10-03-2005, 07:11 PM
நடை பாதை ஓவியன்
கோவர்த்தன மலையை
குடையென ஆக்கி
மக்களைக் காக்கும்
கண்ணனை
வயிற்றுப் பசியுடன்
வரைந்து முடிந்து
நிமிர்ந்து பார்க்க
வந்தது மழை.
குடையுடன்
கடவுள்
அழிந்து கொண்டிருந்தார்
மாற்றங்கள்
பிரகாரம் நுளைந்தவுடன்
கனியாகி விடுகிறது
எழுமிச்சை..
தீர்தமாகி விடுகிறது
தண்ணீர்..
பிரசாதமாகி விடுகிறது
திரு நீரும் பொட்டும்..
எந்த மாற்றமுமின்றி
வெளியேறுகிறான்
பக்தன்
கோவர்த்தன மலையை
குடையென ஆக்கி
மக்களைக் காக்கும்
கண்ணனை
வயிற்றுப் பசியுடன்
வரைந்து முடிந்து
நிமிர்ந்து பார்க்க
வந்தது மழை.
குடையுடன்
கடவுள்
அழிந்து கொண்டிருந்தார்
மாற்றங்கள்
பிரகாரம் நுளைந்தவுடன்
கனியாகி விடுகிறது
எழுமிச்சை..
தீர்தமாகி விடுகிறது
தண்ணீர்..
பிரசாதமாகி விடுகிறது
திரு நீரும் பொட்டும்..
எந்த மாற்றமுமின்றி
வெளியேறுகிறான்
பக்தன்
....

