10-04-2005, 07:53 AM
சம்பூரில் புலிகளின் விமான ஓடுபாதை: சிங்கள ஊடகம் தகவல்
[திங்கட்கிழமை, 3 ஒக்ரொபர் 2005, 15:43 ஈழம்] [கொழும்பிலிருந்து தி.இராஜேஸ்வரி]
திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் விமான ஓடுபாதையொன்றை அமைத்திருப்பதாக பாதுகாப்புத் தரப்பிற்குத் தகவல் கிடைத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி:
ஆழிப்பேரலை நிவாரணப் பணியை பயன்படுத்தி இதற்குத் தேவையான பொருட்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து எதுவித தடையுமின்றி கொண்டு செல்லப்படுகிறது. இதில் சில அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் தொடர்புள்ளன.
ஒரு கிலோ மீற்றர் நீளமும் 500 மீற்றர் அகலமும் உடைய இந்த ஓடுபாதையில் எச் வடிவில் அமைக்கப்பட்ட இரு உலங்குவானூர்த்தி தரிப்பிடங்களும் உள்ளன. இவற்றின் பாதுகாப்பிற்கென பல பங்கர்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த விமான ஓடுபாதையின் பாதுகாப்பிற்கென 100 தாக்குதல் உறுப்பினர்களைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த விமான ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ள பகுதி விடுதலைப் புலிகளின் அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்தப் பிரதேசத்திற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்மைய காலங்களில் வடக்கிலிருந்து கடல் மார்க்கமாக தாக்குதல் விமானத்தின் பாகங்கள் சம்பூர் பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்டு சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது.
எதிர்காலத்தில் யுத்த சூழ்நிலையொன்று ஏற்படுமானால் இந்த சம்பூர் விமான ஓடுபாதையானது திருகோணமலை கடற்படை முகாம், துறைமுகம் மற்றும் ஏனைய பாதுகாப்பு தளங்களுக்கு அச்சுறுத்தலாக அமையக் கூடும் என பாதுகாப்புத்தரப்புத் தகவல்கள் தெரிவிப்பதாக அந்தப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி புதினம்

" "