Yarl Forum
இந்தியா ஈழத்தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுமா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36)
+--- Thread: இந்தியா ஈழத்தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுமா (/showthread.php?tid=2995)



இந்தியா ஈழத்தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுமா - kurukaalapoovan - 10-07-2005

இனியாவது இந்தியா ஈழத்தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுமா?
http://sooriyan.com/index.php?option=conte...id=2355&Itemid=

தமிழ்த்தேசியம் என்றும், எதிலும், எங்கும், எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசிய தேவையுள்ளது. விழிப்புநிலையினூடாக சில முக்கிய முன்நகர்வுகளை மேற்கொள்ள முடியும். அதனூடாக தமிழ்த்தேசியம் எதிர்நோக்கவுள்ள பேராபத்தைத் தடுக்கலாம். அல்லது ஓரளவாவது குறைக்கலாம். இதற்கு எமது இறந்தகால வரலாறு உதவும். அதே வேளை அந்த வரலாற்றின் வெற்றிகளுக்குள் மட்டும் நாம் மூழ்கக் கூடாது. வெற்றிகள் எப்போதும் சில படிப்பினைகளையே தரும். தோல்விகள் பல கற்பித்தல்களை உணர்த்தும். இது வரலாறு சொல்லித்தந்த பாடம். .

...
......
[color]எமக்கான விடுதலையை நாமே போராடிப் பெற்றுக் கொள்ள வேண்டும். வேறு ஒரு தரப்பினர் எமக்கு எமது விடுதலை மூலமான உரிமையை பெற்றுத் தருவார்கள் என்று கனவுகாணக் கூடாது. நமது காலிலேயே நாம் நிலையாக நிற்க வேண்டும். எமது வாழ்வியலை வரலாற்றை நிர்ணயிப்பவர்களாக நாமே திகழ வேண்டும்.[/color] தூரநோக்குள்ள வல்லமைமிக்கதொரு தலைவர் வழிகாட்டி நிற்கிறார். போர்த்திறன் மிக்க தளபதிகள் தோள்கொடுத்து நிற்கிறார்கள். தமிழர் தேசத்தின் விடியலிற்கான கட்டளைக்காய் அணிவகுத்து பார்த்திருக்கிறார்கள் போராளிகள்.

...
....
எமது மக்கள் எப்போதுமே போரியல், அரசியல், சக பொருளாதார ரீதியாக விழிப்படைந்தவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறான மக்கள் சட்டத்தை கொண்ட ஒரு தேசத்தை எந்தவொரு பலமிக்க ஒரு சக்தியாலும் அசைக்கக் கூட முடியாது. இதனடிப்படையில் புலனாய்வு ரீதியில் நாம் தெளிவானவர்களாக விழப்புணர்வுடையவர்களாக இருக்க வேண்டியது இன்றைய உடனடி தயார்ப்படுத்தல்களின் கவனிக்க வேண்டிய முக்கிய விடயமாகும்.


- kurukaalapoovan - 10-07-2005

:mrgreen:


- Thala - 10-07-2005

<b>சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் இந்திய இராணுவ குழு சந்திப்பு</b>

[வெள்ளிக்கிழமை, 7 ஒக்ரொபர் 2005, 19:38 ஈழம்] [ம.சேரமான்]
சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சிறிலங்கா வந்துள்ள இந்திய இராணுவக் குழுவினர் சந்தித்துப் பேசினர்.


இந்தியக் குழுவில் மூன்று பேர் இடம் பெற்றிருந்தனர்.

மேஜர் ஜெனரல் கே.எஸ்.சிவக்குமார் தலைமையில் கடற்படையைச் சேர்ந்த சார்துல் றெளதெல, விமானப்படை அதிகாரி கே.பி.எஸ். விர்க் உள்ளிட்டோர் சிறிலங்கா வருகை தந்தனர்.

சிறிலங்கா இராணுவ தளபதி சாந்த கொட்டேகொடவை இராணுவத் தலைமையகத்தில் நல்லெண்ண அடிப்படையில் சந்தித்ததாக சிறிலங்கா இராணுவத் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

http://www.eelampage.com/?cn=20653

<span style='font-size:25pt;line-height:100%'><b>ம்ம்... ஈழத்தமிழரின்ர உணர்வுகளைப் புரிந்து கொள்ளத்தான் இராணுவத்தளபதியை சந்திக்கப் போனவையா??... உணர்வுகளைப் புரிந்து கொள்ளுவினம் போலதான் கிடக்கு...</b></span>


- Birundan - 10-08-2005

kurukaalapoovan Wrote::mrgreen:

அதுக்கேன் நீங்க சிரிக்கிறீங்க நல்ல விடயம்தானே சொல்லி இருக்கிறீங்க. :? :? :wink:


- kurukaalapoovan - 10-08-2005

தலையும் மலையும், குஸ்பு திரிசா எண்டு எழுதினா தான் வாசகர்களை கவரக்கூடியதாக இருக்கு.

விடயத்தலைப்பை மாத்திப்போட்டு பாத்தனான் வாசித்தோர் தொகை எவ்வள வேகமாக கூடுது எண்டு. :mrgreen:

யாரோ குறுகால போனதுகள் திருப்பி உந்த boring தலைப்பை போட்டுவிட்டிருக்குதுகள்.


- Thala - 10-08-2005

kurukaalapoovan Wrote:தலையும் மலையும், குஸ்பு திரிசா எண்டு எழுதினா தான் வாசகர்களை கவரக்கூடியதாக இருக்கு.

விடயத்தலைப்பை மாத்திப்போட்டு பாத்தனான் வாசித்தோர் தொகை எவ்வள வேகமாக கூடுது எண்டு. :mrgreen:

யாரோ குறுகால போனதுகள் திருப்பி உந்த boring தலைப்பை போட்டுவிட்டிருக்குதுகள்.

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இப்பிடி வேற செய்யுறீங்களா??.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->