Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
16 ஆண்டுகளாக புகைபிடித்த மனிதகுரங்கு
#1
சீனாவின் வடமேற்கு பகுதி யில் உள்ள சாங்சி மாகா ணத்தில் வன உயிரியல் பூங்கா உள்ளது. இந்த மிருக காட்சி சாலையில் `ஆயி' என்ற மனித குரங்கு உள்ளது.

இந்த பெண் குரங்குக்கு 27 வயது ஆகிறது. மிருகக் காட்சி சாலைக்கு வரும் பார் வையாளர்களுக்கு வேடிக்கை காட்ட இந்த குரங்கு சிகரெட் பிடித்தது. பிறகு இதுவே அந்த குரங்குக்கு பழக்கமாகி விட்டது. பார்வையாளர்கள் விட்டெறியும் சிகரெட்டை புகைத்து தள்ளியது. `செயின் ஸ்மோக்கர்' ஆகி விட்ட இந்த குரங்குக்கு சிகரெட் பழக்கத்தை விட முடியவில்லை.

16 ஆண்டுகளாக புகை பிடித்து வந்த இந்த குரங்கை புகை பழக்கத்தில் இருந்து விடுவிக்க ஊழியர்கள் அதற்கு தீவிர பயிற்சி அளித்தனர். சிறப்பு சிகிச்சையும் அளித்தனர். பார்வையாளர்கள் அதற்கு சிகரெட் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டது. சிகரெட்டை மறக்க அந்த குரங்குக்கு இசை நிகழ்ச்சிகளை காட் டினார்கள். சினிமா படம் போட்டு காட்டப்பட்டது. அடிக்கடி வெளியே கூட்டிச் சென்றனர்.

படிப்படியாக அந்த குரங்கு சிகரெட் பழக்கத்தை கை விட்டது. புகை நமக்கு பகை என் பதை அந்த குரங்கு உணர்ந்து கொண்டது. யாராவது சிகரெட்டை கொடுத்தால் திரும்ப அவர்களிடமே வீசி எறிந்து விடுகிறது அந்த குரங்கு.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
16 ஆண்டுகளாக புகைபிடித்த மனிதகுரங்கு - by SUNDHAL - 10-04-2005, 02:10 PM
[No subject] - by தூயா - 10-05-2005, 02:16 AM
[No subject] - by MUGATHTHAR - 10-05-2005, 05:08 AM
[No subject] - by தூயா - 10-05-2005, 12:15 PM
[No subject] - by SUNDHAL - 10-05-2005, 02:44 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)