10-07-2005, 10:50 AM
எனது நண்பர் ஒருவர் வெளிநாட்டிலே வசித்துவருகிறார். அவருக்கு இரவு வேலைதான். வேலை 10 மணிவரை என்றாலும் சில நாட்களில் ஒவர்டைம் 2 மணிகொடுப்பார்களாம் அப்படியான நாட்களில் வீட்டிக்கு வர இரவு ஒருமாணியாகிவிடுமாம். ஒருதடவை இரவு கூட வேலைசெய்யும் நண்பரை இரவு வீட்டில்விட்டுவிட்டு வந்துள்ளார். ஒரு இடத்தில் ஒரு வயதானவர் காரை மறித்து ஏறியுள்ளார். அவர் இறங்க வேண்டும் என்று சொன்ன இடத்தில் காரை நிறுத்தித்திரும்பிப்பார்த்த போது அந்த வயதானவரை இருக்கையில் காணவில்லையாம். வீட்டிற்குச்சென்று கூடவேலைசெய்யும் நண்பருக்கு போன் செய்து சொன்னபோது அவர் வந்த வழியைக்கேட்டுவிட்டுச்சொன்னாராம் நீ இடுகாடு ஒன்றிற்குப்பின் தான் அந்த நபரை ஏற்றியுள்ளாய் என்று. இதுபோல இலங்கையில் கண்டி றோட்டில்; டக்ஸிக்காரர்களை ஒரு பேய் தொந்தரவு செய்ததாக கேள்விப்பட்டு இருக்கிறேன்.

