Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சங்கடம் சட்டநாதன்
#1
<img src='http://www.mdsupport.org/images/excuselogo.jpg' border='0' alt='user posted image'>

சட்டநாதனைப்பார்த்தால் தெருவில் உள்ளவர்கள் எல்லாம் அலறி அடித்துக்கொண்டு வீட்டுக்குள் போய் கதவை மூடிக்கொள்வார்கள். அத்தனைக்கும் சட்டநாதன் ஒன்றும் பேட்டை ரவுடியில்லை. சாதாரண நடுத்தர வர்க்க மனிதன் தான். பார்த்தால் நாற்பது வயது சொல்லலாம் ஆனால் முப்பதுதான் உண்மை வயது. நல்ல வேலை. பார்த்தால் அப்பாவிபோலத்தான் இருப்பான். இருந்தும் அவனைக்கண்டால் எல்லோரும் அஞ்சி நடுங்குவார்கள். ஏன் என்று கேட்கிறீர்களா?

ஒரு தடவை சட்டநாதன் வீட்டுக்குபக்கத்து வீட்டுக்காரர் நல்லசிவம் நோய்;வாய்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு கொஞ்சம் இரத்தக்கொதிப்பு. போதாததிற்கு சர்க்கரைநோய் வேறு. இரண்டு நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து சதாரண வாட்டிற்;க்கு மாற்றி இருந்தார்கள்.

சட்டநாதன் அவரை பார்க்க மருத்துவமனை சென்றிருந்தான். ஒரு சாத்துக்குடியை கையில் கொடுத்து குணம் பெறஆண்டவனை வேண்டிக்கொள்வதாய் சொல்லி இருக்கிறான். நல்ல சிவம் இவன் அன்பில் உருகிப்போய்விட்டார். அடடா இத்தனை நல்ல மனிதனை நாம் கண்டுகொள்ளாம் விட்டுவிட்டோமே என எண்ணி பேச்சுக்கொடுத்தார். வினையை விலைகொடுத்து வாங்கிக்கொண்டார் என்றே சொல்லவேண்டும். சட்டநாதனும் பேச ஆரம்பித்தான். சின்னவயது கதைகள்தொடங்கி இன்று வரை நடந்த கதைகளை அவிழ்த்துவிட்டான். எப்போதோ நடந்த வேண்டாத சின்னச்சின்ன கதைகளை எல்லாம் எடுத்து பெரிதுபண்ணி விளக்கி சொல்லிக்கொண்டிருந்தான். முதலில் இரசித்துக்கேட்ட நல்லசிவத்திற்கு கொஞ்;சம் அலுப்புத்தட்ட ஆரம்பித்துவிட்டது. கொட்டாவி வந்தது. இருந்தாலும் சட்டநாதனின் மனம் நொந்துவிடக்கூடாது என எண்ணி வெளியே காட்டிக்கொள்ளவில்லை.

சிறிது நேரத்தில் ஒவ்வொருநேயாளியாய் பரிசோதிததபடி மருத்துவர் உள்ளேவரவும் சட்டநாதன்; மரியாதையோடு வெளியேறினான். நல்லசிவம் தப்பித்தோம் எனஎண்ணி நிம்மதிப் பெருமூச்சுவிட்டார். மருத்துவர் வெளியேறவும் சட்டநாதன் மீண்டும் உள்ளே வந்தான். நல்லசிவத்திற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கண்களை மூடி தூங்குவது போல் பாவனை செய்தார். சட்டநாதன் அவர் கைகளைத்தொட்டு வருகிறேன் என்று கூறி விடைபெற்றான். இரக்கம் கொண்டு நல்லசிவம் கண்களைத்திறந்து விடைகொடுத்தார். உடல் நிலையை நன்றாகப்பார்த்துக்கொள்ளவேண்டும் என்று அவருக்கு அறிவுரை சொல்லி சட்டநாதன் தொடர்ந்து ஒரு குட்டிப்பிரசங்கம் செய்ய ஆரம்பித்துவிட்டான். இயற்க்கை மருத்துவம் மூலிகை மருத்துவம் என்று அவன் பேசிக்கொண்டே போனான். யார் யார் ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள் என்று பெரிய பட்டியலே போட்டான். நல்லசிவத்திற்கு என்ன செய்வது என்றுதெரியவில்லை. போகிறேன் என்றவன் ஏன் இன்னும் பேசிக்கொண்டு இருக்கிறான் என்று எரிச்சலானது. ஒரு நிலையில் நீங்கள் போய்வாருங்கள் என்று விடைகொடுத்தார். சட்டநாதனும் ஆமாம் நான் போய் ஆகவேண்டும் இல்லை என்றால் பஸ்கிடைக்காது என்ற கூறி பஸ்பயணத்தில் உள்ள சங்கடங்களை எடுத்து அடிக்கிக்கொண்டே போனான். பாவம் நல்லசிவம். அவருக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. கண்களை மூடிக்கொண்டார். சட்டநாதனும் நல்லசிவம் கண்களை மூடி சுவாரசியமாக தம் பேச்சைத்தான் கேட்கிறார் என்று எண்ணி தனது பிரசங்கத்தை தொடர்ந்தான். உண்மையிலேயே நல்லசிவம் நிலை மோசமாகிவிட்டது. மருந்து மாத்திரை கொடுக்க வந்த தாதி நல்லசிவத்;தைபரிசோதித்து உடனே மருத்துவர்களை அழைக்க அவர் மீண்டும் நல்லசிவத்தை தீவிர சிகிச்சைப்பிரிவிற்கு எடுத்துச்சென்று சிகிச்கை அளித்தனர். ஒருவாறு வெளியேற்றப்பட்ட சட்டநாதன் யாரும் மாட்டமாட்டார்களா என்று ஏக்கத்துடன் நடக்க ஆரம்பித்தான்

சட்டநாதனிடம் நீங்களும் மாட்டிக்கொள்ளாதிருக்க ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Messages In This Thread
சங்கடம் சட்டநாதன் - by aathipan - 11-15-2003, 07:17 AM
[No subject] - by Ilango - 11-15-2003, 08:06 AM
[No subject] - by aathipan - 11-15-2003, 09:05 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)