10-07-2005, 10:21 AM
"ஒழுங்கை"; படிக்கும் போது மீண்டும் எங்கட ஊருக்கு போனமாதிரி இருந்தது. ஓழுங்கைக்குள்ளால போய்வந்துதானே நாங்கள் எல்லாம் வளர்ந்தம். முதல் மெயின் ரோட்டால போன ஆமி பிடிப்பான் பிறகு ஹெலி சுடும் பம்பர்ல இருந்து பாத்தா தெரியும் என்று முழுக்க ஓழுங்கைக்கை வாழ்ந்துட்டம். எந்த இடம் எண்டாலும் அதுக்கு ஓழுங்கைகளுக்கால போகக்கூடியதா இருக்கும். சிலநேரம் றோட்டை கடக்கவேண்டியிருக்கும் அவ்வளவுதான். ஆமிக்குப்பயந்து நாங்க ஓழுங்கைக்கால போவம் ஆனால அதுக்கை நாயல் விட்டுதுரத்தி விழுறது பெரிய முசுப்பாத்தி. பெரும்பாலும் ஒழுங்கையள் எல்லாம் வேலியடைச்சு இருந்தாலும் அதைவைச்சு அந்த அந்த வீட்டுக்காரர் பணக்காரரா இல்லையா எண்டு சொல்லாம். சில வேலிகள் உத்துப்போய் கதியால் மட்டும் நிக்கும். சிலது சதாரணமா கிடுகால அடைச்சு இருக்கும். சிலது மனைமட்டை வச்சு வடிவா வரிஞ்சு கட்டி இருக்கும். சிலது மேல தகரம் வைத்து அடைச்சு இருக்கும்.
கிடுகு வேலில சில இடங்கள்ள ஒரு பொத்து இருக்கும். பொத்துக்கால புூந்து போய்வரலாம். வளவு பெரிசா இருக்கும் எல்லாத்துக்கும் படலையைத்திறந்து போக முடியுமா அதால பெம்பிளையள் பொத்து வைப்பினம் வேலிக்கு வேலி. நாயும் அதுக்கால தான் வரும். சில இடங்கள்ளை நாய் தான் போத்து வைக்கும் பிறகு சனங்கள் அதுக்கை புூந்து புூந்து போய் பெரிசாக்கிடுவினம்.
சில ஓழுங்கைக்கை அதிகம் சனம் வராது. படலையள் றோட்டுப்பக்கம் இருக்கும். அந்த மாதிரி ஒழுங்கைக்கைதான் டூட்டறிக்கு படிக்கப்போறன் எண்டு பெட்டை பெடியள் லவ் பண்ணுவினம். பெரும்பாலும் வேற இடத்துப் ஆக்கள்தான் நிண்டு கதைப்பினம். அவையள தொந்தரவு கொடுக்க எணடு ஒரு பொடிசுகள் கூட்டம் இருக்கும் அதுகள் சைக்கிள் பளகிறன் எண்டு அடிக்கடி அதுக்கால போய்வருங்கள். அந்தக்காலத்துச் சைக்கிள்ளை ஒரு பெரிய பெல் இருக்கும். அதைப்போட்டு அடிக்குங்கள். சிலதுல பெல் மூடி கூட இருக்காது. அது டொக்கு டொக்கு எண்டும். காதல் பண்ணுறவை அடிக்கடி இடத்தை பாத்திக்கொண்டு இருப்பினம். எல்லாம் ஓழுங்கையாத்தானிருக்கும்.
சில ஓழுங்கைகள் பொல்லாத ஓழுங்கைளா இருக்கும் ஏதாவது குடிகாறன்வீடு பக்கத்தில இருந்தா அது பொல்லாத ஓழுங்கை குடிகாறன் குடிச்சுப்போட்டு போறவாற ஆக்களோட சண்டித்தனம் செய்வான். அந்தமாதிரி ஓழுங்கைகால பொம்பிளைப்பிள்ளையள அனுப்ப மாட்டினம். அவங்கள் யாரும் சேட்டை விட்டுடுவாங்கள் எண்டு. சிலவேளை ஓழுங்கைக்கை போறதுக்கு துணை வேண்டியிருக்கும். காவாலிகள் ஓழுங்கை எண்டு சொல்லுவினம்.
ஓழுங்கைள் பெரும்பாலும் மண்ணாத்தான் இருக்கும். கால வைச்சாலே முள்ளுக் குத்தும். வண்டிபோற பாதை மட்டும் மண்ணா இருக்கும் மற்ற இடங்கள் முள்ளுச்செடியா இருக்கும். சில ஓழுங்கைக்கை மேடாக்கிறன் எண்டு உடைச்ச வீட்டுக் கல்லைப்போட்டு வைச்சிருப்பினம். இந்த மாதிரி ஓழுங்கைக்கை சைக்கிள் கவனமா ஓட வேணும் இல்லை எண்டா காத்துப்போய் நடக்க வேண்டியதுதான். ஓழுங்கைக்கை அக்சிடண்ட் கூட நடக்கும். அக்சிடன்ட் எண்டோன பெரிசா பயந்துபோடாதுங்கோ. அதிகமா அடிபடுறது சைக்கிளும் சைக்கிளும் இல்லை எண்டா சைக்கிளும் ஆளும் தான்.