Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கண்கள் கலயை நோக்கட்டும்
#34
கலாசார நாட்டாமைகள்

எப்போதுமே கலாசார நாட்டாமை என்பது அடிப்படைவாதத்தின் ஒர் அங்கமாகவே இருந்து வந்திருக்கிறது. அண்மைக் காலத்தில் அத்தகைய நாட்டாமை மனோபாவம் ஆப்கானிஸ்தானில் தாலிபானிடமும், மும்பையில் சிவ சேனாவிடமும், வெளிப்படுவதை நாம் கண்டிருக்கிறோம். இந்தியாவின் பல பகுதிகளில் 'இந்துக் கலாசாரத்தை'க் காப்பதாகச் சொல்லிக் கொண்டு சங் பரிவார் அமைப்புக்கள் இந்தியாவின் பல பகுதிகளில் நடத்திய கிளர்ச்சிகளும் நமக்குப் புதிதல்ல.

முற்போக்கான சிந்தனைகள் பலவற்றிற்கு, சமூக நடைமுறைகள் மீதான விமர்சனங்களுக்கு, இடமளித்த வரலாறும் பெருமையும் கொண்ட தமிழகத்தில், சமீப காலமாக, இத்தகைய கலாசார நாட்டாமை தலையெடுக்கத் துவங்கியிருப்பது கவலை அளிக்கிறது. பெரியார் வாழ்ந்த மண்ணில், பெரியாரைத் தங்கள் ஆதர்சமாக ஏற்றுக் கொண்டவர்கள் எனத் தங்களை அறிவித்துக் கொண்ட சில தலைவர்களின் நேரடி/ மறைமுக ஆசிகளோடு, இந்தக் கலாசார நாட்டாமை நடைபெறுவது திகைப்பளிக்கிறது.

நடிகை குஷ்பு தொடர்பாக நடைபெற்றுவரும் சர்ச்சை ஓர் உதாரணம்.

ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள், உருவ பொம்மை எதிர்ப்புக்கள், கீழ்நிலை நீதி மன்றங்களில் ஏறத்தாழ 20 வழக்குகள் எனத் தமிழகமே கொந்தளித்துப் போயிருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த தமிழக ஊடகங்கள் சில முயன்று வருகின்றன.

அப்படி ஆட்சேபகரமாக குஷ்பு என்ன சொல்லிவிட்டார்?

"பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களிலிருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் போகிறவள் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால் திருமணத்திற்கு முன்பு செகஸ் வைத்துக் கொள்ளும் போது கர்ப்பமாகாமலும், பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்"

இதில் ஆட்சேபத்திற்குரியது என்ன? நமது சமூகத்தில், திருமணங்களின் போது, ஒரு பெண்ணை, virginity என்ற அம்சத்தை முதன்மைப்படுத்தி எடை போடும் வழக்கமிருக்கிறது; ஆனால் ஒரு பெண்ணை அதனை மட்டுமே கொண்டு எடை போடக் கூடாது; அவலது அறிவாற்றல், செயல்திறன், சிந்தனைப் போக்கு, சமூக அக்கறை போன்ற பல்வேறு விஷயங்களும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். கல்வியின் மூலம் உள்ளொளி பெற்ற ஓர் இளைஞன் அதைத்தான் செய்வான். திருமணத்திற்கு முன்பு செகஸ் வைத்துக் கொள்கிற பெண்கள் உஅடல் நலன்,சமூக நலன் கருதி சில எச்சரிக்கைகளைக் கைக்கொள்வது நல்லது என்கிற கருத்தில் பெண்கள் மீதான கரிசனம் வெளிப்படுகிறதா அல்லது அவர்களை இழிவுபடுத்தும் மனம் வெளிப்படுகிறதா?

மணவிலக்குப் பெறுகிறவர்களின் எண்ணிக்கை நாளூக்கு நாள் அதிகரித்து வருகிற காலகட்டம் இது. பாலியல் பலாத்காரங்களும் அதிகரித்து வருகின்றன. இந்தச் சமூகத்தில் கன்னித்தன்மை ஒன்றை மட்டுமே முன்நிறுத்தி பெண்ணை மணத்திற்குத் தகுதியுள்ளவளாகக் கருதுவது என்பது சரிதானா? விதவைகளுக்கு மறுமணம் செய்ய வேண்டும் என்பதைப் போன நூற்றாண்டிலேயே வலியுறுத்திய மண் தமிழ் மண். பாரதியார், பெரியார் போன்றவர்கள் விதவைகள் மறுமணத்தை முன் வைத்து வாதிட்டபோது அதைக் கண்டித்த சநாதானவாதிகளுக்கும், இன்று கன்னிமையை வலியுறுத்திப் போராடுபவர்களுக்கும் சாராம்சத்தில் என்ன வித்தியாசம்?

தமிழ்ப் பெண்களை கற்பிழந்தவர்கள் என்று சொல்லி விட்டார் என்று ஒரு குற்றச்சாட்டு. கற்பு என்கிற கருத்தாக்கமே பெண்களை அடிமைப்படுத்தும் நோக்கில் உருவானது என்பது ஒரு புறம் இருக்கட்டும்; ஆண்களின் பங்களிப்பு இல்லாமல் பெண்கள் 'கற்பிழக்க' முடியாது என்பதும் இருக்கட்டும். கற்பு என்பது உடலைச் சார்ந்ததா, மனதைச் சார்ந்ததா என்ற கேள்விகளும் இருக்கட்டும். குஷ்பு சொல்லியதில் கற்பு பற்றி ஏதேனும் இருக்கிறதா? எந்த இடத்திலாவது தமிழ்ப் பெண்கள் என்று குறிப்பிட்டிருக்கிறாரா? அவர் சொல்வது எல்லாப் பெண்களுக்கும் பொருந்துவது அல்லவா? இதைத் தமிழ்ப் பெண்களுக்கு மாத்திரம் உரியதென்று சித்தரிப்பவர்கள் அல்லவா தமிழ்ப் பெண்களைக் கொச்சைப்படுத்துகிறார்கள்?.

கன்னித்தன்மை பற்றிய கருத்தைத்தான் கற்பு என்று கிளர்ச்சியாளர்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது பகுத்தறிவாளர்கள், கற்பு என்பது பெண்ணை அடிமை செய்ய உருவாக்கப்பட்ட கருத்து என்று எண்ணுகிறவர்கள், பெரியார் சொல்கிற 'நிர்பந்தக் கற்பு' என்ற கருத்தை ஏற்பவர்கள் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, கற்பைப் பற்றிய ஒரு விவாதத்தை உருவாக்கி சமூகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கல்லவா முயற்சிக்க வேண்டும்? ஆனால் அவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஆசி வழங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

"எந்த ஒரு காரணத்திற்காக ஆனாலும், ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம், முதலாகியவைகளைப் பற்றி மற்றொரு பெண்ணோ, ஆணோ, மற்ற மூன்றாமவர்கள் யாராவது பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்பந்திப்பதற்கோ சிறிது கூட உரிமையே கிடையாது என்றும் சொல்லுகிறோம்." என்ற பெரியாரின் கருத்தை நினைவூட்டி நான் அக்டோ பர் இரண்டாம் தேதி சண்டே எகஸ்பிரசில் (இந்தியன் எக்ஸ்பிரசின் ஞாயிறுப் பதிப்பு) எழுதிய கட்டுரையைச் சுட்டிக்காட்டி, செய்தியாளர்கள் அக்டோ பர் 4ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது டாக்டர்.ராமதாசிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் அது ஆணாதிக்கத்திற்கு எதிராகப் பெரியார் சொன்னது என்று மழுப்பியிருக்கிறார்.



இந்தியன் எக்ஸ்பிரஸ் அக். 5 2005

பெரியாரின் கருத்து இருபாலருக்கும் பொதுவானது, ஆண்களுக்கு மட்டுமானதல்ல என்பது அவரது வார்த்தைகளைப் பார்த்தாலே தெளிவாகத் தெரியும். " ஒரு ஆணின் அல்லது பெண்ணின்", "மற்றொரு ஆணோ அல்லது பெண்ணோ" என்று தெள்ளத் தெளிவாக, திட்டவட்டமாகப் பெரியார் எழுதுகிறார். இதில் ஆணாதிக்கம் எங்கிருக்கிறது? இதை ஆணாதிக்கத்திற்கு எதிராகத்தான் சொன்னார் என்பது அவரைத் திரிப்பதல்லவா?

குஷ்புவை முடக்குவதற்காகப் பெரியாரைத் திரிக்கலாமா?

பிரசினை, கருத்துக்கள் அல்ல, கருத்துக்களை வெளியிட்டவர்தான். கூர்ந்துபார்த்தால் குஷ்பு மீது பலருக்கு பல்வேறு காரணங்களுக்காக இருந்துவரும் ஆதங்கங்கள், மனத்தாங்கல்கள்களால், கத்தி செருக இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது புலனாகும்.

அதுதான் ஆபத்தானது. தன் சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் கருத்துரிமையை நசுக்குவது என்பது, வன்முறையை ஏவிவிடுவது என்பது, அடிப்படைவாதத்தின் குணாம்சம்.

தங்கள் கலாசாரம் மேன்மையானது என எவரும் பெருமை கொள்வதில் தவறில்லை. ஆனால் கலாசாரத்தின் மீது பெருமையும் அதன் காரணமாக அதன் மீது கரிசனமும் கொண்டவர்கள், அது சறுக்கல்களை சந்திக்க நேரும் போது கவலை கொள்வார்கள்.'நாமம் இதுத் தமிழரெனக் கொண்டிங்கு வாழ்தல் நன்றோ?' என்று மகாகவி துயருற்றதைப் போல.

தமிழ்நாட்டின் செகஸ் மனோபவம் இன்று பெருமை கொள்வது போல் இருக்கிறதா? இந்தியாவில் உள்ள எய்ட்ஸ் நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டோ ர் தமிழகத்தில் வசிக்கிறார்கள். எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கைக் கடந்த ஐந்தாண்டுகளில், அதற்கு முன்னிருந்த 10 ஆண்டுகளைவிடப் பலமடங்கு அதிகரித்திருக்கிறது. ஐந்து வயதுச் சிறுமியைப் பலாத்காரம் செய்த ஆசிரியர் பற்றியும், ரயிலில் உடன் பயணம் செய்து கொண்டிருந்த 60 வயதுக் கிழவியைப் பலாத்காரம் செய்த இளைஞர்கள் பற்றியும் செய்திகள் வருகின்றன. வீதி முனையில் ஈவ் டீசிங் நடக்கிறது. பெண்களைத் துரத்தி அவர்களது பால் உறுப்புக்களை வர்ணித்து இரட்டை அர்த்தத்தில் பாடல் பாடி நடிக்காத ஹீரோவே கிடையாது. எம்.ஜி.ஆரிலிருந்து சிம்பு வரை இது காலம் காலமாக நடந்து வருகிறது. இந்தப் பாடல்கள் அலுவலகங்களிலும், வீதி முனைகளிலும் கல்லூரி வாயில்களிலும் எதிரொலிக்கின்றன.
குஷ்புவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தும் தலைவர்கள், 'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போகலாமா, புள்ளை குட்டிப் பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா' என்பதைப் போன்ற பாடல்களைத் தடைசெய்யவேண்டும் என்று அறிக்கை கூடவிடவில்லை.

குறைந்த பட்சம் தனது இயக்கதில் இருப்பவர்களைக் கூட குருவி கடிச்ச கொய்யாப்பழங்களைத் தவிர்க்கும்படி அறிவுரை சொல்வதில்லை. ஒரு புறம்சினிமா ஆபாசமாகிவிட்டது என்று சொல்லிக் கொண்டே அதில் நடிக்கிறார்கள். சினிமாக்களுக்கு முக்கியத்துவம் தரும் பத்திரிகைக்களுக்கு/ தொலைக்காட்சிகளுக்கு பேட்டிகள் தரமாட்டோ ம், அதில் எழுத மாட்டோ ம் என்ற அறிவிப்பையாவது குறைந்த பட்சம் அவர்களால் வெளியிடமுடியுமா? பத்திரிகையாளர் சந்திப்பு என்றால் அவர்கள்தான் முதலில் அழைக்கப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் அவசரமாகவும் ஆக்கபூர்வமாகவும் செய்யப்பட வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. திருப்பூர் சாயக் கழிவுகள் பிரசினை ஓர் உதாரணம். கங்கை கொண்டான் கோகோ கோலா தொழிற்சாலை ஓர் உதாரணம். கிராமங்களை எட்டாத மருத்துவ வசதிகள் ஓர் உதாரணம்; நகர்ப்புற வீட்டு வசதி ஓர் உதாரணம்; கல்வி வணிகமயமாதலின் பின் விளைவுகள் ஓர் உதாரணம். இப்படிப் பல. தலைவர்கள் அவற்றில் கவனம் செலுத்தட்டும்.

அவற்றைவிட, குஷ்பு, கல்லூரி மாணவர்களின் ஆடைகள், திரைப்படத்தில் புகை பிடிக்கும் காட்சிகள் இவை முக்கியமானவை அல்ல.

அன்புடன்

மாலன்

http://www.thisaigal.com/october05/anbudanuni.html


Messages In This Thread
[No subject] - by Birundan - 10-02-2005, 11:49 AM
[No subject] - by Thala - 10-02-2005, 11:50 AM
[No subject] - by narathar - 10-02-2005, 01:20 PM
[No subject] - by Birundan - 10-02-2005, 01:38 PM
[No subject] - by Mathan - 10-03-2005, 07:54 PM
[No subject] - by kurukaalapoovan - 10-03-2005, 08:01 PM
[No subject] - by Mathan - 10-03-2005, 08:05 PM
[No subject] - by Mathan - 10-03-2005, 08:12 PM
[No subject] - by kurukaalapoovan - 10-03-2005, 08:17 PM
[No subject] - by Mathan - 10-03-2005, 08:19 PM
[No subject] - by sinnakuddy - 10-03-2005, 08:19 PM
[No subject] - by kurukaalapoovan - 10-03-2005, 08:22 PM
[No subject] - by Mathan - 10-03-2005, 08:25 PM
[No subject] - by sinnakuddy - 10-03-2005, 08:31 PM
[No subject] - by sinnakuddy - 10-03-2005, 08:35 PM
[No subject] - by kuruvikal - 10-05-2005, 05:18 AM
[No subject] - by KULAKADDAN - 10-05-2005, 05:46 PM
[No subject] - by narathar - 10-06-2005, 10:51 AM
[No subject] - by Birundan - 10-06-2005, 11:09 AM
[No subject] - by narathar - 10-06-2005, 11:15 AM
[No subject] - by Thala - 10-06-2005, 11:36 AM
[No subject] - by Birundan - 10-06-2005, 11:39 AM
[No subject] - by narathar - 10-06-2005, 11:49 AM
[No subject] - by Birundan - 10-06-2005, 11:56 AM
[No subject] - by Birundan - 10-06-2005, 11:59 AM
[No subject] - by narathar - 10-06-2005, 12:18 PM
[No subject] - by sinnakuddy - 10-06-2005, 01:16 PM
[No subject] - by இவோன் - 10-06-2005, 02:17 PM
[No subject] - by kuruvikal - 10-06-2005, 04:19 PM
[No subject] - by stalin - 10-06-2005, 06:05 PM
[No subject] - by narathar - 10-06-2005, 06:11 PM
[No subject] - by narathar - 10-06-2005, 06:16 PM
[No subject] - by kuruvikal - 10-06-2005, 07:55 PM
[No subject] - by sinnakuddy - 10-06-2005, 08:15 PM
[No subject] - by kuruvikal - 10-06-2005, 08:40 PM
[No subject] - by Thala - 10-06-2005, 11:01 PM
[No subject] - by Birundan - 10-07-2005, 12:19 AM
[No subject] - by Birundan - 10-07-2005, 12:22 AM
[No subject] - by Birundan - 10-07-2005, 12:30 AM
[No subject] - by இவோன் - 10-07-2005, 01:33 AM
[No subject] - by இவோன் - 10-07-2005, 01:53 AM
[No subject] - by இவோன் - 10-07-2005, 02:00 AM
[No subject] - by கோமதி - 10-07-2005, 02:08 AM
[No subject] - by கோமதி - 10-07-2005, 02:09 AM
[No subject] - by kuruvikal - 10-07-2005, 05:32 AM
[No subject] - by Birundan - 10-07-2005, 08:03 AM
[No subject] - by narathar - 10-07-2005, 09:07 AM
[No subject] - by வெண்ணிலா - 10-07-2005, 10:06 AM
[No subject] - by sinnakuddy - 10-07-2005, 11:23 AM
[No subject] - by இவோன் - 10-07-2005, 01:14 PM
[No subject] - by kuruvikal - 10-07-2005, 01:29 PM
[No subject] - by kuruvikal - 10-07-2005, 01:37 PM
[No subject] - by Mathuran - 10-07-2005, 01:38 PM
[No subject] - by இவோன் - 10-07-2005, 01:44 PM
8 - by narathar - 10-07-2005, 02:05 PM
[No subject] - by narathar - 10-07-2005, 02:05 PM
9. - by narathar - 10-07-2005, 02:05 PM
[No subject] - by kuruvikal - 10-07-2005, 02:14 PM
[No subject] - by narathar - 10-07-2005, 02:36 PM
[No subject] - by sinnakuddy - 10-07-2005, 03:08 PM
[No subject] - by Senthamarai - 10-07-2005, 04:23 PM
[No subject] - by kuruvikal - 10-07-2005, 05:07 PM
[No subject] - by kuruvikal - 10-07-2005, 05:10 PM
[No subject] - by sinnakuddy - 10-07-2005, 06:20 PM
[No subject] - by kuruvikal - 10-07-2005, 06:26 PM
[No subject] - by narathar - 10-07-2005, 06:39 PM
[No subject] - by kurukaalapoovan - 10-07-2005, 07:07 PM
[No subject] - by இளைஞன் - 10-07-2005, 07:23 PM
[No subject] - by kuruvikal - 10-07-2005, 08:02 PM
[No subject] - by stalin - 10-07-2005, 08:57 PM
[No subject] - by narathar - 10-07-2005, 09:02 PM
[No subject] - by kuruvikal - 10-07-2005, 09:21 PM
[No subject] - by kuruvikal - 10-07-2005, 09:36 PM
[No subject] - by சுபா - 10-07-2005, 09:42 PM
[No subject] - by stalin - 10-07-2005, 09:45 PM
[No subject] - by Birundan - 10-08-2005, 12:59 AM
[No subject] - by இவோன் - 10-08-2005, 02:59 AM
[No subject] - by இவோன் - 10-08-2005, 03:08 AM
[No subject] - by kurukaalapoovan - 10-08-2005, 03:54 AM
[No subject] - by வெண்ணிலா - 10-08-2005, 04:27 AM
[No subject] - by narathar - 10-08-2005, 08:13 AM
[No subject] - by narathar - 10-08-2005, 08:26 AM
[No subject] - by kuruvikal - 10-08-2005, 08:39 AM
[No subject] - by KULAKADDAN - 10-08-2005, 12:46 PM
[No subject] - by narathar - 10-08-2005, 12:52 PM
[No subject] - by வெண்ணிலா - 10-08-2005, 12:54 PM
[No subject] - by Thala - 10-08-2005, 03:04 PM
[No subject] - by kurukaalapoovan - 10-08-2005, 04:21 PM
[No subject] - by சுபா - 10-08-2005, 04:49 PM
[No subject] - by சுபா - 10-08-2005, 05:05 PM
[No subject] - by Thala - 10-08-2005, 05:12 PM
[No subject] - by narathar - 10-08-2005, 06:17 PM
[No subject] - by Birundan - 10-09-2005, 01:23 AM
[No subject] - by வெண்ணிலா - 10-09-2005, 02:29 AM
[No subject] - by சுபா - 10-09-2005, 05:41 PM
[No subject] - by kurukaalapoovan - 10-09-2005, 06:12 PM
[No subject] - by sinnakuddy - 10-09-2005, 07:40 PM
[No subject] - by narathar - 10-09-2005, 09:07 PM
[No subject] - by Jude - 10-09-2005, 11:54 PM
[No subject] - by வெண்ணிலா - 10-10-2005, 03:06 AM
[No subject] - by narathar - 10-10-2005, 04:50 AM
[No subject] - by kuruvikal - 10-10-2005, 05:51 AM
[No subject] - by sWEEtmICHe - 10-10-2005, 06:02 AM
[No subject] - by kurukaalapoovan - 10-10-2005, 07:12 AM
[No subject] - by kuruvikal - 10-10-2005, 07:52 AM
[No subject] - by சுபா - 10-10-2005, 08:40 AM
[No subject] - by சுபா - 10-10-2005, 08:48 AM
[No subject] - by narathar - 10-10-2005, 09:09 AM
[No subject] - by matharasi - 10-13-2005, 12:00 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)