10-07-2005, 05:32 AM
இவோன் Wrote:பிருந்தன்,
நான் அங்கே பார்க்கும்போது அப்பின்னூட்டம் இருந்ததாக ஞாபகமில்லை. அதைத்தான் சொன்னேன்.
சரி உங்கள் நேர விசயத்துக்கே வருவோம்.
டி.சேயின் வலைப்பதிவு இயங்குவது அட்லாண்டிக் நேரப்படி - 04.00.
ஆனால் யாழ்க்களத்தில் நேரம் கணிப்பிடப்படுவது GMT நேரப்படி (சரிதானே?).
குறிப்பிட்ட பின்னூட்டம் டி.சேயின் பதிவில் இடப்பட்டபோது GMT நேரப்படி 11.56 am.
அப்பதிவு யாழ்க்களத்தில் இடப்பட்டபோது GMTநேரம் 12.23 pm.
27 நிமிட இடைவெளியுண்டு. நாரதர் படியெடுத்துப்போடும்போது எடுக்கப்பட்டிருக்கும் நேரமென்று கருத்திற்கொண்டால் அப்பின்னூட்டத்தை நாரதர் கண்டுகொள்ளாமலிருக்கச் சந்தர்ப்பமுண்டு.
மேலும் பின்னூட்டம் போடப்பட்ட சரியான நேரத்தைக்காட்டினாலும் பின்னூட்டம் முதன்மைப் பக்கத்துக்கு வர குறிப்பிட்ட நேரம் எடுக்கும். அதாவது பின்னூட்டம் கொடுத்தவுடன் அப்பின்னூட்டம் முதன்மைப் பக்கத்துக்கு வராது (Blogger இல்). நீங்களும் முயற்சித்துப் பார்க்கலாம்.
ஆனால் கடைச்சிக்கு முதல் பின்னூட்டத்தை நாரதர் தறவவிட்டது தெரிந்தே செய்ததுதான்.
கோமதி Wrote:என்ன நடக்குது இங்க?
இவோன் அண்ணா (அண்ணாவோ அக்காவோ)
உதென்ன நீதிமன்றத்தில வாதாடுற மாதிரி புட்டுப்புட்டு வைக்கிறியள்?
நானும் கணக்குப் பண்ணிப் பாத்தன். உங்கட கணக்குச் சரியா வருது. எனக்கும் 11.23 எண்டுதான் காட்டுது.
ஆனா ஒவ்வொருவருக்கும் அவையள் இருக்கிற நாட்டைப்பொறுத்து பதிந்த நேரம் மாறுபட்டுக்காட்டுமோ எண்டு யோசிக்கிறன். எல்லாருக்கும் ஒரே நேரத்தைத்தான் யாழ்களம் காட்டுமெண்டா பிருந்தன் அண்ணா எந்த நேரத்தைப்பார்த்து 12.23 எண்டு தந்தாரெண்டு தெரியேல. அந்த நேரத்தில எந்தக்கருத்துமே வரேல.
கோமதியம்மா... நீதிமன்றத்தில் நீதிபதி இருப்பார் நல்ல வாதப்பிரதிவாதங்கள் சாட்சியங்கள் என்றும் இருக்கும்.. நல்லதோ கெட்டதோ..குறைஞ்சது தீர்ப்பாவது கிடைக்கும்...! இங்க தீர்வுக்கே வழியில்ல...உதாரணத்துக்கு... GMT - 04.00(Greenwich Mean Time) இதை அத்திலாந்திக் நேரம் (உண்மையா வாழ்க்கையில் இன்றுதான் கேள்விப்பட்டம்....அத்திலாந்திக் நேரம் எண்டதை..உண்மைல...இப்படித்தான் ஒன்று இரண்டு அறிஞ்ச ஞாபகம்..ADT - Atlantic Daylight Time மற்றும் AST - Atlantic Standard Time . அத்திலாந்திக் நியம நேரம்.. என்று..!) எண்ட அதை புட்டுப்புட்டு வைக்கிறதா.... ஆமோதிச்சு கருத்துச் சொல்லும்... வில்லிசைக் குழு ஆமா கோஸ்டியாத்தான் களம் இப்ப நகர்ந்து கொண்டிருக்குது... கொஞ்சக்காலமா...???!
இந்த நேரக் கணக்கு ஏனாம்...அதுவும் மற்றவைல பிழை பிடிக்க... இதெல்லாம் ஒரு பதிவு... இதுக்க போய் கருத்தெழுதி அதையே இங்க ஒட்ட யாழ் களத்தில் எவரும் முனையார்கள்...! களத்தில் உள்ள அநேகர் அவர்கள் இவர்களை விட பக்குவப்பட்டவர்கள் தான்...! இவைட பேசும் பொருளை... குடிகாரந்தான் தினமும் வீதில பேசுறானே...அப்புறம் என்ன...! எவனோ ஒரு புண்ணியவான்...அல்லது வதி...நல்ல ஒரு விமர்சனத்தை எழுதி இருக்காங்க... வலைப்பதிவுகள் தாங்கி வரும் விமர்சனங்களைக் காட்ட வேணாமோ...அதுதான் காட்டினம்...சிலர் சொன்னவை சிறப்பான எழுத்துக்களை வலைப்பதிவுகள் மட்டும்தானாம் தருகுது...! அதுக்கு உதாரணமா...சிறப்பான கவிதைகளையும் அவையே ஒட்டிட்டு இருக்கினம்...! அந்தச் சிறப்புகளை சிறப்பிக்க வேணாமோ...??! நல்லது செய்யவிடாயளே...!
இவை இப்ப குஷ்புவைச் சாட்டு வைச்சு இங்க பேசுறதை போய்ஸ் படத்தில் சங்கர் காட்டிட்டார்தானே.... அப்பவும் ஒரு கலக்கு கலக்கினவை...இங்க களத்திலும் தான்.....இவைட்ட இருக்கிறது இவ்வளவும் தான் எண்டதும் வெளிப்படை...நத்திங் எல்ஸ்..!
நேரக்கணக்கில்... பிருந்தனில் தப்பில்லை...காரணம்...யாழ் கள நேரத்தை அவரவர் தங்கள் இஸ்டத்துக்கு புரபைலில் போய் மாற்றி அமைக்கலாம்...! பிருந்தனின் தெரிவின் படி அவருக்கு நேரம் 11.23 க்கு பதில் 12.23 என்று காட்டலாம்...அதுபோல்...வலைப்பதிவுகளிலும் நேரத்தை மாற்றி அமைக்கலாம்..! வலைப்பதிவாளர் மட்டும் கணணிச்சுட்டி மூலம் குறித்த கருத்தெழுதியவர் எங்கிருந்து வந்தார் என்பதை அறியலாம்...அதையும் மாற்றி கருத்தெழுதலாம்...! சோ...இங்க புட்டுபுட்டு வைக்க எதுவும் ஆதாரமா இல்லை...! எழுதினதை வாசிச்சிட்டு கம்முண்ணு இருக்குறதுதான் செய்யக் கூடிய ஒரே வேலை...! அதுதான் வலைப்பதிவு...! அதுக்க புட்டு இடியப்பம் என்று கொண்டு.....! :twisted:

NS Nova Scotia, Canada (AST= GMT-4) (ADT = GMT-3)
Daylight time serving - North America United States, Canada, Mexico
St. Johns, Bahamas, Turks and Caicos
Start: First Sunday in April
End: Last Sunday in October
இதன்படி இப்போ பாவனையில் உள்ளது ADT..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

