்கலாம். இதற்கு எமது இறந்தகால வரலாறு உதவும். அதே வேளை அந்த வரலாற்றின் வெற்றிகளுக்குள் மட்டும் நாம் மூழ்கக் கூடாது. வெற்றிகள் எப்போதும் சில படிப்பினைகளையே தரும். தோல்விகள் பல கற்பித்தல்களை உணர்த்தும். இது வரலாறு சொல்லித்தந்த பாடம். .

...
......
[color]எமக்கான விடுதலையை நாமே போராடிப் பெற்றுக் கொள்ள வேண்டும். வேறு ஒரு தரப்பினர் எமக்கு எமது விடுதலை மூலமான உரிமையை பெற்றுத் தருவார்கள் என்று கனவுகாணக் கூடாது. நமது காலிலேயே நாம் நிலையாக நிற்க வேண்டும். எமது வாழ்வியலை வரலாற்றை நிர்ணயிப்பவர்களாக நாமே திகழ வேண்டும்.[/color] தூரநோக்குள்ள வல்லமைமிக்கதொரு தலைவர் வழிகாட்டி நிற்கிறார். போர்த்திறன் மிக்க தளபதிகள் தோள்கொடுத்து நிற்கிறார்கள். தமிழர் தேசத்தின் விடியலிற்கான கட்டளைக்காய் அணிவகுத்து பார்த்திருக்கிறார்கள் போராளிகள்.

...
....
எமது மக்கள் எப்போதுமே போரியல், அரசியல், சக பொருளாதார ரீதியாக விழிப்படைந்தவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறான மக்கள் சட்டத்தை கொண்ட ஒரு தேசத்தை எந்தவொரு பலமிக்க ஒரு சக்தியாலும் அசைக்கக் கூட முடியாது. இதனடிப்படையில் புலனாய்வு ரீதியில் நாம் தெளிவானவர்களாக விழப்புணர்வுடையவர்களாக இருக்க வேண்டியது இன்றைய உடனடி தயார்ப்படுத்தல்களின் கவனிக்க வேண்டிய முக்கிய விடயமாகும்.
Reply


Messages In This Thread
இந்தியா ஈழத்தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுமா - by kurukaalapoovan - 10-07-2005, 04:28 PM
[No subject] - by kurukaalapoovan - 10-07-2005, 07:35 PM
[No subject] - by Thala - 10-07-2005, 10:36 PM
[No subject] - by Birundan - 10-08-2005, 01:19 AM
[No subject] - by kurukaalapoovan - 10-08-2005, 01:22 AM
[No subject] - by Thala - 10-08-2005, 09:49 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)